கேரளா: சிவப்புக் கோட்டையை உடைக்கும் 'கலாசாரப் போர்'! - மதப் பிளவுகளால் ஆடும் அரசியல் அரியணை!
கேரளா தேர்தல் களம்: மாறிவரும் முக்கோண அரசியல்!
தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் மையத்தில் வழக்கமான கட்சி போட்டிகளை விட, சிறுபான்மை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கிடையிலான வளர்ந்து வரும் பதற்றங்களே முக்கிய காரணமாகத் தோன்றுகின்றன.
முதலமைச்சரின் மருமகன் இஸ்லாமியர் என்பதாலும், அரசியலில் தங்களை ஒதுக்கி வைப்பதாகக் கிறிஸ்தவ சமூகத்தில் ஒரு உணர்வு உருவாகியுள்ளதாலும், அவர்கள் தயக்கத்துடன் பாஜகவை நோக்கி நகரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதே சமயம், முதலமைச்சர் பினராயி விஜயன் அளவுக்கு மீறிய அரசியல் பேராசைக்கு ஆளாகிவிட்டதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது.
ஒருகாலத்தில் “தென்னை மரத் தொழிலாளியின் மகன்” எனப் சொல்லி ஆட்சியில் இடம் பிடித்த அவர், இன்று தங்கக் கடத்தல், போதை வஸ்து விற்பனை, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமை, தொழிலாளர்களின் நலனில் அக்கறையின்மை, பினாமி முறைகளின் மூலம் வளங்களை பெருமளவில் கைப்பற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ள நிர்வாகத்தின் தலைவராக பார்க்கப்படுகிறார். அரசியல் செல்வ வளங்கள் அனைத்தும் முதலமைச்சரின் குடும்பத்திற்கே குவிகின்றன என்ற எண்ணம் மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
தமிழகத்துடன் ஒப்பீட்டு பார்த்தால் பொது மருத்துவ வசதிகள் பல மடங்கு சிறப்பாக உள்ளன. ஆனால் தற்போதைய ஆட்சியின் ஊழல் முந்தைய அரசைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதம் சார்ந்த அச்சங்களும் இந்தப் பிளவுகளை ஆழப்படுத்தியுள்ளன.
----------------------------------------------------------------------------------
ஆண்களின் வலி தெரியுமா? வெளிநாட்டுப் பெண் ( White Lady ) கேட்ட ஆவேச கேள்வி! இது இந்திய ஆண்களுக்கும் பொருந்துமா?
-----------------------------------------------------------------------------------
கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்படுகின்றனர் என்ற தகவல்கள், கிறிஸ்தவ சமூகத்தில் தங்களின் சமூக மற்றும் அரசியல் ஆதிக்கம் குறைந்து விடுமோ என்ற பயத்தை உருவாக்கியுள்ளது. இதன் எதிர்வினையாக, தங்கள் மக்கள் தொகையை அதிகரித்து அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என கிறிஸ்தவ மதத் தலைவர்களில் சிலர் கருதுகின்றனர். ஊக்குவிக்கின்றனர். அத்துடன் இடதை நம்பி சிறுபான்மையாக மாறுவதை விட இனி ஆட்சியில் மத்தியில் இருக்கும் பிஜெபியுடன் இணைய முடிவெடுத்து விட்டது.
இதற்கிடையில், ஐயப்பன் கோயிலைச் சுற்றிய சர்ச்சைகள், கோயில் தங்கத் திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தபோது ஏற்பட்ட குழப்பங்கள், முற்போக்கு சிந்தனையுடைய இந்துக்களையும் இடதை விட்டு விலகச் செய்து பிஜெபி நோக்கி நகர வைத்துள்ளன. தங்கள் பண்பாட்டையும் மத மரபுகளையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முற்போக்கு இடது சிந்தனை இந்துக்களில் பலர் பாஜகவை நோக்கி மாறத் தொடங்கியுள்ளனர்.
இந்த அனைத்திற்கும் நடுவே, காங்கிரஸ் கட்சியின் உள்ளகக் குழப்பங்கள் கோஷ்டிச் சண்டைகளாலும் செயலிழந்த நிலையில் உள்ளது. ராகுல் தலைமையிலுள்ள காங்கிரசிலும் பலர் நம்பிக்கை இழந்து விட்டனர். உம்மன் சாண்டி மாதிரி மக்கள் முதலமைச்சரும் இனி காங்கிரசில் இருந்து வரப் போவது இல்லை என்ற புரிதலும் , ஒருங்கிணைந்த, நம்பகமான மாற்று அரசியல் வழியைக் காட்டத் தவறியதால், மக்கள் விரக்தியடைந்து, பாஜகையே ஒரே மாற்றாகக் கருதி அதனை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில், தற்போதைய அரசியல் சூழல் வெறும் தேர்தல் கணக்குகளை மட்டுமல்ல; ஆட்சி மீதான நம்பிக்கை இழப்பு, அடையாள அடிப்படையிலான அச்சங்கள், மற்றும் எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஆகியவை ஒன்றிணைந்து மக்கள் மனநிலையை மறுவடிவமைக்கும் ஒரு ஆழமான நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.
இந்தப் பதிவை எழுதி வெளியிட்டவர் J P Josephine Baba ( https://www.facebook.com/babajosephine , https://josephinetalks.blogspot.com/ ) இவர் ஒரு எழுத்தாளர் , ப்ளாக்கர் மற்றும் முன்னாள் துறை தலைமை பேராசிரியர்
அவரின் அனுமதியுடன் இங்கே ஷேர் செய்யப்படுகிறது
நன்றி
இந்த பதிவிற்கான படம் , தலைப்பும் மட்டும் நான்
அன்புடன்
மதுரைத்தமிழன்
#KeralaPolitics #கேரளஅரசியல் #KeralaElection #முக்கோணப்போட்டி
#KeralaPoliticalShift#LDFvsUDFvsBJP#SouthIndianPolitics
#BJPinKerala #தாமரையின்எழுச்சி #ChristianVote #MinorityShift #CulturalWar
#LoveJihadDebate #சபரிமலைவிவகாரம்#Hindutva#PinarayiVijayan#CommunistCrisis
#CorruptioninKerala#பிணராயிஊழல்#FamilyRule#LDFDebacle#CongressCrisis#UDFKerala
#RahulGandhi #PoliticalVacuum #AlternativePolitics

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.