Monday, March 28, 2022

@avargal unmaigal

 அமைதியான நல்வாழ்க்கைக்கு நாம் என்ன செய்யலாம்


உங்கள் உடல், மன, ஆன்மீகம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு மிகவும் நல்லதல்லாத அனைத்து நச்சு நபர்கள் மற்றும் இடங்களிலிருந்தும் விலகி இருங்கள்.

நச்சு எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றும் அதை மற்றவர்களிடம் விதைப்பவர்களை அவர்கள் யாராக  இருந்தாலும்  அவர்கள் பின் செல்ல வேண்டாம்.  அவர்கள் நமது உறவாகவோ அல்லது நட்பாகவோ இருந்தால் அன் ப்ரெண்ட் செய்து விடுங்கள் அவர்களுடான நம் உறவை, எண்ணங்களை முற்றிலும் அழித்துவிடுங்கள் . அவர்களைப் பற்றிய  ஒரு சிறு எண்ணம் கூட நம் மனதில் தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
@avargal unmaigal

இப்படி நாம் விலகுவது நபர் என்றுமட்டுமல்ல எதிலிருந்தும் நீங்களே விலகிக் கொள்ளுங்கள், அது உயிருள்ள அல்லது உயிரற்ற பொருளாக இருக்கலாம். உங்களைத் திசைதிருப்ப முயற்சிக்கும் எந்த மூலத்திலிருந்தும், உங்களுக்கு அழுத்தம்,உங்களை எரிச்சலூட்டும்,
உங்களை எதிர்மறையாகப் பாதிக்கும் எதிலிருந்தும்

 அழிப்புதான்  உங்களின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்..  முடிந்தவரைச் சீக்கிரம் சரியானதைச் செய்யுங்கள். அதுமட்டுமே உங்களின் அதிர்ஷ்டகரமான் ஒரு செயலாக இருக்கும்..

 இப்படிச் செய்வதால் நாம் பதிலுக்குப் பெறுவது பெரும் அமைதிமட்டுமே


நச்சுத்தன்மையுள்ளவர்கள் ஒருவரை மனரீதியாகச் சிதைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாக்குவார்கள்.  இப்படிப்பட்டவர்கள் தனி நபர்களாக இருக்கலாம் அல்லது குழுவாகக் கூட இருக்கலாம் ஏன் பேஸ்புக் குழுவாகக் கூட இருக்கலாம் தனி நபர்கள் மட்டுமல்ல பேஸ்புக் குழுக்களும் பல தவறான தகவல்களைச் சொல்லி நம்மை மனரீதியாக சிதைக்கலாம் அழுத்தம் கொடுக்கலாம்

 நான் சில நச்சு நபர்கள் மற்றும் குழுக்களுடன் இருந்ததால் நானே  அதை அனுபவித்து இருக்கின்றேன்,

அது என்னை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது, ஆனால் அவைகளை, மற்றும் அவர்களை விட்டு வெளியேறிய பின் , எந்த மன அழுத்தமும் வரவில்லை மற்றும் நச்சுத்தன்மை நீங்கிவிட்டது!


எனது அனுபவத்தின் அடிப்படையில், நச்சுத்தன்மை இல்லாதவர்கள்  மற்றும் குழுக்கள்  போன்றவை பகிரும்  நல்ல விஷயங்களைப் பற்றியும் அது பற்றிப்  பேசத் தயாராக உள்ளவர்களுடன் தொடர்புகொள்வது சிறந்தது,


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நல்ல கருத்து மதுரை. ஆம் நெகட்டிவ் மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது. மனம் வளமாக இருக்கும்.

    பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, நச்சை விதைக்காமல் இருந்தாலே போதும், மனம் நோகப் பேசாமல் இருந்தாலே போதும்

    கீதா

    ReplyDelete
  2. மிகவும் யதார்த்தமான, வாழ்விற்குத் தேவையான கருத்துகள்.

    துளசிதரன்

    ReplyDelete
  3. சில சமயங்களில் சாத்தியம்; சில சமயங்களில் அசாத்தியம்!

    ReplyDelete
  4. மனத்துக்கண் மாசிலன்ஆதல் முதன்மையாக இருக்க வேண்டும்...

    அனுபவம் சிறந்த கற்றல்...

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு. அனுபவ அறிவு பல உண்மைகளை நமக்கு சொல்லித்தரும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.