நம்ம ‘ஜீ’க்கு விஷயம் நல்லாவே தெரியும். இந்தத் தடவை தமிழ்நாட்டுல தாமரை மலருதோ இல்லையோ, மத்த எல்லாரையும் ‘மண்டை காய’ வைக்கணும்ங்கறதுல அவர் தெளிவா இருக்காரு. அதனாலதான், ரிசல்ட் வர்ற தேதியை இழுத்துப்பிடிச்சு மே 4-ஆம் தேதிக்கு தள்ளி வச்சிருக்காரு. இது ரிசல்ட் தேதியில்ல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவர் வச்சிருக்கற ‘மென்டல் டெஸ்ட்’!
இப்போ பாருங்க, இந்தத் தேர்தலுக்காகக் கோடி கோடியா வாரி இறைச்ச தலைவங்களோட நிலைமைதான் மகா பரிதாபம். கொடுத்த காசு ஓட்டா மாறுமா? இல்ல நோட்டாவுக்கு போகுமா?னு தெரியாம, ஒவ்வொருத்தரும் பாயைப் பிராண்டிக்கிட்டு இருக்காங்க. தூக்கத்துல கூட "அந்த பூத்ல காசு சரியா போச்சா?"னு அலறிக்கிட்டு இருக்காங்க. இவங்க ஒரு பக்கம்னா, ஜனங்க பண்ற கூத்து அதைவிடப் பெருசு
பொதுமக்களும் இப்போ ஒரு மாதிரி ‘மென்டல்’ பேஷன்ட் ரேஞ்சுக்குத் தான் சுத்திக்கிட்டு இருக்காங்க. டீக்கடை பெஞ்ச்ல உட்கார்ந்துக்கிட்டு, “அவன் காசை வாங்கிட்டு இவனுக்குப் போட்டிருப்பான், இவன் காசை வாங்கிட்டு அவனுக்குப் போட்டிருப்பான்”னு இவங்களே ஒரு கணக்கை போட்டு, அதுக்காக ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. டிவியில வர்ற எக்ஸிட் போல்ல இருந்து, யூடியூப்ல ஒருத்தன் வாய்க்கு வந்ததைச் சொல்ற வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துட்டு, “அடப்போங்கப்பா... எனக்குத் தெரியும், இவன்தான் வருவான்”னு மண்டையை உடைச்சுக்கிறாங்க.
ஒவ்வொருத்தரும் இப்போ ஒரு அரசியல் மேதை கணக்கா பேசிக்கிட்டு, வாட்ஸ்அப் குரூப்ல எதையாவது கிறுக்கிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா, "அடப்பாவிகளா... ஒரு தேர்தலுக்குப் போய் இப்படியா ஒரு மாநிலமே பைத்தியக்கார ஆஸ்பத்திரி மாதிரி மாறும்?"னு நினைக்கத் தோணுது. காசைப் பிரிச்சுக் கொடுத்தவன் நிம்மதியா பிரியாணி சாப்பிட்டுத் தூங்குறான், ஆனா கொடுத்தவனும் காசை வாங்கினவனும் இப்போ தலை பிய்த்துக்கிட்டு அலையுறாங்க
தலைவர்களும் சரி, பொதுமக்களும் சரி... எல்லாரும் இப்போ ஒரு விதமான ‘சைக்கோ’ மனநிலையில தான் இருக்காங்க. தலைவர்கள் படுற இந்த அவஸ்தையைப் பார்த்து, அங்க ‘ஜீ’ ஒரு ஓரமா உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்காரு. அவர் சிரிக்கிறாரோ இல்லையோ, இவனுங்க படுற பாட்டைப் பார்த்து எனக்குச் சிரிப்பு தாங்க முடியல. ஒரு பக்கம் அவங்களுக்கு ‘மண்டை காய்ச்சல்’... நமக்கு அதுதான் ‘நல்ல என்டர்டைன்மென்ட்’!. என்ன பண்றது... நம்மூர்ல ஜனநாயகம் இப்போ அப்படித்தான் சிரிச்சுக்கிட்டு இருக்கு. ஹீ ஹீ! நாம சிரிச்சுக்கிட்டே மே 4-ஆம் தேதி என்ன கூத்து நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்! ஹீ ஹீ!
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.