உண்மையான "நல்ல உறவுகள்" என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
உறவுகள் என்றாலே விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வதுதான் என்று பெரியவர்கள் பலர் சொல்லி நாமும் அதன்படி வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்... வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
இன்றைய உலகில் ஆண் மற்றும் பெண்களிடம் அதாவது கணவன் மனைவியிடம் கேட்டுப் பாருங்கள் உங்கள் உறவுகள் எப்படி இருக்கிறது என்று பல பேர் நான் உள்பட உறவுகள் நன்றாகத்தான் இருக்கின்றன என்றும் மற்றும் பலர் உறவே சரியில்லை என்றும் பாட்டுப் பாடுவார்கள் சரியில்லை என்பவர்களை விட்டுவிடலாம் ஆனால் எங்கள் உறவுகள் நன்றாக இருக்கிறது என்று சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி
உங்கள் மனதில் அந்த நிமிசத்தில என்ன என்ன தோணுதோ அதை எந்த ஒரு சென்சார் பண்ணாமல் ,கட் & எடிட் பண்ணாமல் பூசி முழுகாமல் வேற எந்த வித சாயம் பூசாமல் அப்படியே உங்களால் உங்கள் உறவிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா? இப்படி எந்த ஒரு விஷயத்தையும் அது மிகச் சிறியதாக இருந்தாலும் சரி மிகப் பெரியதாக இருந்தாலும் சரி
நாம் இதைச் சொன்னால் அவரின் அல்லது அவளின் மனசு காயப்படுமோ இல்லை ஏதாவது தப்பா புரிஞ்சு கொள்வார்களோ அதனால நம் உறவில் விரிசல் விழுமோனு என்று எந்தவித பயமும் இல்லாமல் நாம் எது சொன்னாலும் அதை அவர் அல்லது அவள் புரிஞ்சுக்கிற மனப் பக்குவமும் புரிதலும் இருக்கிறது என்று தோண வைக்கவேண்டும்... அப்படி உங்களால் இருக்க முடியுமென்றால் அது தான் ஒரு உண்மையான உறவு அப்படி இல்லை என்றால் அந்த உறவுகள் போலித்தனமானவைதான் என்ன அதில் விகிதாச்சாரம்தான் வித்தியாசமாக இருக்கும்
உண்மையான உறவு என்பது நம் உறவுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் செய்து கொண்டு போவது அல்ல நாம் செய்வதை நம் உறவுகள் புரிந்து கொண்டு அதை மதித்து நடந்து செல்லவேண்டும் அதாவது நாம் நாமாக இருக்க நம் உறவு நம்மை அனுமதிக்க வேண்டும் அதை மாற்ற முயற்சிக்க கூடாது, உங்கள் உறவைக் கவர நீங்கள் செயல்படவோ அல்லது வேறொருவராகவோ இருக்கத் தேவையில்லை. ஒரு உறவில் இருப்பது என்பது நீங்களாகவே இருப்பது. எல்லோரும் வித்தியாசமாகத்தான் இருக்கிறார்கள், ஆனால் உண்மையான உறவில் இருப்பது என்பது நமது பரஸ்பர வேறுபாட்டைக் கொண்டாட நம்மை அனுமதியளிக்குமாறு இருக்க வேண்டும்!
உங்களின் உணர்வுகள், உணர்ச்சிகள், நிதி, எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களைப் பகிர்வது உங்கள் உறவுடன் பகிர்வதுதான் தரமான உறவாக இருக்கும் இதுதான் முழுமையான உறவாக இருக்கும். இப்படி நீங்கள் பகிரும்போது, இணைக்கிறீர்கள். நீங்கள் இணைக்கும்போது, ஒரு அற்புதமான உறவு தொடங்குகிறது.
அற்புதமான உறவில் இருப்பது என்றால் காதலிப்பது என்று பொருள். அன்பு என்றால் ஏற்றுக்கொள்வது: நல்லதைப் புகழ்வது, குறைபாடுகளை ஏற்றுக்கொள்வது மற்றும் மாற்றத்திற்கான உத்வேகத்தை வழங்குதல். காதல் என்பது ஒரு கணமோ உணர்வோ அல்ல, அது ஒற்றுமையின் இருப்பு.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இணையத்தில் படித்த ஒரு கருத்தால் மனதில் எழுந்த எண்ணமே இந்த பதிவு.. இந்த பதிவு உங்கள் மனதில் ஏதேனும் சிந்தனைகளை எண்ணங்களைத் தோற்றுவித்தால் அதை இங்கே உங்கள் கருத்தாகப் பதியலாமே
நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே... பலர் அடுத்தவரைக் கவரவேண்டும் என ஆரம்பகாலத்தில் நல்லபிள்ளையாக நடித்துவிட்டு, பின்னர் திருமணமானதும் தான் உண்மைக்குணத்தை வெளிப்படுத்துகின்றனர், இதனாலும் பல இடங்களில் பிரச்சனை..
