Thursday, December 1, 2016



avargal unmaigal
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

விற்பனைதுறையில் வேலை பார்ப்பதால் அது சம்பந்தமாக ஒரு கான்பிரன்ஸிற்காக அருகில் உள்ள வேறு மாநிலத்திற்கு இரண்டுநாள் செல்ல வேண்டியிருந்தது.அந்த மாநிலத்தில் பீச்சிற்கு அருகே ரூம் எடுத்து தங்கி அருகில் இருந்த கான்பரன்ஸ் ஹாலிற்கு சென்று மீட்டிங்க முடிந்தது அப்படியே காலாற கடற்கரை மணலில் நடந்துவிட்டு ஷு வை கழற்றி அலைகளுக்கிடையே காலை நனைத்து  அப்படியே பொழுது சாயும் மாலை நேரத்தை ரசித்துவிட்டு  மீண்டும் கடற்கரை மணலில் அமர்ந்து ஷு வை போட்டு தலை நிமர்ந்தால்  ஒரு அழகிய பாதம் கண்ணில் தென்பட்டது அதைப் பார்த்ததும் முத்தமிடுவதற்காகவே இந்த பாதங்கள் படைக்கப்பட்டனேவோ என்று மனது நினைத்தது


அதன் பின் பாதத்தில் இருந்த கண்கள் சற்று மேலே சென்றது அந்த அழகிய கால்களும் தொடைகளும் வாழைத்தண்டை போல பளபள என மின்னின அதனை பார்த்த நொடியில் மனது நிலை குழைந்து போனது அதன் பின் சற்று சமாளித்து எழுந்த பின் சிறு வயதில் படித்த கவிதையின் சில வரிகளான வாழைத்தொடையிலே நான் வசமிழந்த வேளையிலே ஒரு ஏழை போல தோன்றிடுவேனே என்ற கவிதையின் வரிகளை மனது முணுமுணுத்தது அதே வேளையில் மனதும் படபடத்தது..


மனது படபடக்கும் போது மைண்ட வாய்ஸ் அடே மனசை கட்டுபடுத்து என்று  சொன்னது சரி மைண்ட் வாய்ஸ் சொன்னபடி கட்டுபடுத்தி கொண்டு  தொடையில் நின்று கொண்டிருந்த கண்கள் மிக வேகமாக உயர்ந்து அவளது முகத்திற்கு சென்றது அதன் பின் மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க தொடங்கியது  காரணம் செதுக்கி வைத்தது போல கூரான மூக்கும் திராட்டை பழம் போன்ற கண்களும் மெல்லிய இளம்  சிவப்பு உதடுகளும் அந்த உதடுகளுக்கிடையே முத்துகளை கோர்த்து வைத்தார் போன்ற பற்களும் மின்னின.ஹும் என்று பெரும் மூச்சு விட்டாவாறு அவளை பார்த்து ஹாய் என்று சொன்னேன் அவளும் ஹாய் ஹவ் ஆர் யூ என்று பதிலுக்கு கேட்டாள் பதிலுக்கு ஐ ஆம் பைன் என்று சொல்லிவிட்டு கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். இந்தியாவாக இருந்தால் அவள் என்ன நினைத்தால் நமக்கு என்ன என்று அவளை தொடர்ந்து உற்று நோக்கி கொண்டே இருக்கலாம் ஆனால் அமெரிக்க மண் கற்று தந்த பாடத்தால் வேறு பக்கம் நோக்க வேண்டியாதாயிற்று.


அப்படி வேறு பக்கம் பார்த்தால் அங்கே ஒரு இந்திய பெண்மணி நின்று கொண்டிருந்தார் அவர் மீது நம் பார்வை பட்டதும் வெடுக்கென தன் தலையை வேறு பக்கம் திருப்பி கொண்டார் அப்படி திரும்பிய பெண்மணி மீண்டும் நம் பக்கம் திரும்பி நான் அவரை பார்த்து கொண்டிருக்கிறோமோ என்று  திரும்பி பார்பதற்குள் அந்த இடத்தை விட்டு அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்த பாரில் உட்கார்ந்து வழக்கமாக எனக்கு பிடித்த ரம்மை வாங்கி ரம்மியமாக அருந்தி கொண்டிருந்தேன். அப்போது எனது இடது புறம் உள்ள பார் சேரில் யாரோ வந்து அமர்வது போல இருந்தது சரி யாரென்று பார்ப்போம் என்று நினைத்து திரும்பினால் பீச்சில் பார்த்த அந்த அழகு தேவைதான் மீண்டும் என் அருகில் வந்தது. உடனே அவளுக்கு ஹாய் சொல்லிவிட்டு என்ன  என்னை பாலோ செய்கிறாயா என்று கேட்டவுடன் ஹாஹாஹா என்று சிரித்து யூ ஆர் ஃப்ண்ணி என்றாள்.

