Thursday, March 17, 2011

விஜயகாந்தை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்! வெற்றியா ? தோல்வியா?

அதிமுக, ஜெயலலிதாவுக்கும் இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுக, கருணாநிதியும் மட்டுமே. இவர்கள் நிர ந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவின் அஸ்திவாரதையே ஆட்டிவிட்ட நேற்று பெய்த மழையில் இன்று முளைத்து வந்த மிகப் பெரிய முக்கிய எதிரி விஜயகாந்த் & தேமுதிக.

தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது அதிமுக மட்டுமே. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் கடித்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான் அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டார் விஜயகாந்த்

முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக வந்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, விழ வைக்க வேண்டும் என்பதும். அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக அரசியல் அறிந்தவர்கள் கருதுகிறார்கள்

தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைத்து எதிர்ப்பது.அதனால் மிக சமர்த்தியமாக பிளான் பண்ணி விஜயகாந்தை உள்ளே இழுத்து விட்டார் அதே நேரத்தில் தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அல்லது வெளியேறி யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் , விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு மீண்டும் இருக்காது என்பதும் ஜெயலலிதா மற்றும் அவரது பத்திரிக்கை நண்பரின் கருத்தாகும்

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மற்ற கட்சியினர்களையும் தாமதிக்க வைத்து காங்கிரஸுடன் சேர்ந்து முன்றாம் கூட்டணி அமைத்துவிடாமல் காலம் தாழ்த்தி தவிக்கவிட்டு எல்லோருக்கும் ஒரு ஆப் வைத்து விட்டு ஆணவம் அழிவுக்கு கேடு என்பதைப் பற்றி கவலைப்பாடாமல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார்.

இந்த தேர்தலில் காலியாகப் போவது ஜெயலலிதாவா இல்லை விஜயகாந்தா என்பதுற்றி மக்களின் மாஸ்டர் ப்ளான் வெகு விரைவில்...

Note : கலைஞருக்கு உள்ள ஒரே பிரச்சனை ஸ்பெக்ட்ரம் மட்டும்தான் ஆனால் அவர் அதை இலவசம் என்ற திட்டத்தால் மறைத்து மீண்டும் வென்று வீடுவாரோ என்பது எனது எண்ணமாக இருக்கிறது.

இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிவிட்டு போங்களேன்......

7 comments:

  1. ungaluku nalla karpanai vallam ullathu

    ReplyDelete
  2. நான் அப்படி நினைக்கவில்லை. விஜயகாந்த் வெளியேறினால் ஜெக்கு தோல்விதான் என்பதை அனைவரும் அறிவர்.

    ஜெ வலிய தோல்வியை வரவேற்க மாட்டார். அப்படி இருந்தால் 41 சீட் தரவேண்டியதில்லையே..

    சசி குரூப்பை ஒதுக்காவிட்டால் ஜெ பெயர் நிச்சயம் ரிப்பேர்தான்...

    ReplyDelete
  3. இந்த தேர்தலில் காலியாகப் போவது ஜெயலலிதாவா இல்லை விஜயகாந்தா

    சரியான கேள்விதான்



    இதையும் படிச்சி பாருங்க
    எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

    ReplyDelete
  4. @சண்முக குமார் வருகைக்கு நன்றி உங்கள் தளத்திற்கு சென்று படிக்கிறேன்

    ReplyDelete
  5. @தமிழர்களின் சிந்தனை களம். வருகைக்கும் கமெண்ட்ஸுக்கும் நன்றி

    ReplyDelete
  6. @நிகழ்காலம் சசி இல்லையென்றால் ஜெ அவர்கள்தான் நிரந்தர முதல்வர். ஓவ்வொருத்தருக்கும் ஒரு விக்னஸ் இருக்கும் ஜெக்கு சசி என்ற விக்னஸ் அதுமட்டுமில்லாமல் இருந்தால் ஜெ அவர்கள் உலகின் தலை சிறந்த பெண்மணி

    ReplyDelete
  7. நிச்சயமாக கலைஞ்ர் ஜெயிக்க வாய்ப்புண்டு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.