Thursday, February 6, 2020

@avargal unmaigal
  IT raid  என்பது வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளி உடையாமல் இருக்கத்தானோ

ரஜினி :மோடிஜி நான் இந்த அரசியல் ஒட்டப் பந்தயத்தில் ஜெயிக்கணும் என்றால் விஜய்க்குக் காலில் கட்டுப் போடுங்கள்

மோடிஜி :ரஜினி விஜய் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் தனியாகத்தானே நிற்கிறார்.


ரஜினி :அதெல்லாம் தெரியாது அவர் காலை கட்டிப் போட்டால்தான் நான் தொடர்ந்து ஒடி போட்டியில் முதலாவதாக வெற்றி பெறுவேன்

மோடிஜி :யோவ் ரஜினி சரி அவர் காலை கட்டி அல்ல உடைச்சே போட்டுடுறோம் ஆனால் இப்படி முதலாவதாக வந்துடுவேன் என்று ஜோக் அடிக்காத கேட்க சகிக்கில்லை நீ மூன்றாவதாக வந்தாலே போதும்......அதை மட்டும் செய்.. அதன்பின் மூன்றை எப்படி முதலாக்குவது என்பது அமித்ஷாவிற்கு நன்கு தெரியும்..

அன்புடன்
மதுரைத்தமிழன்



ரஜினி தேர்தல் நேரத்தில் களம் இறங்கப் போகிறார்... அந்த நேரத்தில் விஜய்யும் களம் இறங்கலாம் என்று செய்தி பாஜகவிற்குக் கிடைத்து இருக்கிறது போல.. அப்படி நடந்தால் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளி உடைந்த கதையாகிவிடும் என்பதால் IT raid மூலம் மிரட்டிப் பார்க்கிறார்கள்

#WeStandWithVijay

https://avargal-unmaigal.blogspot.com/2020/02/blog-post.html
சில எண்ணங்கள் இங்கே கிறுக்கல்களாக.........

1 comments:

  1. கவனம்ங்க..வர வர உண்மைக்கும் உங்க கற்பனைக்கும் சம்மந்தமே இல்லாமல்ப் போச்சு. பாவம் உங்க தளப் பெயரில் மட்டும்தான் உயிரற்ற உண்மை செத்துக் கொண்டு இருக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.