Sunday, November 2, 2014


பதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்.



எனது முந்தைய பதிவில் எழில் அவர்களின் கருத்துக்கு பதில் கருத்து போட்ட நான் அதில்1000 முதல் 2000 பேரு நிச்சயம் இந்த பதிவை படிக்க வருவாங்க என்று சொல்லி இருந்தேன்.


இதை பார்த்த தருமி அவர்கள் இந்த காலத்திலும் இவ்வளவு பேரு பதிவு படிக்க வலைத்தளம் வர்ராங்களா என்று கேட்டு இருந்தார்.



அதற்கான பதில்தான் இந்த பதிவு.



தருமி சார் எல்லோரும் பேஸ்புக் வரவால் வலைத்தளத்திற்கு வருகை தருபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அதில் அதிக உண்மை இல்லை என்றே சொல்லுவேன் எனது தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை பதிவில் நான் சொல்லும் விஷயங்களை பொருத்து அதிகரித்தோ அல்லது குறைவாகவோ வரும் . சராசரியாக எனது அனைத்து பதிவுகளும் குறைந்தது 1000 லிருந்து 2000 வரை நிச்சயம் ஹிட் அடிக்கிறது. உதாரணமாக கடந்த மாதத்தில் மிக குறைவாக 15 பதிவுகள் மட்டுமே போட்டுள்ளேன் அதிலும் எதுவும் அதிக பரபரப்பு இல்லாத பதிவுகள்தான் அதற்கு கடந்த மாதம் நான் பெற்ற ஹிட்டுக்கள் 42,713 இது நான் தரும் புள்ளி விபரம் அல்ல. கலைஞர் எம்ஜியாருக்கு தந்த போலி கணக்குகள் அல்ல. ப்ளாக்க்ர் தளம் தரும் ஹிட் கணக்குகள்.


நேற்று எனக்கு கிடைத்த ஹிட்டுக்கள் 3402 அதிலும் நான் போட்ட பதிவுக்கு கிடைத்த பேஜ்வ்யூ மட்டும் 1778.


இது அதற்கான ஸ்கிரின் ஷாட் உங்களுக்காக.







எனது முந்தைய பதிவுகளுக்கான(POST) பேஜ்வ்யூ ஸ்கிரின் ஷாட் சில


அதிலும் நான் ஆகஸ்டில் 2014 போட்ட மூன்று பதிவுகள் மட்டும் ஒவ்வொன்றும் 26,003, 30,994, 52,657 ஆயிரம் வரை பேஜ்வ்யூ கிடைத்திருக்கிறது.


அதற்கான ஸ்கீரின் ஷாட்டுக்கள் இங்கே அதற்கான வீடியோ இணைப்பும் கொடுத்துள்ளேன்.




              

உங்கள் கேள்விக்கான பதிலை பதிவாக போட காரணம் பல பதிவர்கள் வலைத்தளத்திற்கு எல்லாம் ஆட்கள் வருவது குறைவு என்று நினைத்து மனம் சோர்ந்து போகிறார்கள் அப்படி அவர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவே இதை வெளியிட்டு இருக்கிறேன் எனது எந்த பதிவும் தமிழ்மணத்த்தில் பலநண்பர்கள் குழுவாக சேர்ந்து ஒட்டு போட்டு முதலிடம் வந்தது அல்ல.


எனது வலைதளம்மட்டும் இப்படி ஹிட்டுக்கள் பெறுகிறது என்று சொல்ல வரவில்லை. பிரபலமாகாத எனது தளமே இப்படி ஹிட்டுக்கள் பெரும் போது பிரபல பதிவர்கள் போடும் பதிவுகள் எவ்வளவு ஹிட்டுக்கள் பெறும்.


அதனால் சொல்லுகிறேன் மனம் தளராமல் சுயமாக தொடரந்து எழுதிவந்தால் உங்கள் பதிவுகள் பலரையும் பல நாடுகளையும் சென்று அடையும் என்பது நிச்சயம்



அன்புடன்
மதுரைத்தமிழன்


28 comments:

