நேற்று ஒரு நண்பர் என்கிட்ட ரொம்ப சீரியஸா ஒரு கேள்வியைக் கேட்டார். மதுரைத்தமிழன், ஒருவேளை அந்தத் 'தற்குறி' விஜய் ஜெயிச்சு, முதலமைச்சர் நாற்காலியில உட்கார்ந்துட்டாருன்னு வைப்போம்... அப்போ தமிழகம் எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? இதுதான் அவர் கேட்ட கேள்வி.
நண்பரோட அந்த ஆழ்ந்த கவலையைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவருக்கு நான் சொன்ன பதில் இதுதான். கவலைப்படாதீங்க நண்பரே, விஜய் ஆட்சியில தமிழகம் அப்படியே அமெரிக்கா மாதிரி மாறிடும்!
நான் சொன்னதை கேட்டு அவர் ஷாக் ஆகி, என்னது அமெரிக்காவா? அவ்வளவு டெவலப்மென்ட் ஆகிடுமா என்னனு ஆச்சரியமா கேட்டார்.
அதுக்கு நான் சொன்னேன், டெவலப்மென்ட் ஆகுமான்னு தெரியாது, ஆனா அங்கேயும் இப்போ ஆட்சி செய்றது ஒரு தற்குறி தான். அந்தத் தற்குறியும், நம்மூர்ல வரப்போற தற்குறியும் ஒன்னுதான். அமெரிக்காவுல இப்போ நடக்குற கூத்தைப் பார்த்தீங்கன்னா புரியும்... அங்கே இருக்குற அதே ஜனநாயகத் தமாஷ் தான் இங்கேயும் அரங்கேறும். தற்குறிகளோட ஆட்சிங்கிறது உலகளாவிய டிரெண்ட் ஆகிடுச்சு போல!

--------------------------------------------------------------------------------
அரசியல் பழகு... ஆனால் இப்படியா சமஸ்? எழுத்தாளர் சமஸிற்கு ஒரு நேரடிப் பதில்!
https://avargal-unmaigal.blogspot.com/2026/04/tnpolitics2026-tvkvijay.html
--------------------------------------------------------------------------------
இதைக்கேட்ட அந்த நண்பருக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருந்துச்சு. உண்மைதானே? அங்கேயும் ஒருத்தர் வாய்க்கு வந்ததை பேசிட்டு உலகத்தையே வேடிக்கை பார்க்க வைக்கிறாரு, இங்கேயும் ஒருத்தர் தியேட்டர்ல விசில் அடிக்க வச்சுட்டு கோட்டையைப் பிடிக்கப் பாக்குறாரு.
அமெரிக்காவுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை... அங்கேயும் ஒரு சைக்கோ அரசியல், இங்கேயும் ஒரு பிம்ப அரசியல். மொத்தத்துல உலகம் முழுக்க தற்குறிகளோட கொண்டாட்டம் தான் போல! ஹீ ஹீ!
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.