Sunday, December 2, 2018

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க


என்னடா அமெரிக்கா இது முன்னாள் பிரெசிடெண்ட் புஷ் செத்துட்டாரு......கடைகள் அடைக்கமாட்டேங்கிறார்கள் விடுமுறைவிடமாட்டேங்கிறார்கள் யாரும் இது வரை தலைவன் இறந்துட்டான்னு தீக்குளிக்கவில்லை இப்படியெல்லாம் செய்யாமல் இருந்தால் நாங்கள் எப்படி அமெரிக்கா பற்றி சமுக வலைதளத்தில் மாய்ந்து மாய்ந்து எழுத முடியும் ஹும்ம்ம்ம்ம்ம்

உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! கனிமொழி

ஆமாம் கட்சி சார்பாக  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி கொடுத்துவிட்டு கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு மட்டும் பல கோடியில்  பணம் செலவழிப்பது மட்டும் சரியா என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

தேர்தல் சமயத்தில் மட்டும் கோயில்களுக்கு செல்லும் காங்கிரஸ் தலைவர்கள்: ராஜ்நாத் சிங் கடும் சாடல்
மோடி  தேர்தல் சமயத்தில் மட்டும்தானே  இந்தியாவிற்கு மட்டுமல்ல மக்களையும் சந்திக்க வருகிறார் என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க


செய்தி: புயல் பாதிப்பால் 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம்: தமிழிசை பரபரப்பு பேட்டி
என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க  தமிழிசை தமிழக தேர்தல் ஆணையாளராக மாறியது எப்போது?

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் - செங்கோட்டையன்.

ஆஹா ஆண்களின் முன்னேற்றம் தடை பெறுவதற்கு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதால்தான் என்று சீக்கிரம் என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

பெண்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதால்தான் ஆண்களின் ஸ்டேடஸுக்கு லைக்ஸ் அதிகம் கிடைக்கவில்லை என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க



 புயலால் வீடிழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உடனடியாக வீடுகட்டிதரப்படும் நிர்மலா சீதாராமன்

முதல்ல 15 லட்சம் தரதா சொன்னதை கொடுங்க நாங்களே வீடு கட்டி கொள்கிறோம்...

#GajaCycloneRelief


மோடியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்டது அர்ஜென்டினா நாட்டு டிவி
"G20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்டது அர்ஜென்டினா நாட்டு டிவி

அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில்;நடைபெற்ற ;ஜி-20; உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அவரது வருகை குறித்த செய்தி அங்குள்ள ஊடகங்களில் வெளியானது குறிப்பாக குரோனிகா என்ற செய்தி சேனலும் இதுகுறித்து கிண்டலாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

அபு வந்து சேர்ந்தார் என்ற தலைப்புடன் மோடியின் வருகை குறித்த செய்தி அத்தொலைக்காட்சியில் வெளியாகியிருந்தது. அர்ஜென்டினாவில் ஒளிபரப்பாகிற ;தி சிம்ப்சன்ஸ் என்ற பிரபலமான காமெடி கேலிச்சித்திர தொடரில் இடம்பெறும் கேலிக்குரிய இந்திய கடைக்காரர் ஒருவரின் கதாபாத்திரத்தின் பெயர்தான் அபு என்பதாகும். அத்துடன் அபு கதாபாத்திரத்தையும் செய்தியின் போது அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இப்படி ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரத்தின் பெயரில் மோடியின் வருகை செய்தியாக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் கடும் சிரிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

அந்த டிவி நிர்வாகத்திற்கும் ஆண்டி இண்டியன்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. அமெரிகா தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது.

    ReplyDelete
  2. தலைப்புப் பார்த்து ஏதோகொமெடி போஸ்ட் என உள்ளே தெரியாமல் கால் வச்சிட்டேன் ஹா ஹா ஹா:)..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.