சாதி சாக்கடையில் வழுக்கி விழுந்த தமிழகம்
சில நாட்களாக சமுக வலைதளம் பக்கங்கள் பக்கம வராமல் இப்போது வந்து பார்த்த பின்பு தான் தெரிகிறது தமிழகம் சாதி சாக்கடையில் விழுந்து நாறி கிடக்கின்றது என்று .கஜா புயலால் தமிழகத்தில் சில மாவட்டங்கள் அழிந்து கிடக்கின்றது ஆனால் இந்த சாதி புயலால் தமிழகம் சமுகமே நறிப் போய் கிடக்கின்றது
மோடியின் ஆட்சியில் கனிமொழி சிறந்த பாராளுமன்ற பெண் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 2ஜியில் ஊழல் குற்றவாளியாக கோர்ட்டில் அடைக்கப்பட்டார்
இலவசங்களை கொடுத்து கூட்டத்தை கூட்டலாம் என்று பகுத்தறிவு அரசியல் தலைவர்கள் கற்றுக் கொண்டது கோயில்களில் இருந்துதான். அங்குதான் சாமி பெயரில் விபூதி,குங்குமம்,புளியோதரை,பொங்கல், லட்டு என்று கொடுத்து கூட்டத்தை கவர்கிறார்கள்..,
கொசுறு :பெண்களே எப்பொழுதாவது, உங்கள் கணவரை ஆ ச்சர்யப்படுத்தவாவது, காபி, டீ தயாரிப்பதை மட்டுமாவது கற்றுக் கொள்ளுங்கள்
அவ்வளவுதான் சொல்லுவேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அரசியலில் இதெல்லாம் சகஜம்.
ReplyDelete