அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போதவில்லை என்றால் வேலையை தாராளமாக ராஜினாமா செய்யலாமே
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் என்பது ஒரு வேலையாகவே ஆகிவிட்டது இந்த அரசு ஆசிரியர்களுக்கு தன் தகுதிகளுக்கு இந்த சம்பளம் பற்றவில்லையென்றால் அந்த தகுதிக்கு ஏற்ற வேலையை பார்த்து கொண்டு இந்த வேலையாவது கிடைக்குமா என்று எதிர் பார்த்து கொண்டிருக்கும் இளைஞர்கள் இளைஞிகளுக்கு வழி விட வேண்டியதுதானே....இவர்களுக்கான சம்பளம் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதானே செல்கிறது... அரசு பள்ளியில் வேலை பார்க்கும் சில ஆசிரியர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்... அப்படிப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தாலாவது அதில் நியாயம் இருக்கும் ஆனால் அப்படி இல்லாமல் எல்லா ஆசிரியர்களும் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது சரியல்ல

இந்த அரசு ஆசிரியர்கள் கொண்டிருக்கும் தகுதிகளுக்கு சரி நிகராக தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த அளவு சம்பளமும் சலுகைகளும் கிடைக்கிறதா என்று எந்த ஒரு ஆசிரியரும் ஒப்பிட்டு பார்த்தது உண்டா?
அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் விடுமுறைகள் போல வேறு எந்த துறையிலும் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைக்கிறதா என்ன?
மற்ற துறையினரைப் போல வேலை பறிப் போய்விடுமோ என்று எந்தவொரு மன உளைச்சலும் இல்லாத நிரந்தர வேலை வாய்ப்பு.. பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும் பென்சன் இப்படியெல்லாம் பல வசதிகள் கிடைத்தும் ஆண்டு தோறும் வேலை நிறுத்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம்...
அரசு என்ன செய்ய வேண்டும் என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எல்லா ஆசியர்களுக்கும் அவர்களின் தகுதியை சரிபார்க்க அல்லது தகுதிகள் கொஞ்சமாவது நவினகாலத்திற்கு ஏற்ப மாறி இருக்கிறதா அல்லது அதற்கான தகுதிகளை வளர்த்து இருக்கிறார்களா என்று பார்க்க ஒரு பொது தேர்வை இந்த ஆசிரியர்களுக்கு வைக்க வேண்டும். அதில் அதிக ஸ்கோர் எடுத்து தேறிவருபவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தும் பாஸ் செய்வதற்கான ஸ்கோரை மட்டும் எடுத்து வருபவர்களை அதே சம்பளத்தில் வைத்தும் தேர்வில் பெயிலாகி விடுபவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு அவர்களுக்கு பதிலாக புதிய ஆட்களை நியமித்தும் வர செய்யவேண்டும் அப்படி செய்வதால் இப்படி வேலை நிறுத்தம் செய்வது தடுக்கப்படுவதோடு நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மாணவ்ர்களுக்கு கிடைப்பார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

இருக்குறதுலயே ஈசியான வேலை இதான். இதுல சைட் பிசினஸா ட்யூஷன், வட்டிக்கு விடுறது, வாடகை, விவசாயம்ன்னு பல இருக்கு
ReplyDeleteமிக நல்ல பதிவு மதுரை...
ReplyDeleteகீதா
வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு இப்படித் தோன்றுகிறது. உள்ளே என்ன நிலைமையோ.... உதாரணமாக போக்குவரத்துத் துறையில் ஒய்வு பெற்று பல வருடங்கள் ஆகியும் அவர்கள் பென்சன் பணம்,பிராவிடண்ட் பண்ட் பணம் கூட கைக்குக் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்று தெரிந்தபோது அவர்களை நினைத்தோமே என்று தோன்றியது.
ReplyDeleteம்ம்ம்ம்... கஷ்டங்கள் நிறைய உண்டு. அரசுப் பணி பல சமயத்தில் தொந்தரவு. Comparison is not.possible All time.
ReplyDeleteமக்களைத் திரட்டி அரசை மிரட்ட முடியாத போது தொழிற்சங்கத்தைப் பயன்படுத்தும் சில அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டு இது
ReplyDeleteஇன்றைய ஆசிரியர்களின் பணியைப் பற்றி, பணிச் சுமையைப் பற்றி எள்ளளவும் தெரிந்து கொள்ளாமல்,தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், வெளிவந்திருக்கும் தங்களின் பதிவு வருத்தத்தை அளிக்கிறது நண்பரே.
