Sunday, December 9, 2018

கலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்


பேட்டை பாடல் வெளியீட்டு விழாவை பார்த்த பின்பு அதுவும் அதில் விஜய் சேதுபதியின் பேச்சையும் அனிரூத்துவின் இசையில் வெளிவந்த பாடலையும் கேட்கும் போது  சிவாஜி படத்திற்கு அப்புறம் வெளிவந்த படங்களான,எந்திரன், காலா, கபாலி, 2.0 சொதப்பல் படங்களை பின்னுக்கு  கழுவித் தள்ளிவிட்டு மீண்டும் ஒரு  பழைய ஒரிஜினல் ரஜினி படமாகப் பேட்டை வரும் என்று போலத்தான் தோன்றுகிறது


ஒரு காலத்தில் சிறந்த நடிகராக இருந்து நல்ல படங்களை தந்த பொழுது தலைவா என்று அழைத்து ஆட்சியை கைப்பற்றி இந்த கயவர்களிடம் இருந்து என்று கூக்குரலிட்டார்கள் ஆனால் அன்று அவர் வரவில்லை... அது போல அவர் தலைவராக இன்று வர முயற்சிக்கும் போது நீங்கள் பழைய சூப்பர் ஸ்டார் நடிகனாகவே இருந்து மக்களை மகிச்ச்சியில் ஆழ்த்துங்கள் அது போதும் எங்களுக்கு என்று மக்கள் சொல்லாமல் சொல்லுகிறார்கள்


ஒரு காலத்தில் கலைஞர் தனியாக கம்பு சுற்றி வெற்றி பெற்று வந்தார் அதன் பின் வெற்றி பெறுபவர்களை தன் கூட்டணியில் சேர்த்து கொண்டு வெற்றிகளை பெற்று அதை தன் வெற்றிகளாக காட்டிக் கொண்டார்.. அது போலத்தான் ரஜினியின் செயல்களும் இப்பொழுது இருப்பதாக எனக்கு தோன்றுகிறது...டைரக்டர் சங்கரின் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருப்பவர் இப்போது விஜய் சேதுபதியை தன் படத்தில் பங்கு கொள்ள செய்வதன் மூலம் தன் வெற்றியை மீண்டும் நிலை நாட்ட முயற்சிக்கிறார் போல.அதுதான் சாணக்கியதனம் அதை கலைஞரிடம் இருந்து ரஜினி கற்றுக் கொண்டிருக்கிறார்.

எது எப்படியோ ஒரு மிகச்  சிறந்த நடிகரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த படத்தை காணும் வாய்ப்புக்கள் கிடைக்கப் போகிறது

ரஜினிக்கும் விஜய் சேதுபதிக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. பழைய பிரபலங்களின் தந்திரம் அது. ப்ரபல இசை அமைப்பாளர்.இயக்குநர் ந்கைச்சுவ நடிகர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.இதில் இளைஞர்களைக் கவர்ந்த ப்ரபலங்களைஊம் சேர்த்துக் கொள்வது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.