ReplyDeleteஎப்பவும் நாம் நாமாக இருந்திட்டால் நல்லதே..
Deleteஅதிரா உங்கள் கருத்திற்கு நன்றி.. இங்கு நான் சொல்ல வருவது நீங்கள் சொல்வது போல உள்ளவர்களை அல்ல... நல்லபடியாக வாழ்க்கையை கொண்டு சொல்லும் உங்களைப் போல என்னை போல உள்ளவர்களை பற்றிய உறவைத்தான்... நாம் நம் உறவுகளிடம் மனதில் நினைப்பதை எல்லாம் அப்படியே சொல்லிவிடுகிறோமா அல்லது நம் உறவுகளும் அப்படியே சொல்லிவிடுகிறார்களா என்பதுதான்.. அது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும்... நாம் சிலவற்றை நம் உறவிடம் சொல்லாமலேயே இருப்போம் காரணம் அந்த விஷயங்கள் அவருக்கு பிடிக்காது என்பதாலும் அல்லது அவரை காயப்படுத்து என்பதாலும் வேறு சில காரணங்களாலும் சொல்ல மாட்டோம் உதாரணமாக அவருக்கு நம் வழி குடும்பத்தி இருவரை பிடிக்காமல் இருக்கலாம் அப்படிப்பட்ட ஒருவரிடம் நாம் பேசினாலும் அவருக்கு பிடிக்காது அந்த சமயத்தில் அவருக்கு தெரியாம்ல் அவருக்கு பிடிக்காத நபரிடம் பேசுவது அல்லது அவருக்கு உதவி செய்வது போன்ற செயல்கள் இது போன்ற பல உதாரணங்களை சொல்லலாம்.
அது அவருக்கு பிடிக்காது சரி அதனால் அது நமக்கு பிடிக்காமல் ஏன் போகவேண்டும். அதனால்தான் சொல்லுகிறேன்
நாம் எது செய்தாலும் சொன்னாலும் அதை அவர் அல்லது அவள் புரிஞ்சுக்கிற மனப் பக்குவமும் புரிதலும் இருக்கிறது என்று தோண வைக்கவேண்டும்... அப்படி உங்களால் இருக்க முடியுமென்றால் அது தான் ஒரு உண்மையான உறவு அப்படி இல்லை என்றால் அந்த உறவுகள் போலித்தனமானவைதான்.
அருமை. ஆனால் இப்படி ஒரு புரிதல் ஏற்படுவது இந்த அவசர உலகத்தில் சாத்தியமா?
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜோசப் சார்... இந்த அவசர உலகில் சாத்தியாமா என்றால் சாத்தியமாக இருக்கும் உறவுகள் மட்டும் உண்மையான உறவுகள் மற்றைவை எல்லாம் போலித்தனமான உறவுகள்தான்... பல உறவுகள் சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் உண்மையான உறவுகளா என்று பார்த்தால் இல்லைதானே
Deleteஎல்லோர் மனதிலும் இன்னொரு மனிதன் வாழ்கிறான் அவன்தான் நிஜம் நண்பரே
ReplyDeleteகில்லர்ஜி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. கில்லர்ஜி அப்படி மனிதர்கள் வாழ்வதால் உறவுகள் உண்மையான உறவுகளாக இருப்பதில்லை...
Deleteஆழமான அலசல்...கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை...
ReplyDelete
Deleteகுருவிற்க்கு முதல் வணக்கம்.... உங்கள் வருகைக்குக் கருத்திற்கும் நன்றி குருவே..பதிவை படித்து புரிந்து ஒரு சில வார்த்தைகளிலே அருமையாக் பதில் சொல்லும் உங்கள் திற்மை வியக்கவைக்கிறது... மீண்டும் நீங்கள் வலையுலகில் அடி எடுத்து வைத்திருப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது
நல்லுறவு நீடிக்க வேண்டியும், அமைதி நிலவ வேண்டியும் மனைவியிடமே சமயங்களில் மனதில் அந்த கணம் நினைத்ததை சொல்ல முடிவதில்லை (அதேபோல் மனைவிக்கு கணவனிடம்) அப்புறம் எங்கே நினைத்ததை அப்படியே வெளியில் சொல்வது?
