தேர்தல் கால இலவசங்கள் ஆட்சியாளர்களின் கருணை அல்ல, அவை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டக் குரலை ஒடுக்கும் ஒரு நுட்பமான அரசியல் தந்திரமே.
குதிரையின் காலில் முள் குத்தக்கூடாது என்று இரும்பில் லாடம் அடித்தார் குதிரையின் ஒனர் ... அதைக் கண்ட குதிரை ஓனர் தன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் எண்ரு நினைத்து பூரித்துப் போனது . அந்த இரும்புத் துண்டு பாதுகாப்பிற்கு அல்ல... இனி ஓய்வே இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் ஓட விடுவதற்குத்தான் என்பது அந்த குதிரைக்கு புரியவில்லை. சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்றால்... அங்கே சுதந்திரம் பறிக்கப்படப் போகிறது என்று அர்த்தம்!
இந்த வரிகளைப் ஒரு 'Quote-ல்" படிக்கும்போது தமிழக மற்றும் இந்திய மக்கள்தான் என் மனதிற்குள் வந்தனர் . இதனால் நம் நெஞ்சில் உறைப்பது வெறும் வலியல்ல; நம்மை நாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என்ற கோபம்! இது ஏதோ ஒரு வாயில்லா ஜீவனுக்கு நடந்த துரோகம் அல்ல. ஜனநாயகத்தின் பெயரால், ஓட்டுச் சீட்டை ஏந்திக்கொண்டு நிற்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஆட்சியாளர்கள் அடிக்கும் அரசியல் லாடம் இது!
தேர்தல்கள் வரும்போதெல்லாம் அனைத்து கட்சிகளும் இலவசங்கள் என்ற பெயரில் வீசப்படுவது சலுகைகள் அல்ல... நம் சுயமரியாதைக்கு வைக்கப்படும் சூனியம். பிச்சைக்காரன் தட்டில் விழும் சில்லறைகளைப்போல, ஆட்சியாளர்கள் வீசும் இலவசங்களை ஏந்திக்கொண்டு, எங்கள் அரசாங்கம் எவ்வளவு கருணை மிக்கது என்று அந்தக் குதிரையைப்போலவே நாமும் கனைக்கிறோம். ஆனால், இந்த இலவசங்கள் நம் பசியைப் போக்க அல்ல, நம்மை நிரந்தரப் பிச்சைக்காரர்களாகவே முடக்கிப்போடும் அதிகார வர்க்கத்தின் இரும்புச் சங்கிலிகள் என்பதை நம் மரத்துப்போன மூளைகள் சிந்திக்க மறுக்கின்றன.
உழைத்து வாழும் வர்க்கத்தின் வியர்வையை உறிஞ்சிக் குடித்துவிட்டு, அதிலிருந்து ஒரு துளியை மட்டும் இலவசமாகத் துப்புகிறார்கள். ஓசிப் பொருட்களைக் கொடுத்து மக்களின் சுரணையை ஒட்டுமொத்தமாக அறுத்து எறிந்துவிட்டார்கள். ஒரு கையில் இலவசத்தைத் திணித்துவிட்டு, மறுகையில் வரியாகவும், டாஸ்மாக் என்ற கொடிய போதையாகவும் நம் எதிர்காலத்தையே குடித்துக் கொழுக்கிறார்கள். இலவசத்தை வாங்கிய கைகளுக்கு, உரிமையைக் கேட்டு ஓங்கி அறையும் தகுதி எங்கிருந்து வரும்? முள்ளெலும்பில்லாத புழுக்களாக நம்மை ஊர்ந்து செல்ல வைத்துவிட்டார்கள்.
ஒருவனுக்கு மீன் பிடித்துக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதுதான் உண்மையான அறம். ஆனால், தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொடுத்தால், நாளை இதே மக்கள் 'உரிமை' கேட்டுப் புரட்சி செய்வார்களே என்ற அதிகார வர்க்கத்தின் பயம்தான், இந்த இலவசங்கள்! சிந்திக்கத் தெரிந்தவனை அடிமையாக்க முடியாது என்பதால், இலவசம் என்ற லாடத்தை நம் கால்களில் மட்டுமல்ல, நம் மூளைக்குள்ளேயே சத்தமில்லாமல் அடித்துவிட்டார்கள்.
சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படும் ஒவ்வொரு இடத்திலும், நம் எதிர்காலத் தலைமுறையின் கழுத்து நெரிக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம். லாடம் கட்டப்பட்ட குதிரை, எஜமானனின் சவுக்கடிக்கு பயந்து சாகும்வரை ஓடித்தான் ஆகவேண்டும். அரசியல்வாதிகளின் அதிகாரப் பசிக்காக, ஓசிப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு நம் சுயமரியாதையை விற்றுவிட்டு, குருடர்களைப்போல ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இலவசங்கள் என்ற இந்த இரும்பு லாடத்தை என்றைக்கு நாம் பிடுங்கி எறிகிறோமோ, என்றைக்கு இலவசங்களை காரி உமிழ்ந்துவிட்டு உரிமைகளைக் கேட்கிறோமோ... அன்றைக்குத்தான் நமக்கு விடிவு காலம். அதுவரை நாம் லாடம் கட்டப்பட்ட வெறும் அடிமைக் குதிரைகள்தான்!
மக்களே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் . தேர்தல் கால இலவசங்கள் ஆட்சியாளர்களின் கருணை அல்ல, அவை மக்களின் சுயசிந்தனையை மழுங்கடித்து, அடிப்படை உரிமைகளுக்கான போராட்டக் குரலை ஒடுக்கும் ஒரு நுட்பமான அரசியல் தந்திரமே.
இலவசங்கள் என்பது மக்களின் முன்னேற்றத்திற்காக வீசப்படும் மலர்கள் அல்ல, மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக விரித்திருக்கும் வலை. இது ஆட்சியின் கருணை அல்ல, மக்களின் பகுத்தறிவை முடக்கும் அரசியல் சூழ்ச்சி
இலவசங்கள் மக்களுக்கான அன்பளிப்பு அல்ல, மக்களின் சிந்தனைத் திறனைச் சிதைக்கத் திட்டமிடப்பட்ட ஒரு தேர்தல் காலத் தந்திரம்.
அன்புடன்
மதுரைத்தமிழன்

#தேர்தல், #தமிழகம், #இந்தியா, #அரசியல், #சிந்தனை, #NoFreebies SelfRespect #PoliticalScam #WakeUpTamilNadu #FreedomFirst

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.