Thursday, February 6, 2020

@avargal unmaigal
சில எண்ணங்கள் இங்கே கிறுக்கல்களாக.........



நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புக்கள் இன்றைய உலகில் இருக்க வாய்ப்புக்கள் அதிகம்


மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில உறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று உணர்த்தும் போதுதான் வாழ்க்கை வெறுக்க தோன்றுகிறது



நாம் தேவையில்லை என்று பிறர் நினைக்கும் முன் விலகி நிற்க கற்றுக் கொள்வதுதான் சிறந்தது . அது யாராக இருந்தாலும்......



கணவனோ ,மனைவியோ, பிள்ளைகளோ, அல்லது நட்புக்களோ மட்டும்தான் நம் உலகம் என்று நினைத்து கொண்டால் அவர்கள் பேசாத நிமிடம்கள் எல்லாம் உலகமே ஸ்தம்பித்து போவது போல ஒரு பிரம்மை தோன்றுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. வாசகங்கள் அருமை நண்பரே...

    ReplyDelete
  2. ஹலோ ட்ரூத் இது உங்க பதிவா !!! என்னாச்சு ஒரே நெஞ்சை கசக்கி பிழியறாப்ல இருக்கே ..இந்த feeling எனக்கு மட்டுமே தோணுதா ??
    சரி ஒன்னு சொல்லட்டா ..எப்பவும் பிள்ளையோ மனைவியோ யாரா இருப்பினும் ஒரு பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்கணும் personal space protects us from potential aggression, and,  it helps protect us from stress...கிறுக்கல்கள் மனசை சுருக் னு குத்திருச்சுப்பா .

    ReplyDelete
    Replies
    1. ஹ்லோ யாரோ இங்கே வழி தவறி வந்துவிட்ட மாதிரி இருக்கே......இது நிஜமா இல்லை கனவா.......கிள்ளி பார்க்கலாம் என்றால் பக்கத்துல யாருமே இல்லையே அட ஆண்டவா என்னை ஏண்டா இப்படி சோதிக்கிறே

      Delete
    2. கர்ர்ர்ர்ர் :)  இரண்டு நாள் வேலை இல்லாததால் பிளாக் அப்டேட்டிட்டு இருந்தப்போ உங்க போஸ்ட் பட்டுச்சு ஓடிவந்தேன் நெசம்மா அழுறீங்கன்னு நினைச்சிட்டேன் :) 
      ஸ்ஸ்ஸ்ஸ் வேலை போக ஆரம்பிச்சதில இருந்து எங்க வீடே எங்கிருக்குன்னு தெரிலன்னா பார்த்துக்கோங்க :) வழி எல்லாம் தெரியாமலில்லை  உங்க guardian angels   நீங்க அழுறீங்கன்னு சொன்னாங்க அதான் கண்ணீர் வருதான்னு செக்கிங் பண்ண வந்தேன் ஹாஆஆஆ  .

      Delete
    3. இன்று எனக்கும் லீவு நான் தனியாக இருந்ததால் கொஞ்சமா ப்டித்த்வைகளை மனிதில் போட்டு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன் அதனால் வந்ததுதான் இந்த கிறுக்கல்கள்

      Delete
  3. இவை கிறுக்கல்கள் இல்லை. இப்போதும் எப்போதுமே முகத்தில் அறையும் உண்மைகள்.

    ReplyDelete
  4. உங்களுக்கேயான தனித்துவமான நகைச்சுவை உணர்வின் இரசிகன் நான்.கிள்ளிப்பார்க்கலாம் என்றால் பக்கத்தில் யாருமில்லை என்பதெல்லாம் யோசித்தால் வராத அற்புத ரகம் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. மனது----க்கு நாம்நெருக்கமென்று நினைப்பவர் எல்லாம் அப்படி இல்லைஎன்று தெரியும்போது-------பலரும் அனுபவிக்கும் அவலம்தான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.