Friday, December 28, 2018

தமிழகத்தில் வசிப்பவர்கள் மனிதர்கள்தானா?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' எனப்படும் திட்டத்துக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த செய்தி மூலம் நாம் அறிந்து கொள்வது விண்வெளிக்கு அனுப்ப இந்தியாவில் சில மனிதர்களாவது இருக்கிறார்களே....... அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிக்கும்   மோடி அரசை நாம் பாராட்டியாகத்தான் வேண்டும்...

இப்படி மோடி அரசை பாராட்டும் போது உடனே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு  மோடி ஒன்றுமே செய்யவில்லை என்று கம்பு சுழட்ட கூடாது.......விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மோடிக்கு தமிழகத்தில் மனிதர்கள் வசித்தால் நிச்சயம் உதவி செய்யாமலா இருந்திருப்பார்... அவரை  பொறுத்தவரை தமிழகத்தில் வசிப்பவர்கள் மனிதர்களே அல்ல.. அதனால்தான் எந்தவித உதவியும் செய்ய்யாமல் இருக்கிறார்.....

இதை படித்த பின் தமிழகத்தில் வசிப்பவர்கள் மனிதர்களாக வாழ கற்றுக் கொண்டு மோடியை இந்தியாவை விட்டே விரட்டி அடிக்க முயற்சி செய்யுங்கள்


ஜெய்ஹிந்த்

அன்புடன்
மதுரைத்தமிழன்...


அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

  1. அந்த 10000 கோடியை செலவு செய்யப்போவது ஒரு தமிழர் தான். பெயர் சிவன்.
    ஜெயகுமார்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.