Sunday, July 17, 2011

கருணாநிதி மாமல்லபுரத்திற்கு  தனியாக சென்று   சந்தித்த மர்ம நபர் யார்?

தோல்விகளும் பிரச்சனைகளும் சூழ்ந்திருக்கும் சமயத்தில் தி.மு.., தலைவர் கருணாநிதி, தனியே  மாமல்லபுரத்தில் ஓய்வெடுக்கச் சென்ற செய்தி  ஊடகங்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .  அவருடன், அவரது உதவியாளர் சண்முகநாதன் மட்டும் சென்றார். வழக்கமாக அவர் மாமல்லபுரம் செல்லும் போது, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உட்பட யாரேனும் செல்வர்கள் ஆனால்  இப்போது யாரும் செல்லவில்லை.ரிசார்ட் ஹோட்டலில் ஓய்வெடுத்து விட்டு, மாலை 5.45 மணிக்கு சென்னை திரும்பினார்.வழக்கமாக முக்கியப் பிரச்னையின் போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசிக்க கருணாநிதி, மாமல்லபுரம் செல்வது வழக்கம். இன்று தனியே சென்றது ஏன்  என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.

அவர் தனியே சென்றது ஏன் என்பதுதான் இப்போது எல்லோர் மனதில் எழுந்திருக்கும் கேள்வி? 

அதே கேள்வி என் மனதிலும் எழுந்தது..அதன் விளைவாக நான் இணையத்தில் வலம் வந்து  செய்திகளை ஆராய்ந்து பார்த்த போது என் மனதில் பளீரென்று ஒரு விஷயம் தோன்றியது, அதன் மூலம் கலைஞர் தனியாக போய் ரெஸ்ட் எடுத்தாக ஒரு செய்தியை பரப்பிவிட்டு புகழ் பெற்ற ஒருவரை தனியாக சந்திக்க சென்று இருப்பார் என்று என் மனம் சொல்லியது.

அவர் சந்தித்தது வேறும் யாரும் இல்லை சிகிச்சை முடிந்து திரும்பிய நமது சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்க முடியும் என்பது எனது யூகம். இந்த சந்திப்பை மறைமுக நடத்தியதற்கு காரணம் இப்போது ஜெயலலிதா அம்மையாரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற சூப்பர் ஸ்டாரின் விருப்பத்திற்கு ஏற்ப கலைஞர் நடத்திய நாடகம் தான் இந்த தனிமை நாடகம்.( சிகிச்சை முடிந்து ரஜினி சென்னை திரும்பிய  நாள் ஜுலை 14 கலைஞர் தனிமை தேடி சென்றநாள் ஜுலை 15, சூப்பர் ஸ்டாருக்கும் மாமல்லபுரத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக உளவு போலிசாரின் கண்ணில் மண்ணைத்தூவி தனது பண்ணை வீட்டுக்கு போவது மாதிரி கலைஞர் இருந்த ரிசார்ட் சென்று இருக்கலாம் என்று  யூகிக்கிறேன்)

மற்றவர்களுடன் சேர்ந்து சென்றால் எப்படியாவது விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் இது மறைமுகமாக நடத்தப்பட்டிருக்கலாம் என்பது எனது யூகம்.

இது ஒரு யூகச் செய்தியே ஆனால் நிஜமாக இருக்க கூடிய வாய்ப்பும் இருக்கிறது.  அதற்கு  கலைஞரோ அல்லது காலம்தான் பதில் சொல்ல முடியும்.

படிக்காதவர்கள்        
படிக்க :

17 Jul 2011

2 comments:

  1. யாரோ யாரையோ சந்திச்சதுக்கு நீங்க உளவு துறை ரேஞ்ச்க்கும்,சி ஐ டி ரேஞ்சுக்கு யோசிச்சதும் ஒவரா இருந்தாலும் யூகத்திற்கு பாராட்டுக்கள்....


    எப்டி தான் யோசிக்கிறாங்களோ? தெரியல ;)

    ReplyDelete
  2. ரஜினி கருணாநிதி அமர்ந்திருக்கும் போட்டாவில் உள்ள கமெண்ட் மிக அருமை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.