Saturday, October 28, 2023

 


அநியாயங்கள் ஒன்று கூடும் போது அங்கு நியாயங்கள் தோற்று போகும்

நீ எதற்காகப் போராடுகிறாய் என்பது முக்கியமல்ல உனக்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்


இன்றைய உலகில்  ,நீ நல்லதை நியாயப்படுத்துவதற்காகப் போராடினாலும் ,உனக்கு ஆதரவாகக் களம் இறங்க ஆள் இல்லையென்றால் உன் போராட்டம் நீர்த்துத்தான் போகும். அதே நேரத்தில், நீ கெட்டதை நியாயப்படுத்துவதற்காகப் போராடும் போது உனக்கு ஆதரவாகச் செல்வாக்கு மிக்கவர்கள் களம் இறங்கினால் அதுதான் வெற்றி பெரும் . இதுதான் இன்றைய உலகின் நிதர்சனம் .அது ஒரு வீட்டிற்குள்ள உள்ள பிரச்சனையாக இருந்தாலும் சரி ,ஒரு குழுவில் , தெருவில் ஊரில் , மாநிலத்தில், ஒரு நாட்டில் அல்லது உலகத்தில் நடக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி  ஆதரவு இல்லையென்றால் வெற்றி பெற முடியாது.. அநியாயங்கள் ஒன்று கூடும் போது அங்கு நியாயங்கள் தோற்று போகும்


 பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள பிரச்சனை. பாலஸ்தீனியர்கள்களின் நிலை என்பது, ஒரு வீட்டில் அந்த வீட்டிருக்கு எந்த வித உரிமையும் இல்லாத ஒருவன் வந்து அமர்ந்து கொண்டு ,அந்த வீட்டின் உரிமையாளர் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கவேண்டும் என்று சொல்லும் நிலை போல இருக்கிறது..


 இப்படித்தான் இஸ்ரேல் நாட்டு மக்கள் பாலஸ்தீனியர்களின் இடத்தில் அமர்ந்து கொண்டு பாலஸ்தீனியர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் இரண்டாம் தர மக்கள் போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் இந்த இருவர்களுக்கிடையே உள்ள பிரச்சனை. இப்படி சண்டியர் தனம் பண்ணிக் கொண்டு இருப்பவனை எதிர் பார்க்காத சமயத்தில்  அவனை நிலைகுலையச் செய்யும் போது .அவன்  சினந்து எழுந்து நின்று தன்னை அடித்தவனை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் அமைதியாக இருப்பான்.. இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.


இந்த பிரச்சனையில் இப்போது மேலை நாடுகள்  இஸ்ரேலுக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் மற்ற நாடுகள்பாலஸ்தீனியர்களுக்கு குரல் கொடுக்கின்றன.. ஆதரவு கொடுப்பதற்கும் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

 



ஒருவன் தன் பலமான எதிரியைத் தாக்குவதற்கு முன்பு நன்றாக யோசிக்க வேண்டும்  தாக்குதலுக்கு உட்பட்டவன் பதில் தாக்குதல் நடத்து போது அதை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டும். இப்படி பின்விளைவக்ளை பற்றி யோசிக்காமல் தாக்குதல் நடத்தினால் சேதம்  தாக்குதல் நடத்துபவனுக்கே அதிகம் அதைத்தான் பாலஸ்தீனியர்களின் விஷயத்தில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்


இந்தியாவின் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த போதிலும் ,இந்தியா ஏன் வாய் முடி அமைதிக் காக்கிறது என்பதை யோசியுங்கள்.. பாலஸ்தீனியர்கள்இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது போல இந்தியாவால் சீனாவைத் தாக்குதல் நடத்த முடியாதா என்ன? அப்படி ஒரு தாக்குதல் நடத்தினால் சீனா, இஸ்ரேல் போல இந்தியாவை ஒரு வழியுண்டு என்று பண்ணிவிடுவார்கள். அப்படிச் செய்தால் தினமும் ஒரு டிரெஸ் போட்டு கை அசைத்து கொடி காட்டி புதிய  ரயிலை வழி அனுப்பி வைக்கத்தான் முடியுமா என்ன?

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. பொய்யன் பொத்திக்கொண்டு இருப்பது இதனால் தான்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.