  1. ரஜினி ஒரு படத்துல “உண்மைய சொன்னேன்“ என்று சொல்லும்போது திரையரங்கம் அதிருமே அது நினைவிலாடு இந்தப் பதிவைப் படித்ததும். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே இனிமை உண்டாம்“ எனபான் நம் பாட்டுப் பாட்டன் பாரதி. உண்மைத தமிழன் வெல்லமாட்டானா என்ன? உங்கள் பதிவுகளின் வாசகப்பரப்பு பெருமையளிப்பதாக உள்ளது.சும்மா வழவழவென்று எழுதாமல், சுருக்-நறுக் என்று உண்மையை உரத்தகுரலில், கிண்டல் தொனியில் சொல்லும் உங்கள் பதிவுகள் வாசகர் மனத்தைக் கொள்ளையிடுவதில் என்ன சந்தேகம்? தொடருங்கள் நண்பா! தொடர்வோம் நாங்களும். வலையுலகில் உண்மையொளி வீசி, குப்பைகளை அகற்ற இதுவே வழி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி முத்துநிலவன். மிகப் பிரபலமான நீங்கள் என்னை பாராட்டுவதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      அப்புறம் ஒரு சிறு திருத்தம் நான் மதுரைத்தமிழன் உண்மைதமிழன் அல்ல.. உண்மைதமிழன் என்பவர் வேறு ஒருத்தர் அவர் வலைப்பதிவில் எனக்கு முன்னோடி சினிமாத்துறையை சார்ந்தவர் அவர்

      Delete
    2. நான் செய்த பிழையை உங்கள் பெருந்தன்மையான -அவர் எனக்கு முன்னோடி“ என்னும் தொடரால் வென்றுவிட்டீர்கள் மதுரைத் தமிழரே! “பணியுமாம் என்றும் பெருமை“ குறள்தான்... . விஜய் தொலைக்காட்சியில் இன்று மறு ஒளிபரப்பாக வந்த “கமல்-50“ பார்த்தீர்களா? பெரியவர்கள் எப்போதுமே ஈகோ வைத்துக் கொள்வதில்லை தானே? உங்கள் பங்களிப்பில் 20விழுக்காடு கூட வலைப்பக்கத்தில் செய்து விடாத என்னையும் உயர்த்துவதன் மூலம், நீங்கள் உண்மையால் உயர்ந்தவர் என்பதை மீண்டும் காட்டுகிறீர்கள்.நன்றி. உண்மைத் தமிழன் வெற்றியை என் தளத்தில் எடுத்து இடலாமா? உங்கள் பதிவின் கடைசி 2வரிகளுக்காக..

      Delete
    3. என்ன என்னிடம் அனுமதியா ? தாராளமாக எடுத்து கொள்ளுங்கள்

      Delete
  2. நீங்க ஒரு புள்ளி விவரப் புலி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ இதை என் கணக்கு வாத்த்தியார் கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்,

      Delete
  3. சந்தோஷமளிக்கும் அருமையான தகவல்
    ஆதாரத்துடன் விளக்கியவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக சிறந்த கவிஞரும் லையன் கிளப் தலைவரும் ஏன் மிக சிறந்த பண்பாளருமான நீங்கள் என்னை வாழ்த்துவது மிக சந்தோஷம் அளிக்கிறது. நன்றிகள் சார்

      Delete
  4. நிச்சயமாகத் தமிழா, ஃபேஸ்புக் வலைத்தள வாசகர்களைக் குறைத்துவிடவில்லை என்பதுதான் உண்மை. நம் பதிவுகள் எப்படி உள்ளதோ அதற்கேற்றார் போல் சைலன்ட் ரீடர்ஸ் இருக்கின்றார்கள் என்பது உண்மையே!. இந்தத் தகவல் சந்தோஷம் மட்டுமல்ல, ஒரு நம்பிக்கையூட்டும் தகவல் தமிழா! னீங்கள் சொல்லி இருபப்து போல் நாம் சோர்வடையாமல் பதிவு இட வேண்டும்.

    தங்களது பதிவுகளை நாங்கள் எல்லோரும் ரசித்துப் படிப்பது போல் இந்த உலகமே அதை விரும்பி படிப்பது சந்தேகமே இல்லை!!!! தங்கள் எழுத்து அப்படிப்பட்டது தமிழா! என்ன இப்படிச் சொல்கின்றீர்கள் பிரபலம் அடையவில்லை என்று! இது ஒன்றே உங்கள் பிரபலத்திற்குச் சாட்சிதானே!

    தொடருங்கள் தமிழா! ஹிட் அடிக்க!!!!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்கல்லூரி தோழரே எனக்கு சைட் அடித்துதான் பழக்கம் ஹிட் அடித்து அல்ல அதனால்தான் என்னவோ என் மனைவி பூரிக்கட்டையால் ஹிட் அடிக்கிறாள்..

