Thursday, May 24, 2012


தமிழனுக்கு ஒரு சில நக்கல் தகவல்கள்



செய்தி : பெரியாறு அணையில் துளைகள் மூடுவதற்கு கேரள அதிகாரிகள் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழக அதிகாரிகள்

அதனால என்ன சம்பளம் வாங்கும் அதிகாரிகள் சும்மா இருக்கலாமா? அணையை அடைக்க முயலாவிட்டால் என்ன கேரளா போகும் ரோட்டை அடைக்க வேண்டியதுதானே

செய்திசென்னை:""மத்திய அரசு பெட்ரோல் விலையை திரும்ப பெறாவிட்டால், மக்களுடைய கண்ணீர் ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அம்மா இந்தக் கண்ணீரின் அளவு, நீங்கள் பால், பஸ், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தின அளவுக்கு இருக்குமா... இல்ல அதை விட அதிகம் இருக்குமா...? கொஞ்சம் முன்னதாகவே நீங்க சொல்லீட்டீங்கன்னா கண்ணிர் கடலில் இருந்து மக்களை காப்பாற்ற படகு ஏற்பாடு செய்துவிடலாம்


செய்தி : மத்தியில் ஓர் அரசு இருப்பதாகவே தெரியவில்லை. நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

யாரப்பா அது அம்மாவை டாஸ்மாக் பக்கமாக  காரில் அழைத்து சென்றது....பார்த்தீங்களா அந்த வாசம் பட்டதும் அவர்களுக்கு நாடு தத்தளிக்கிறது என்று பேச ஆரம்பித்துவிட்டார்


செய்தி : இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன்: பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறக் கோரி, எங்கள் கட்சியின் சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

பார்ரா உண்டியல் குலுக்க காரணம் கிடைச்சுடுச்சு

செய்தி :என் நேர்மையை சந்தேகிப்பதைவிட நெஞ்சில் கத்தியால் குத்தலாம்என்று சிதம்பரம் சொன்னதாக தகவல்
சிதம்பரம் ஐயா பாத்து பேசுங்க நம்ம இந்தியனுக்கு முதுகில் குத்திதான் அனுபவம் அதனால உங்க முதுகை நெஞ்சாக நினைத்து குத்திவிடப் போகிறார்கள்

செய்தி : பல்கலை மானியக்குழுவின் அனுமதியுடன், பாரதியார் பல்கலை நடத்திய, கல்லூரி விரிவுரையாளர்களுக்கான, மாநில தகுதித்தேர்வு (செட்) முடிவுகள், நேற்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த இத்தேர்வில்,50 ஆயிரத்து 629 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்; 41,164 பேர் பங்கேற்றனர் 1,396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

யாரங்கே  தேர்ச்சி பெற்ற 1396 நபர்களுக்கு வேலைகிடைப்பதற்கு முன்னாள் பெயிலானவர்கள் பணப்பெட்டியை எடுத்து அரசியல் தலைவர்களை சந்தித்து விரிவுரையாளர்களுக்கான வேலைகளை பெற்று நமது இளைய சமுதாயத்திற்கு கல்வி பணியாற்ற வாருங்கள்

செய்தி : மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ஐயா கட்கரி நாட்டிற்கு செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கும் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நாட்கள் எண்ணிக் கொண்டிருப்பதுதான்  உங்கள் வேலையா?
 

செய்தி :நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இரட்டிப்புப் பணம் கொடுப்பதாக ஆசைகாட்டி, பொதுமக்களிடம் இருந்து, 150 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



மக்களே இனியும் நீங்கள் ஏமாற வேண்டாம். அதே அளவு பணத்தை நீங்கள் என்னிடம் முதலீடு செய்தால் நான் உங்களுக்கு அமெரிக்க டாலராக திருப்பி தருவேன் (1 ரூபாய்க்கு ஒரு டாலர் )


நீங்க பணம் போட்டவனும்
உங்களை ஏமாத்துறான்.
நீங்க ஒட்டு போட்டவனும்
உங்களை ஏமாத்துறான்.
நீங்க காதலித்தவனும்/வளும்
உங்களை ஏமாத்துறான்/றாள்
உங்களுக்கு தாலி கட்டுனவனும்
உங்களை ஏமாத்துறான்
ஆசிரியனும் பாடம் சொல்லிதரமால்
உங்களை ஏமாத்துறான்
நோயை குணப்படுத்தும் மருத்துவரும்
உங்களை ஏமாத்துறான்

அட எப்படிடா நீங்க இன்னும் மாங்காவா இருக்கீங்க? எப்படிடா உங்களால இப்படி இருக்க முடியுது.



என்னை சிரிக்க வைக்கும் Manushya Puthiran அவரின்  பேஸ்புக் தளத்தில் வெளிவந்தது. (நன்றி)
பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டபின்பு பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏதோ பஞ்ச காலக்த்தில் ரொட்டிக்கு ஜனங்கள் ரேஷனில் நிற்பது போல. இரவு 12 மணிக்குள்ள வாங்குற பெட்ரோல வச்சு நாம எவ்வலவு தூரம் போக முடியும்? நாம் கும்பலா போய் நிற்க வேண்டிய இடம் வேற .

4 comments:

  1. தகவலும் அதற்கான பதிலும்
    சிறப்பாக இருக்குதே
    தொடர்ந்து தரலாமே

    ReplyDelete
  2. @ ரமணி சார்

    படித்து ரசித்து உடனே உங்கள் மன எண்ணங்களை கருத்துக்களாக்கி தந்ததற்கு மிக நன்றிகள்

    ReplyDelete
  3. சிந்திக்க சிரிக்க நிறைய செய்திகள் பகிர்ந்த விதம் சிறப்பு .

    ReplyDelete
  4. one rupee ku one dolar ah you too brutus....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.