Saturday, March 5, 2022

 

@avargal unmaigal

இதற்கு எல்லாம் வா என்னை ப்ளாக் பண்ணுவாங்க

நீயூஜெர்ஸியில் உள்ள தமிழ் சங்கத்தில் உள்ள முக்கிய பொறுப்பில் உள்ளவர் ஒருத்தர் கூட பேசிக்கொண்டு இருக்கும் போது , பேசினால் தீராத சண்டை ஏதும் இல்லை. உக்ரைன் ரஷ்யா போர் எல்லாம் தேவையில்லாத ஒன்று .இரு நாட்டு மக்களும் சகோதரர்களே என்று சொன்னார்..


அதை கேட்டுகிட்டு நமது வாய் சும்மா இருக்குமா என்ன?

உடனே அவரிடம்  பேசினால் தீராத சண்டை ஏதும் இல்லை என்று நீங்கள் சொல்வது உண்மையானால், நீயூஜெர்ஸியில் தமிழ்ச் சங்கத்திலிருந்து மனவேற்றுமை காரணமாகச் சண்டை போட்டுப் பல சங்கங்களாக பிரிந்து கிடக்கிறதே அதன் தலைவர்கள் எல்லாம் கூடிப் பேசினால் மீண்டும் ஒரே சங்கமாக உருவாகிவிடுமே நாம் எல்லாம் சகோதரர்கள் மாதிரிதானே என்று கேட்டேன்.


அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பதில் சொல்லாமல் என்னை ப்ளாக் செய்துவிட்டுப் போய்விட்டார்

ஆமாம் அப்படி நான் என்ன தவறா சொல்லிவிட்டேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நியாயமான கேள்வி தமிழரே...

    ReplyDelete
  2. சரியான கேள்வி!

    துளசிதரன்

    ReplyDelete
  3. பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டா!! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
  4. நல்ல கேள்விதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.