பெண்களுக்கு புரியமா ஆண்களின் இந்த வலி
இது ஒரு உண்மை சம்பவம் . ஒரு வேலையில்லா ஆணின் மௌனப் போராட்டம்
வேலையிழந்த சில நாட்களிலேயே, ஒரு மனிதன் தன் சொந்த வீட்டிலேயே பாரமாக உணரத் தொடங்குவது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அதை எந்த பெண்களாவது உணர்ந்த்ருப்பார்களா என்றால் பதில் இல்லை என்று அடித்து சொல்லலாம்.
எனக்கு தெரிந்த நண்பர் திடீர் ஆட்குறைப்பால் தன் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறான். அதன் பின் அவன் சோம்பித் திரியவில்லை. தினம் தினம் தேடுகிறான், சுட்டெரிக்கும் வெயிலில் நேர்முகத் தேர்வுகளுக்கு அலைகிறான். ஆனால், உலகம் அவனை ஒரு புதுமுகமாக மட்டுமே பார்க்கிறது. அவன் உழைப்பிற்குத் தகுந்த ஊதியமோ, மரியாதையோ எங்கும் கிடைக்கவில்லை.
வெளியே கதவுகள் அடைபடும்போது, வீட்டில் ஆறுதல் கிடைக்கும் என்று பார்த்தால்... அங்கே கேள்விக் கணைகள் துளைக்கின்றன:
இன்னும் ஒரு வேலை கூட கிடைக்கலையா?
வேலை போகப்போகுதுன்னு தெரிஞ்சும் முன்னாடியே ஏன் தேடல?
கிடைக்கிறதைச் செய், கொஞ்சமாவது காசு வரும்ல?
இப்படி அவன் மீது பல கேள்விகணைகள் வந்து விழுகின்றன.
ஆனால் அவனுக்குத் இப்போது தேவைப்படுவது அறிவுரையோ, கேள்விகளோ அல்ல, நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதே என்கிற ஒரு சிறிய ஆறுதல் வார்த்தை மட்டுமே. ஆனால், அந்த அன்பிற்குப் பதில் அங்கே அழுத்தங்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. விரக்தியின் விளிம்பில் நிற்கும் அவன், இன்று தன் கனவுகளையும் தகுதியையும் தூக்கி எறிந்துவிட்டு, ஏதோ ஒரு வேலையில் சேரத் துணிந்துவிட்டான்.
பணம் ஒரு பொருட்டல்ல என்று சொல்பவர்கள், ஒருவன் தன் தன்மானத்தையும் கனவுகளையும் அடகு வைத்துவிட்டு, வெறும் பணத்திற்காகத் தனக்குப் பிடிக்காத வேலையில் சேரத் துடிக்கும் இந்த வலியை உணர்ந்திருப்பார்களா?
வீடு என்பது இப்போது என் நண்பருக்கு ஒரு தங்குமிடம் மட்டுமே... அவன் இழந்த கனவுகளின் இடுகாடு அது.
இது என் நண்பருக்கு மட்டுமல்ல பல சராசரி நடுத்தர படித்த குடும்ப ஆண்களுக்கு நடக்கும் நிகழ்வுகள்தான்
அன்புடன்
மதுரைத்தமிழன்
#ஆண்களின்வலி #வேலையில்லாதிண்டாட்டம் #ITLayoffs #Layoffs #MensMentalHealth #குடும்பம் #தன்மானம் #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன் #SocialIssues #கனவுகளின்இடுகாடு #மௌனப்போராட்டம் #வேலைவாய்ப்பு #மனஅழுத்தம் #ஆறுதல் #LifeStruggles #JobSearch #ITWorker #RealityOfLife

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.