ஹிந்து தேசம் வருவதற்கு தூரம் இன்னும் அதிகமில்லை
இந்தியா சுதந்திரத்திற்கு முன்பே இந்து தேசம் வருவதற்குக் கனவு கண்டவர்கள் போட்ட விதை இன்று மரமாக வளர்ந்து பூ பூத்து காயாகி விட்டது அது பழமாகி கையில் வருவதற்கு இன்னும் குறைந்தது ஐந்தாண்டுகளாகிவிடும்... வருமா என்றால் கண்டிப்பாக வரும் என்பது என் எண்ணம்..
இது மோடி முற்றம் அமித்ஷாவால் நடப்பது அல்ல அவர்கள் எல்லாம் செஸ் விளையாட்டில் உள்ள ராஜா ராணி போன்ற காய்கள்தான் அந்த காய்களுக்கு பலம் அதிகமாக இருந்தாலும் அதை வைத்து விளையாடுபவர்களின் கையில்தான் வெற்றி தோல்வி என்பது இருக்கிறது .அந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் வேறு யாருமல்ல எல்லோராலும் சங்கிகள் என்று கேலி செய்யப்படும் ஆர் எஸ் எஸ் தலைமைதான்.
நாம் எல்லோரும் ஆர் எஸ் எஸ் ஆட்களை முட்டாள் என்று நினைத்து கேலி செய்கிறோம். ஆனால், அவர்களோ அதைச் சட்டை செய்யாமல் காரியமே கண்ணாக, நம்மை முட்டாளாக்கிக் கொண்டு அவர்கள் மௌனமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை
அவர்கள்தான் சுதந்திர இந்தியாவில் இந்து தேசத்திற்கு ஆதரவு அளிக்காமல் மதச் சார்பற்ற அரசு அமையக் காரணமாக இருந்த மகாத்மாவைச் சுட்டுக் கொன்று அதிலிருந்து தங்கள் ஆட்டத்தை மௌனமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி ஆடும் அவர்கள் பல நேரங்களில் தங்கள் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டு ஆளுபவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள், அதை வைத்து அவர்களை நாம் கேலி செய்கிறோம்..
ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் மன்னிப்பு கேட்பது யாருக்கும் பயந்து அல்ல. அவர்கள் மன்னிப்பு கேட்டு வெளியில் உலா வருவதன் காரணம் எதனாலும் தங்கள் நோக்கம் நிறைவேறத் தடையோ இடைஞ்சலோ வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்று நான் கருதுகின்றேன்
அவர்களின் ஒட்டம் ஆமை போல இருந்தாலும் இப்போது அவர்கள் வெற்றிக் கோட்டை தொட்டுவிடும் தூரத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை இந்த வெற்றிப் பாதை வரும் 2024 பொதுத் தேர்தலில் உறுதி பட்டுவிடும்
அதன் பின் இந்தியா புதிய இந்து தேசமாகிவிடும் அல்லது இந்துஸ்தான என்ற புதிய இந்தியாவாக மாறிவிடலாம். இந்த புதிய தேசத்தில் இந்துக்களைத் தவிர வேற் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள் பிறப்பால் இந்தியராக இருந்தாலும் அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே கருதி நடத்தப்படுவார்கள்.. அப்படி வருபவர்களிடம் இஸ்லாமியர்கள்தான் முதலில் வருவார்கள் அதன் பின் மற்ற மதத்தினர் படிப்படியாக வருவார்கள்
அந்த நேரத்தில் இந்து தேசம் என்று அழைக்கப்படும் இந்தியா சொர்க்க புரியாக மாறிவிடுமா என்றால் நிச்சயம் இருக்காது .அது பாகிஸ்தான் போலவோ ஆப்கானிஸ்தான் போலத்தான் இருக்கும் ஏன் இன்றைய இலங்கை போலக் கூட மாறிவிடும். காரணம் இந்தியாவின் மக்கள் தொகையாக 130 கோடியில் 25 கோடிக்கும் அதிகமானோர் முஸ்லீம்கள் அவர்களும் இந்த மண்ணில் பிறந்த இஸ்லாமியர்கள்தான். அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து விடமாட்டார்கள் ஏன் மற்ற நாடுகளும் அவர்களை வா வா என்று வரவேற்று அழைத்துக் கொள்ளாது. இது அடுத்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக நடக்கும்