      வாழ்த்துக்கு நன்றி தோழா

      Delete
  5. தனி நபர் வலைப் பதிவில் அதிக பார்வையாளர்களைக் கொண்டது அவர்கள் உண்மைகள் . சினிமா பதிவுகள் இன்றி இந்த அளவு வாசகர்களைப் பெற்றிருப்பது சாதாரணமானது அல்ல.அரசியல் மற்றும் நகைச்சுவை இவற்றை வித்தியாசமான முறையில் அளிப்பதும் தொடர்ந்து சோம்பலின்றி பதிவிடுவதும் தங்களின் வெற்றிக்குக் காரணம்.
    உண்மையில் வலைப்பூ எழுதுபவர்கள் மற்றவற்றிற்கு செல்ல காரணம், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தீவிரமாக பதிவுகள் எழுதிவிட்டு அதற்குப்பின் பதிவுக்கான content களை சிந்திப்பதில் ஏற்படும் சோம்பல் காரணமாக தீவர சிந்தனை தேவைப்படாத முகநூல் பக்கம் சென்று விடுகிறார்கள்.தாங்கள் சென்றதும் வலைப்பூவே வழக்கொழிந்து போனது என்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள். தற்போது முகநூலையும் தொய்வுக்கு உள்ளாக்கிவிட்டது வாட்ஸ் அப். வலைப்பூவிற்கும் புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் நையாண்டிகள் திறம்பட எழுதுபவருக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அது ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் கைவரப் பெறுவதில்லை
    மதுரைத் தமிழனுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. //உண்மையில் வலைப்பூ எழுதுபவர்கள் மற்றவற்றிற்கு செல்ல காரணம், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தீவிரமாக பதிவுகள் எழுதிவிட்டு அதற்குப்பின் பதிவுக்கான content களை சிந்திப்பதில் ஏற்படும் சோம்பல் காரணமாக தீவர சிந்தனை தேவைப்படாத முகநூல் பக்கம் சென்று விடுகிறார்கள்.தாங்கள் சென்றதும் வலைப்பூவே வழக்கொழிந்து போனது என்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள். தற்போது முகநூலையும் தொய்வுக்கு உள்ளாக்கிவிட்டது வாட்ஸ் அப். வலைப்பூவிற்கும் புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். ///

      நீங்கள் சொன்னது மிக மிக உண்மை..மிக சரியாக கணித்து சொல்லி இருக்கீங்க முரளி.பாராட்டுக்கள்

      உங்களின் வாழ்த்துக்களுக்கு எனது நன்றி.. ஆசிரியர்களின் கையால் வாழ்த்து பெறுவது சந்தோஷம் அளிக்கிறது, நன்றி

      Delete
    2. முரளி சொன்னது முற்றிலும் உண்மை. ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை சிறியதாக என் பதிவில் வெளியிட்டு வலைத்தமிழுக்கு இணைப்பு கொடுத்த போது ஒவ்வொரு பதிவும் ஆயிரம் பேர்கள் படிக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் தான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். தரமான பொழுபோக்கான தொழில்நுட்பம் சார்ந்த என்று ஒவ்வொன்றும் தனித்தனி வாசகர் வட்டம் உண்டு.

      Delete
    3. ஜோதிஜி உங்களின் அந்த பதிவை பார்த்தேன் ஆரம்பமே எனக்கு பிடித்தமாதிரி வந்டு இருந்தது அதை துண்டு துண்டாக படிக்க விருப்பம் இல்லாததால் அந்த தொடர் முடிந்ததும் சேர்த்து வைத்து ஒன்றாக படிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்

      Delete
  6. பாராட்டுகள். ஆதார பூர்வமாக விளக்கி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி... இப்படி நான் விளக்கியதற்கு 2 காரணங்கள் ஒன்று புதிதாக எழுத வருபவர்கள் சில பதிவுகள் எழுதியதும் சோர்ந்து போகிறார்கள் அவர்கள் தொடர்ந்து எழுதினால் அனைவரின் பார்வை கிடைக்கும்

      இரண்டாவதாக நான் வீடியோ க்ளிப் போட்டு இருப்பதன் காரணம் இப்படி நான் எழுதிய முந்தைய பதிவில் படத்துடன் விளக்கம் கொடுத்து இருந்தேன் அதைப்படித்த ஒரு பெண் பதிவர் இதை எப்படி நம்புவது நீங்கள் கிராபிக்ஸில் நீங்கள் அதிக ஹிட் வாங்கிய மாதிரி பண்ணி அதை போட்டிருப்பீர்கள் என்று கேட்டு இருந்தார். அதனால்தான் வீடியோ க்ளிப் மூலம் ஆதாரம் காட்டி இருக்கிறேன்

      இதைப் பார்த்தது அவர் என்ன சொல்லப் போகிறாரோ?

