Thursday, March 3, 2022

 

@avargalunmaigal

தமிழக அரசு செய்வது சரியா? மத்திய அரசு கையாலாகாத அரசா என்ன?

உக்ரைன் போர்க்களத்தில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு சார்பில் நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இவர்கள் ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாகியா நாடுகளுக்குச் சென்று சிறப்புக் குழு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளைச் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கியோரை மீட்கும் தமிழக குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எனக்கென்னவோ, தமிழக அரசு மத்திய அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகத்தான் தோன்றுகிறது. தமிழக அரசு வேண்டுமானால் மத்திய அரசிற்கு மிக அதிக அழுத்தத்தைக்  கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, இது போன்ற  வெளியுறவுத் துறை விஷயங்களில் தலையிடுவது மிக தவறாகவே தோன்றுகிறது. பல விஷயங்களில் மிகப்  பொறுப்பாக இதுவரை செயல்பட்டுக் கொண்டு வந்த ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு யாரோ ஒருவருடைய தவறான வழிகாட்டுதாலால்  தவறு செய்கிறது என நினைக்கின்றேன்.

தமிழக மாணவர்களை மீட்க குழு என்று அமைப்பதால் மற்ற மாநில மாணவர்களிடம் இருந்து தமிழக மாணவர்களை  பிரிப்பது தவறுதானே இது மற்ற மாநில மக்களுக்குள் தமிழர்கள் மீதான ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டத்தானே செய்யும். அமைத்ததுதான் அமைத்தார்கள் தமிழக மற்றும் மற்ற மாநில மாணவர்கள்  மீட்க குழு என்றாவது அமைத்து இருக்க வேண்டாமா?


ஸ்டாலின் என்ன செய்து இருக்கலாம் மத்திய அரசு அனுப்பும் குழுவுடன் எங்கள் குழுவும், அதாவது அவர்களின் கட்சியைச் சார்ந்த எம்பிக்களை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்து ,அதன் மூலம் அனுப்பலாம் அதுவே சிறந்த செயலாகும். அதைவிட்டுவிட்டு மோடியைப் போல விளம்பரத்திற்காகச் செயல்படுவது எதிர்காலத்தில் அவருக்குத்தான் கெடுதல்.

இல்லை இல்லை உக்ரைனில் இருக்கும் மாணவர்களை காப்பாற்ற குழு அனுப்புவதில் தவறு இல்லை என்றால் இலங்கைக்கும் இப்படி ஒரு குழு அனுப்பலாமே?


உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யும்  தமிழக அரசு, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு  அங்குச் சிறையில் வாடும் மீனவர்களை மீட்க இது  போல ஒரு குழுவை அனுப்பாமல் பிரதமருக்குக் கடிதம் மட்டும் எழுது கொண்டிருப்பது ஏன்?

உக்ரைனில் படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் தமிழர்களா ?மீனவர்கள் மட்டும் தமிழர்கள் இல்லையா? ஆட்சிக்கு வந்த பல மாதங்கள் ஆகியும் மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசிற்குக் கடிதம் எழுதம் முதல்வர் ஸ்டாலின் இதற்கு ஒரு குழுவை அமைத்து அருகில்  இருக்கும் இலங்கை பிரதமருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தலாமே?

ஏன் இவரே நேரடியாக இலங்கைக்குச் சென்று அந்த நாட்டும் பிரதமருடன் பேசி பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டு வரலாம்தானே



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. நீங்கள் எழுதியதைப்படித்த போது இராக்கிற்கும் குவைத்திற்கும் இடையே நடந்த போர் நினைவுக்கு வருகிறது. எத்தனையோ இந்தியர்கள் ஆக்ரமிக்கப்பட்ட, தீப்பிடிது எரிந்த குவைத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்தார்கள். பாஸ்போர்ட், மற்ற எல்லா ஆதாரங்களையும் இழந்து நின்றவர்களுக்கு எப்படி இந்தியர் என்று நம்புவது என்று சொல்லி இந்திய தூதரகம் உதவ மறுத்து விட்டது. ஜோர்டானின் அம்மானில் காத்து நின்ற ஏர் இந்தியா விமானத்தை எப்படி சென்றடைய முடியும்?
    அது நடந்து மூன்று வருடங்கள் கழித்து, வேறு நாட்டில் செளக்கியமாய் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தமிழரை நாங்கள் சந்தித்த போது, தான் பட்ட துன்பங்களை சொல்லி, குமுறி அழுதார் அவர். வெளி நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தியத்தூதரகம் தான் நம்பிக்கை ஆதாரம்! அதுவே உதவ மறுத்தால் அவன் என்ன செய்ய முடியும்? எதுவுமே இல்லாமல் அனாதையாய் இறங்கியவர்களுக்கு அன்றைக்கு தமிழக அரசு ஒரு பைசாவிற்குக்கூட உதவவில்லை! இத்தனைக்கும் அன்று கலைஞரின் அரசு தான் தமிழகத்தில்! குறைந்த பட்சமாய் அவரவர் சொந்த ஊருக்கு பயணம் செய்ய காசாவது வழங்கியிருக்கலாம்!
    இன்றைக்கு உக்ரைனில் மாட்டிக்கொண்டு அவதியுற்றுக்கொண்டிருக்கும் இந்தியர்கள் ரஷ்யாவில் எல்லப்புறத்திலும் ருமேனியாவின் எல்லைப்புறத்திலும் அதிகாரிகளாலேயே வசை பாடப்பட்டும் அடிக்கப்பட்டும் துன்பப்படுகிறார்கள்!
    இந்த நிலையில் உதவுவதற்கு எத்தனை கரங்கள் குவிகின்றனவோ, அத்தனைக்கெத்தனை நல்லது தானே? தூதரம் நல்லது செய்யும், மத்திய அரசு கவனித்துக்கொள்ளும் என்றில்லாமல் தானும் இன்னொரு முயற்சியை எடுத்தற்காக நான் முதல்ல்வர் ஸ்டாலினை உளமார பாராட்டுகிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.