எழுத்தாளர் தம்பி சமஸ் அவர்கள் நல்ல எழுத்தாளர், சிறந்த சிந்தனையாளர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவரும் ஒரு சராசரி மனிதர்தானே? இன்னோவா புகழ் நாஞ்சில் சம்பத்தைப் போல அவர் சமீபத்தில் மாறியிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. நல்ல எழுத்தாளராக இருந்தாலும் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, அதற்கான தேவைகள் இருக்கிறது. ஆகவே, தனது அறம் சார்ந்த சிந்தனைகளைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, வாழ்வாதாரத்திற்கு வழி தேடுவது அவருக்கு அவசியமாகிவிட்டது போலும்! இல்லையென்றால் சாரு நிவேதிதா போல ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் வங்கி கணக்கு எண் கொடுத்துக் கெஞ்ச வேண்டிய நிலை வந்திருக்கும். சரி, அது அவரது தனிப்பட்ட விருப்பம், அதை நாம் கடந்து செல்வோம். ஆனால், அவர் முன்வைத்த வாதங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது அவரது வாசகனாகிய என் கடமை.
சமஸ் அவர்களின் இந்தப் புலம்பலைப் பார்த்தபோது, அவர் போர்த்தியிருக்கும் நடுநிலை எனும் போர்வையின் கிழிசல்கள் வழியாக அவரது உண்மையான முகம் அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் அரசியல் தெளிவை எவ்வளவு தூரம் மழுங்கடிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் அவர் முயன்றிருக்கிறார். தன் நட்பு வட்டத்தில் தன்னை வெறுப்பவர்கள் பெருகிவிட்டதாக அவர் வருத்தப்படுவது, அவர் சொல்லும் ஏதோ ஒரு மகா உன்னதமான உண்மைக்காக அல்ல. சமஸ் அவர்களே உங்கள் மீதானது வெறுப்பல்ல உங்களின் தர்க்கமற்ற வாதங்களைச் சமூகம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டதன் பயமே அது.
சித்தாந்தத்திற்கு அடிமையாக இருப்பதும், ஒரு தனிநபரைத் தூக்கிப் பிடிப்பதும் ஒன்றுதான் என்று எழுதியிருப்பது, இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அறிவுப் பித்தலாட்டம். சமூகம் எப்படி இயங்க வேண்டும் என்கிற தத்துவமே சித்தாந்தம். அந்தச் சித்தாந்தப் பிடிமானத்தால்தான் இங்கே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டன. ஆனால், திரையில் பார்த்த பிம்பத்திற்காக, எந்தக் கொள்கைப் பின்புலமும் இல்லாத ஒரு நடிகரின் பின்னால் அணிவகுப்பதை அந்தச் சித்தாந்தத்தோடு ஒப்பிடுவது, இத்தனை காலத் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே இழிவுபடுத்துவதாகும். தற்குறிகள் என்கிற வார்த்தை மேட்டிமைத்தனம் என்றால், சினிமா கவர்ச்சியை அரசியல் முதிர்ச்சி என்று சொல்வது எவ்வகையான அறிவு நேர்மை?

__________________________________________
பகட்டுப் பேஸ்புக் பதிவுகளும்... பரிதாப நிஜங்களும்! https://avargal-unmaigal.blogspot.com/2026/04/flashy-facebook-posts-and-pitiful.html

இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு வர காலம் எடுக்கும் என்று வக்காலத்து வாங்கும் நீங்கள், அதே இளைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை வெறும் வாக்கு இயந்திரங்களாக மாற்ற நினைக்கும் சினிமா அரசியலை மட்டும் ஏன் கண்டிக்கத் தவறுகிறீர்கள்? நீங்கள் எழுதிய புத்தகங்களும், ஆற்றிய உரைகளும் இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுத்தது சித்தாந்தமற்ற இந்தத் தனிநபர் துதியையா? உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்தின் அறியாமையை மக்கள் மொழி என்று புனிதப்படுத்துவது ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல; அது வெறும் பிம்ப அரசியலின் தரகர் வேலை.
தேர்தலில் பணம் விளையாடுவதைப் பற்றி அண்ணாவின் பெயரை இழுத்துக் கொண்டு வந்து பேசும் சமஸ், பல நூறு கோடிகளில் படம் எடுத்து, கார்ப்பரேட் நிழலில் வளர்ந்து, அதே பணபலத்தோடு அரசியலுக்கு வரும் ஒரு நட்சத்திரத்தை மட்டும் சாமானியன் என்று அழைக்கத் துடிப்பது ஏன்? பழைய பண்ணையார்களை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, ஒரு நவீன பிம்பப் பண்ணையாரை சமூகம் ஏற்க வேண்டும் என்று நீங்கள் மறைமுகமாகத் தூது விடுவது யாரை ஏமாற்ற?
பேராசிரியர் ராஜன் குறை போன்றவர்களைச் சாடும் நீங்கள், அடிமைத்தனம் பற்றிப் பேசுகிறீர்கள். கொள்கைக்காக நிற்பவன் அடிமையல்ல, அவன் போர்வீரன். ஆனால், பிம்பங்களுக்காகக் கொள்கையைத் தொலைப்பவனே உண்மையான அடிமை. ஒரு தனிநபரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகக் கட்டமைக்கும் வேலையைச் செய்துகொண்டே, மற்றவர்களைப் பார்த்து வசைபாடுவதுதான் உங்களின் உண்மையான முகம்.
புத்திசாலிகள் மக்கள் பேசும் மொழியைக் கவனிப்பார்கள் என்று முடித்திருக்கிறீர்கள். ஆம், நாங்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மக்கள் எப்போதுமே தெளிவானவர்கள்தான்; ஆனால் அவர்களைக் குழப்பி, சினிமா மாயைக்குள் சிறைவைக்கத் துடிக்கும் உங்களைப் போன்ற நடுநிலை வேடதாரிகளின் வார்த்தை ஜாலங்களை மக்கள் இனி நம்பத் தயாராக இல்லை. இனிமேலும் உங்கள் எழுத்துக்களால் அரசியல் அறியாமையைக் கொண்டாடாதீர்கள். அது நீங்கள் தமிழுக்கும், இந்த மண்ணின் அரசியல் வரலாற்றிற்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம்!
அன்புடன்,
மதுரைத்தமிழன்

#சமஸ் #Samas #அரசியல்_பழகு #தமிழ்நாடு_அரசியல் #TNPolitics #TNPolitics2026 #2026Election #தவெக #TVK #விஜய் #ThalapathyVijay #TVKVijay #பிம்ப_அரசியல் #ImagePolitics #சமூகநீதி #SocialJustice #சித்தாந்தம் #அறிவுஜீவி_வேடம் #நடுநிலை_நாடகம் #போலி_நடுநிலை #அரசியல்_தெளிவு #கொள்கை

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.