      Delete
  7. தமிழ் பதிவு உலகின் முடிசூடா மன்னர் நீங்கள்தான் தலைவா ! வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பகவான் ஜீ என்னை முடிசூடா மன்னன் ஆக்கி என்னை கவுத்துவிட வேண்டாம். நான் மன்னனாக ஆக விரும்பவில்லை உங்களின் சேவகன் ஆக இருக்கிறேன்... நீங்கள் மதுரையின் மன்னர்
      மட்டுமல்ல தமிழ்மணத்தின் முடி சூடா மன்னராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மன்னரே

      Delete
  8. மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே! சுவையாக எழுதினால் வலைப்பூக்களிலும் நிறைய பக்க பார்வைகள் பெறலாம் என்பது மிகவும் உண்மை! பலரை ஈர்க்கும் செய்திகளை சுவாரஸ்யமாக நம் நடையில் எழுதுவதில்தான் சூட்சுமம் இருக்கிறது! வாசகரின் நாடித்துடிப்பை மிகச்சரியாக புரிந்து சிறப்பான பதிவுகளை தந்து தொடர்ந்து முதலிடத்தில் வர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முதலிடம் எல்லாம் வேண்டாங்க இந்த இடமே போதுமுங்க...பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி மிடிலில்தான் நமது இடம் அதுதான் பாதுகாப்பு

      Delete
  9. அடேங்கப்பா.. என்ன தமிழா... பல்லாயிர கணக்கில் வாசகர்களை வைத்து கொண்டு இவ்வளவு தாழ்மையோடு இருக்க? என்னுடைய பதிவை பொதுவாக 700-1000 பேர் படிகின்றார்கள் என்பதை பார்த்து கொண்டு நான் இங்கே பாரதி ராஜா பாணியில் வெள்ளை உடையில் அல்லவா கனவில் மிதந்து கொண்டு இருந்தேன். நல்ல உற்சாகம் தரும் செய்தி. தொடர்ந்து எழுதுங்கள். பகவான் ஜி... முதலிடம்.. நீங்கள் மற்றும் அண்ணன் பரச்தேசின் அவர்கள் மிடில், நான் எனக்கு பிடித்த கடைசி பெஞ்சில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொள்கிறேன். உங்கள் யாருக்கும் ஆட்சேபனை இல்லாவிடில்.

    ReplyDelete
  10. இவ்வளவு மக்கள் படிக்கவருவார்கள் என்பதை உங்கள் பதிவின் மூலம்பார்க்கும் போது தான் தெரிகிறது. எங்களைப் போன்று வரஆரம்பித்திருக்கும்புதிய பதிவர்களுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ஒம் சாய் ராம்
    உமையாள் காயத்ரி.

    ReplyDelete
  11. அம்மாடியோவ் இம்புட்டுபேரா ரொம்ப கில்லாடி தான் போங்க. மிக்க மகிழ்ச்சி
    இவை இன்னும் பல்கிப் பெருக வாழ்த்துக்கள் சகோ ...!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சகோதரா....

    ReplyDelete
  13. இன்னும் பல ஹிட்சு கிடைக்க வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் நண்பரே...

    எனது பதிவுகள் எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்று எப்போதாவது பார்ப்பதுண்டு. இக்கருத்து எழுதும்போது பார்த்ததில் இதுவரை எழுதிய 780 பதிவுகளில் ஆயிரத்துக்கு மேலான பக்கப்பார்வைகளை பெற்றது நான்கே நான்கு பதிவுகள் மட்டுமே...... :)))

    பொதுவாக 400-500 பேர் தான் எனது பதிவுகளைப் படிக்கிறார்கள்...

    ஸ்வாரசியமான விஷயங்கள் எனது தளத்தில் இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம்!

    ஆனாலும் எனது பதிவுகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்ற சிலருக்காகவும், எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதுவேன்!

    மேலும் பல பதிவுகளை எழுதிட உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் தமிழரே.....

    (உங்களின் இந்தப் பதிவைப் படித்த போது எனக்கு பொறாமையாக இருந்தது..... ம்ம்ம்...... சுற்றிப் போடுங்கள் தோழரே....)

    ReplyDelete
  16. http://dharumi.blogspot.in/2014/11/799.html

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.