Wednesday, March 2, 2022

 

@avargal unmaigal

ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்

ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்  அது புதிய திரைப்படமாகக்  கவிதையாக  ஒரு பொருளாகக்  கட்சியாகக் கட்சி தலைவராக அல்லது நடிகர் நடிகையாக இருக்கட்டும் உடனே  மக்கள் பலர்  சமுக இணைய தளங்களில் அதை அக்கு வேற ஆணி வேற பிரித்து விமர்சிக்கிறார்கள்.. அப்படி விமர்சிப்பவர்கள் தங்களின் புதிய வரவான காதலி/காதலன், கணவன்/மனைவி அல்லது அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள்  அவர்கள் கட்டிய புதிய வீடு அல்லது சமைக்கும் உணவுகள் அதைப் பற்றி பெருமைகள் பீற்றுவது தவிர விமர்சிப்பது இல்லை.. காரணம் அது உங்களின் படைப்பு என்பதால்தானே இது மாதிரிதானே மற்றவர்களுக்கும் அவர்கள் படைப்பு பெருமை மிக்கதாக இருக்கும்...

அதைக் குறை கூறி விமர்சிப்பதால் நமக்கு என்ன பெருமை ,அதைவிட அவர்களின் படைப்பில் இருக்கும் நிறைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சித்தால் அது நன்றாகத்தானே இருக்கும். நன்கு படித்தவர்கள் நன்கு சிந்திக்கத் தெரிந்தால் இப்படித்தான் விமர்சிப்பார்கள். அப்படி இல்லாமல் குறையும் மட்டும் சுட்டிக்காட்டி தங்களை மேதையாகக் காண்பித்துக் கொள்ளும் எல்லோருமே படித்த முட்டாள்கள்தான்


தங்களின்  சுயத்தை மேம்படுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பவர்களுக்கு , மற்றவர்களை விமர்சிக்க  நேரம்  இருப்பது இல்லை .. வெட்டி ஆபிஸர்கள்தான் அடுத்தவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்




அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. அப்படீனாக்கா... மோடிஜியின் குறைகளை சொல்லக் கூடாது'னு சொல்றீங்களோ...?

    ReplyDelete
  2. நல்ல கருத்து மதுரை. புதிய படைப்புகள் வரும் போது நிறைகளைச் சொல்லி, குறைகளை பாந்தமாக எடுத்துச் சொல்லி, எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் விமர்சனம் இருந்தால் அது படைப்பாளியை ஊக்க்ப்படுத்துவதாக அமையும். ஆரோக்கியமான சூழலையும் உருவாக்கும்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.