சமூக ஊடகங்கள் ஒரு மாய உலகம். மாயையை விட உண்மையை நேசியுங்கள்.
சிலர் பேஸ்புக்கில் அல்லது மற்றைய சோசியல் மீடியாவில் பகிரும் பதிவுகளையும் ,போட்டோக்களையும் பார்க்கும் பலர் .அதற்கு தங்களுடைய கருத்துகளையும் பகிர்கிறார்கள். அப்படி அவர்கள் பகிரும் போது அருமை ,கொடுத்து வைச்சவன், அனுபவி ராஜா அனுபவி என்பது போல பகிர்ந்தாலும் அவர்கள் மனதில் ஒரு சோகம் இழையோடுகிறது என்பதை உற்று நோக்கும் போது புரிகிறது. அதுமட்டுமல்லாமல் அவன் அனுபவிக்கிறான். நாம்தான் இப்படி கஷ்டப்பட்டுகிறோம். வாழ்ந்தால் அவனைப் போல வாழ வேண்டு என்று அவர்களின் மனதும் ஏங்குகிறது.
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், எப்போதும் நீங்களாகவே இருங்க. மற்றவர்களைக் இம்ப்ரெஸ் பண்ணுவதற்காக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைக் இம்ப்ரெஸ் பண்ண எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக மன அழுத்தத்தை நீங்கள் சுமக்க நேரிடும். நிம்மதிங்கிறது நேர்மையா வாழ்றதுல இருக்கே தவிர, 24 மணிநேரமும் நடிச்சுக்கிட்டு இருக்கதுல இல்ல

#LifeStruggles #JobSearch #ITWorker #RealityOfLife
உங்கள் வருமானத்திற்குள் வாழுங்கள். எளிமையில் ஒரு கண்ணியமும், உண்மையாக இருப்பதில் ஒரு வலிமையும் உண்டு. நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பழசுன்னாலும் துணியத் துவைச்சுப் போட்டா அதுல ஒரு சுத்தம் இருக்கு. போன் வேலை செய்யுதா? அதுவே போதும். எதற்க்கு புது மாடல் வந்ததும் வரிசையில நிக்கணும்? பகட்டான பொருளை விட, நமக்கு எது தேவையோ அதை வாங்குறதுதான் புத்திசாலித்தனம். அது போல உள்ளுரிலே பார்க்க ரசிக்க பல இடங்கள் இருக்கு போது, உங்கள் நண்பர்கள் வெளி மாநிலம் வெளிநாடு சென்று வந்து போஸ்ட் போட்டார்கள் என்பதற்காக நீங்களும் அது போல செய்யாதீர்கள்.
முக்கியமா இந்த சோஷியல் மீடியா - அது ஒரு மாய உலகம். அங்க இருக்குறதெல்லாம் வெறும் பில்டப். சமூக ஊடகங்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை மட்டுமே காட்டும் ஒரு திரை; அது முழுமையான வாழ்க்கை அல்ல அந்த அந்த ஃபில்டர்களுக்கும் பளபளப்பான போட்டோக்களுக்கும் அழகான பதிவுகளுக்கும் பின்னால் இருக்கும் உண்மையை , வலியை நீங்கள் கண்டால் உங்களுக்கு பொறாமை வராது, பாவம்னுதான் என்று தோன்றும்.
மற்றவர்களை கவர்வதற்காக, யாருன்னே தெரியாத ஒருத்தன் லைக் போடணும்ங்கிறதுக்காக கடன் வாங்கி செலவு பண்ணாதீங்க. இணையத்தில் கிடைக்கும் கைதட்டல்கள் தற்காலிகமானவை, இன்னைக்கு கைதட்டுறவன் நாளைக்கு கஷ்டத்துல வந்து நிக்கமாட்டான் ஆனால் நிஜ வாழ்க்கையில் அதன் விளைவுகள் நிரந்தரமானவை. இன்று உங்களைப் பாராட்டுபவர்கள் நாளை உங்கள் பக்கம் நிற்காமல் போகலாம்.
சிம்பிளா சொல்லணும்னா: பந்தாவ விட அமைதிதான் முக்கியம். நிஜமா வாழுங்க!
அழுத்தத்தை விட அமைதியைத் தேர்ந்தெடுங்கள். மாயையை விட உண்மையை நேசியுங்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.