அப்படிய்யே ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு பேசிய போதுதான் தெரிந்தது அவளும் நான் கலந்து கொள்ளும் மீட்டிங்கிற்கு வந்தவள் என்று அது போதாதா நாம் கடலை போடுவதற்கு சரக்கில் ஆரம்பித்த உறவு  சேர்ந்து உணவு சாப்பிடவும் செய்தது.. சாப்பிட்டபின் அப்படியே கடற்கரையோரமாக வாக்கிங்க் செல்லாமா என்றேன் அவளும் அதற்கு உடன்பட்டு இருவரும்  நடந்துசென்றோம்.


இப்போது எங்கள் இருவருக்கும் இருந்த நெருக்கம் மிக அதிகரித்து இருந்தது.. அந்த நெருக்கம் இறுதியில் என் படுக்கைக்கு அழைத்து சென்றது அதன் பின் படுக்கையில் அவளை அணைத்து கொண்டு லைட்டை அணைத்த போது  டாடி எழுந்திருங்க எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகிவிடும் என்று சொல்லி அதிகாலையில் என் பெண் என் ரூம் லைட்டை ஆன் செய்த போதுதான் புரிந்தது இதுவரை நடந்தது கனவுதான் என்று...ஹும்ம்ம்ம்ம்

அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள் அது உண்மையாய் இல்லையா என்பதை கூடிய சீக்கிரம் சொல்லுகிறேன்

ஆமாம் இப்ப எதற்கு இந்த பதிவு என்கிறீர்களா? எங்கள் ப்ளாக்கை சார்ந்த ஸ்ரீராம் சமீபத்தில் தான் கண்ட கனவுகளைப்பற்றி பதிவு எழுதி இருந்தார். ஆனால் அதில் பல இன்பக்கனவுகளை மறைத்து பதிவிட்டிருக்கிறார் அதை பற்றி கேட்டதற்கு வீட்டாமாவிற்கு பயந்துதான் தான் அதை பற்றி எழுதவில்லை என்று சொன்னார். சரி அவர் சொல்லவில்லை என்றால் நமக்கு இன்பக்கனனவுகள் பலதான் வருகிறதே அதனால் அதில் ஒன்றை எடுத்து வெளியிடலாம் என்று நினைத்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறேன்

டிஸ்கி :  அவர் பதிவிட்ட அடுத்த சிலநாட்களில்  எழுதியது ஆனால் மோடியினால் இந்த பதிவு வெளியிட தாமதம் ஆகிவிட்டது


அன்புடன்
மதுரைத்தமிழன்.
01 Dec 2016

6 comments:

  1. ஹா...ஹா...
    நான் அந்தத் தேவதை அழகான குழந்தையோன்னு நினைச்சி வாசிச்சா... கதை வித்தியாசமாக போக, இறுதியில் முடிவு நச், அதுசரி எதுக்கு ஸ்ரீராம் அண்ணாவை மாட்டிவிட்டீங்க... மோடியால பணம் எடுக்கிறதுதான் பிரச்சினையின்னா பதிவு போடுறதுக்குமா...?

    வாரத்துக்கு ரெண்டு பதிவுதான் போடணும்ன்னு சட்டம் வருமோ?

    ReplyDelete
    Replies
    1. குமார் வாரத்துக்கு ரெண்டு பதிவுதானா...ஹப்பா நல்ல யோசனைதான் வாசிக்க வசதியாக இருக்கும்தான்...

      Delete
  2. வாரத்துக்கு ரெண்டு பதிவுதான்! :) யோசனை சொல்லிட்டீங்களே குமார்!

    ரசித்தேன்.

    ReplyDelete
  3. இனி பூரிக்கட்டை எல்லாம் சரிப்படாது... உங்க ஹவுஸ் பாஸ் கிட்ட பேசிக்கறேன்..........

    ReplyDelete
  4. ஹஹஹஹஹஹ் தமிழன் செம ஃபார்ம் போல மோடியிலிருந்துச் சாடி எங்கோ..ம்ம்ம் சரி இத ஒரு காப்பி போட்டு சகோதரிக்குப் பார்சல் போயிருக்கும்னு நினைக்கிறோம்.... ஸோ அடுத்த பதிவு பூரிக்கட்டை பதிவுதான்...சரி இப்ப எங்கருக்கீங்க வீட்டுலதானே!!!!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.