அப்படி இருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு நடந்த இனவேறுபாடுகள் போல இங்குப் பிரச்சனைகள் கண்டிப்பாக எழும் உள்ளூர் போர் வரும் அன்னிய முதலீடுகள் குறையும், வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்
இப்படி இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசு செயல்பட்டால் மற்ற இஸ்லாமிய நாடுகள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா என்று கேட்டால் அதற்குப் பதில் அரபு நாட்டு இஸ்லாமியர்களுக்கு மற்ற ஏசிய நாட்டு இஸ்லாமியர்கள் எல்லாம் இரண்டாம் பட்ச இஸ்லாமியர்களே அதனால் அவர்கள் இந்திய அரசைச் சற்று கண்டிப்பார்களே ஒழிய முற்றிலும் அவர்களுக்கு எதிராக இறங்கிவிட மாட்டார்கள் .இதைச் சொல்லக் காரணம் பல இஸ்லாமிய நாடுகளில் அல்லது இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கு இவர்கள் இதுவரை ஒன்றுபட்டு ஏதும் செய்துவிட வில்லை என்பதுதான். இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட்டு இருந்தால் அவர்களும் மேலை நாடுகளுக்கு இணையாக வந்து இருக்கலாம் ஆனால் அவர்களிடம் ஒற்றுமை இல்லாததான வசதியான நாடுகளாகப் பல இருந்தாலும் அவர்கள் மற்ற நாடுகளின் உதவியைத்தான் பல விஷயங்களில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
இனி இந்திய வாழ் இஸ்லாமியகள் செய்யக் கூடியது இவைகள்தான் ஒன்று தங்கள் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டுமானால் அவர்களை நன்றாகப் படிக்க வைத்து மெதுவாக மற்ற நாடுகளுக்குப் பிராமணர்கள் போல இடம் பெயர்வதுதான் முதல் சாய்ஸ் அதன் பின் இந்தியாவிலே பெரும் பதவிகளில் அமர வேண்டும் அடுத்தாக செய்யக் கூடியது இரண்டாம் தரக் குடிமக்களாக ஏற்றுக் கொண்டு இந்தியக் கலாச்சாரத்தைப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டு இஸ்லாமியராக அமைதியாக இருப்பது... இறுதியாக இதை எல்லாம் செய்ய முடியாது என்பவர்கள் கையில் ஆயுதம் ஏந்தி சண்டையிட வேண்டும் அதைத் தவிர வேறு ஏதும் வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இன்றைய தேதியில் இந்துக்கள் கொள்கை அல்ல இந்துத்துவா கொள்கைகள் புற்றுநோய் போல மற்ற மாநிலங்களில் பரவிப் பாதிக்கத் தொடங்கிவிட்டன அது தமிழகத்தை இதுவரை அதிகம் பாதிக்கவில்லை என்றாலும் அது தமிழக எல்லைவரை அது பாதித்துவிட்டது என்று சொல்லாம். உடலின் எல்லா பகுதிகளிலும் புற்றுநோய் பரவி ஒரே ஒரு உறுப்பு மட்டும் பாதிப்பு அடையாத நிலை போலத்தான் இருக்கிறது.
இந்துத்துவா என்ற கேன்சாரல் இந்தியா என்னவோ உருக்குலைந்து போவது நிச்சயம்... அப்படி ஒரு நிலை வராமலிருக்க ஒரு புதிய தலைவர் அவதாரம் எடுத்துவந்தால் மட்டுமே முடியும் ஆனால் அது கண்ணிற்கு எட்டும் தூரம் வரை இல்லை என்பதுதான் நிஜம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : அடுத்த தடவையும் பாஜக மத்திய அரசை கைப்பற்றுமானால் ,நான் மேலே எழுதியவை நடை பெறுவதற்கான சாத்தியங்கள் வரும் வாய்ப்புக்கள் உண்டு என்பது என் மனதில் இன்று எழும் எண்ணங்கள்

மிகவும் சரியான கணிப்பாக எனக்கும் தெரிகிறது தமிழரே...
ReplyDeleteமுழுக்க முழுக்க உண்மை... பல வெங்கோலன்களை உருவாக்குவார்கள்...
ReplyDelete