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம் நாம் அனைவரும் நல்லுறவு பேணவே விரும்புகிறோமே ஒழிய உண்மையான உறவு பேண முயற்சிப்பதில்லை. காரணம் நாம் அனைவரும் அந்த அளவிற்கு மெச்சுரிட்டி அடையவில்லை நாம் கற்ற கல்வியும் அதற்கு உதவவில்லை நம்மை வளர்த்தவர்களும் நமக்கு உண்மையாக உறவுகளை கற்றுத்தரவில்லை என்பதே உண்மை
Deleteஉன்மைதான்.. பெரும்பாலும் நீங்கள் குறிப்பிடும் உன்மையான உறவு தேவைப்படுவதே இல்லை... இந்த அளவு கோலில் எந்த உறவுமே உன்மையில்லை. நல்ல பதிவு. நன்றி
ReplyDeleteரமேஷ் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...உண்மையான உறவுகள் தேவைப்படுவதில்லை என்று சொல்லுவதை விட இன்றைய உலகில் அப்ப்டி இருக்க வாய்ப்புகள் அறிகிவிட்டன என்று சொல்லலாம்.. காரணம் போலியாக இந்த சமுகம் வாழக் கற்றுக் கொண்டு வாந்து கொண்டு இருக்கிறது...அதனால்தான் பல பிரச்சனைகள் தோன்றுகின்றது.
Deleteஅடுத்தாக இந்த அளவு கோலில் எந்த உறவும் உண்மையில் இல்லை என்பதை விட அந்த மாதரியான உறவுகள் கொஞ்சம் சிலவாக இருப்பதனால் அது வெளியுலகிற்கு அதிகம் தெரிவிதில்லை காரணம் போலியான உறவுகளின் ஆர்பாட்டத்தால் இதுமாதிரியான உறவுகள் அமுங்கி கிடக்கின்றன..
நான் கல்லூரிப் படிக்கும் போது மதுரையில் ரயில்வே காலனியில் வசித்த போது அங்கு என் வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தினர் இப்படித்தான் வாழ்ந்தார்கள் அதை நான் பார்த்து வியந்து இருக்கிறேன் ஆனால் அப்படி எல்லாம் இநத காலத்தில் பார்ப்பது மிகவும் அரிதுதான்
உங்கள் விளக்கத்திற்க்கு நன்றி.. நான் ஏற்க்கிறேன்
Deleteநல்ல பதிவு. நீங்கள் சொல்லுகிற படி பார்த்தால் கணவன் - மனைவி அல்லது காதலர்கள் மட்டுமே வாழ முடியும்.
ReplyDeleteதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இணைக்கப்பட்டுள்ள வலைப்பதிவுகளின் பட்டியல்: வலைப் பட்டியல்
சிகரம் பாரதி உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி... நீங்கள் என் பதிவை சரியாக படிக்காமலேயே கருத்தை பதிந்துவீட்டீர்கள் போல இருக்கு அல்லது நான் சொன்னவிதம் சரியில்லை போல இருக்கு
Deleteஎனது தளத்தை உங்களது தளத்தில் இணைத்து வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள் பல
Deleteரைட்டு நான் தெளிவா புரிஞ்சிக்கிட்டேன்
எனக்கு பிடிக்காதுங்கறதுக்காக என் கணவர் அசைவம் சாப்பிடாமல் இருந்தார் திருமணமான புதிதில் .பிறகு எனக்கே ஞானோதயம் வந்து அது தப்புன்னு புரிஞ்சி அவருக்காக சமைக்க ஆரம்பிச்சேன் .அவர் விரும்பினதை நான் தடுப்பது நியாயமில்லை.அதோட எனக்கும் சில விஷயங்கள் மனதில் தோணினா அதாவது அவர் கிட்ட உடனே சொல்லிடுவேன் . நான் சொன்னாலும் புரிந்து ஏற்கும் மனப்பக்குவம் அவருக்கிருக்கு
எனக்கும் இருக்கு .இதனால் நான் சொல்ல வருவது நமது ஆசைகளை விருப்பங்களை கொள்கைகளை கோபங்களை பிள்ளைங்க மேலும் திணிக்கக்கூடாது அதுபோல் பெட்டர் பாதி மீதும் திணிக்கக்கூடாது
ReplyDeleteஅது என்ன தெளிவா புரிஞ்சுக் கொள்வது? அப்படின்னா தெளிவில்லாமல் கூட புரிஞ்சு கொள்வாங்களா?
Deleteநல்லதொரு அலசல் நண்பரே.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்க்ட் ஜி!
Delete