Sunday, February 16, 2020

@avargal unmaigal
இந்தியா  சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது 


டில்லி பல்கலை கழகத்தில் உள்ள நூலகத்தில் படித்து கொண்டி இருந்தவர்கள் மீது போலீஸார் லத்தியால் அடித்து விரட்டினார்கள்,,, ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.


இந்தியா வரும் டிரெம்பின் பார்வையில் குடிசைவீடுகள் தெரியாமல் இருக்க  நீண்ட சுவர் எழுப்பபடுகிறது,,  ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


எல்.ஐ.சியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை... ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது
.

ஏர் இந்தியா விமானம் தனியாருக்கு விற்பனை.. ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


3 மணி நேரம்; ரூ.100 கோடி; 10,000 போலீஸ்!' - ட்ரம்ப் வருகைக்காக -அகமதாபாத் ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் வேலையை இந்திய அரசு 1993-லேயே தடை செய்துவிட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்டது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது... ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


காங்கிரஸ் வெர்ஷன்  2.0 பாணியிலேயே கட்சியையும் அரசியலையும் நடத்திக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.. ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


ரஜினியின் வீட்டுக் கேட் சில வாரங்களாக திறக்கப்படவில்லை.. ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது

டெல்லியில் காங்கிரஸ் காலாவதியாகிவிட்டது... ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


டில்லி தேர்ததலில் பாஜக எட்டு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது மீதமுள்ள இடங்களில் மட்டும் ஆம் அத்மி வெற்றி பெற்று இருக்கிறது.. ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது



பொருளாதார நெருக்கடியில் இந்தியா நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 4.8% ஆக குறையும்: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


வரி விதிப்பிற்கு உட்பட்டோர் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன்வர வேண்டும்'' என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது


881 ரூபாய் தொட்ட மானியமில்லா சிலிண்டர் விலை! தடாலடியாக 147 ரூபாய் விலை உயர்வு!   ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது





கொசுறு :
 #ட்ரம்ப் வருகைக்காக 100 கோடி அளவில் செலவு செய்யும் மத்திய அரசுக்கு சில கோடிகள் செலவழித்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் முடியவில்லை... இதை சுட்டிக்காட்டினால்#AntiIndian என்பார்கள் ஆமாம் நமக்கு எதுக்கு வம்பு




அன்புடன்
மதுரைத்தமிழன்



தமிழ்மணம் செயல் இழந்த நிலையில் தமிழில் இணைய தளங்களில் எழுதுபவர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி.

2 comments:

  1. மக்களாக இருப்பவர்கள் தான் அரசியல்வாதிகள் ஆகிறார்கள். ஆனால் அரசியல்வாதி ஆனதும் மக்களுக்கே கடவுள் போல தங்களை நினைத்துக்கொண்டு அரக்கத்தனம் செய்கிறார்கள்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அஹமதாபாத்தில் டிரம்ப் வரும் பாதையில் சிறிய ஃப்ளெக்சுகள் மட்டும் பார்த்தேன். அதை ஒட்டி இருந்த பழைய குடியிருப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தன. ரொம்ப கோலாகலமான வரவேற்புப் பதாகைகளைப் பார்க்கவில்லை.

    என் கவலையெல்லாம் காங்கிரஸ் தேய்ந்து வருவதும், மாநிலக் கட்சிகள் மட்டும் கோலோச்சுவதும்தான். இது இந்தியாவிற்கு நல்லதுபோலத் தெரியவில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.