ReplyDeleteஅரசுப் பணியினை தனியோர் பணியோடு ஒப்பீடு செய்திருக்கிறீர்கள்.
ஆனால் அரசுப் பணி பார்ப்பவர்களுக்கு உள்ளேயே பெரும் வித்தியாசம் இருக்கிறதே , இதைஎன்ன செய்வது, இதை என்னவென்று சொல்வது?
நான் ஆசிரியர், எனக்கு ஓய்விற்குப் பிறகு பென்சன் உண்டு,
2004 ஆம்ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்கீட்டு ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நான் வாங்கப் போகும் ஓய்வூதியத்திற்கும், 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் வாங்கப் போகும் ஓய்வூதியத்திற்கும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்நிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான். ஆனால் தாங்கள் ஆசிரியர்களை மட்டுமே முதன்மைப் படுத்தி இருக்கிறீர்கள்.
தாங்கள் படித்தபோது இருந்த ஆசிரியர்களின் நிலை வேறு.
இன்றைய ஆசிரியர்களின் நிலை வேறு.
அரசு வழங்கும் அனைத்து விலையில்லா பொருட்களையும் வாங்கி வழங்கவேண்டியது ஆசிரியரின் பணி.
நான் ஒவ்வொரு மாணவனின் காலைப் பிடித்தும், காலணிக்காக அளவு எடுத்திருக்கிறேன்.
மக்கள் தொகை கணக்கெடுப்பா ஆசீரியர் செய்ய வேண்டும்,
தேர்தல் பணியா ஆசிரியர் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் ஆசிரியர் வாங்கிக் கொடுக்க வேண்டும்,
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியும் பணியினையும் பள்ளி செய்தாக வேண்டும்
மாணவர்களைத் திட்டக் கூடாது,
மனம் புண்படும்படிப் பேசக் கூடாது
படி படி என்று கண்டிக்கக் கூடாது,
மாணவனைக் கண்டித்தால் ஆசிரியருக்குத் தண்டனை உறுதி
தமிழ் நாடு முழுவதும், ஆசிரியவரைப் பற்றி புகார் வழங்க மாணவர்களுக்கு உதவுவதற்காக, தொலைபேசி எண்களை அரசே அறிவித்திருக்கிறது,
தாங்கள் படித்தபோதுஆசிரியரைப் பற்றித் தங்கள் தந்தையிடமாவது புகார் அளிக்க முடியுமா?
ஆனால் இன்று ஆசிரியரைப் பற்றி மாணவர், இல்லாததையும் பொல்லாததையும் புகாராக அளிக்கலாம்.
இன்று பணிப் பாதுகாப்பில்லாத ஒரே பணி, ஆசிரியர் பணி மட்டும்தான்,
அரசுப் பணிக்கும் தனியார் பணிக்கும் உள்ள பெரிய ஒரே ஒரு வித்தியாசமே, ஓய்வூதியம்தான்,
அதுவே இல்லை என்னும் நிலை வரும்போது, வீதிக்கு வந்துப் போராடுவது தவறா?
ஆசிரியர்கள் ட்யூசன் வைத்துச் சம்பாதித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
இன்று ஆசிரியர்களுக்கு ட்யூசன் நடத்த நேரமே கிடையாது.
காலை எட்டு மணிக்கே பள்ளியில் கோச்சிங் தொடங்கிவிடும்
மாலை ஆறு மணி சில பள்ளிகளில் ஏழு மணி வரை கோச்சிங் நடைபெறுகிறது
சனிக் கிழமைகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்.
இன்றைய ஆசிரியர்களுக்கு குடும்பத்தோடு இருப்பதற்கே நேரம் கிடையாது.
தங்களைப் போல் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் நிலையும்,
எங்களைப் போல் ஆசிரியர் பணியாற்றுபவர்களின் நிலையும் ஒன்றுதான்.
தினம் தினம் மாலை வீட்டிற்கு வருகிறோம்,.அவ்வளவுதா
ஆனால் குடும்பத்திற்காக எதுவூம் செய்ய நேரம் கிடையாது.
ஒருநாள் குடும்பத்தோடு, மனைவி பிள்ளைகளோடு, வெளியில் செல்ல வாய்ப்பு கிடையாது
நான் கூறியது, Tip of an Ice burg
இன்னும் எவ்வளவோகூறலாம், எங்களின் இழி நிலை பற்றி
தங்களுக்கு ஆசிரிய நண்பர்கள் எவரேனும், தமிழகத்தில் இருப்பின், ஒரு முறை
ஒரே ஒரு முறை அவரை அலைபேசியில் அழைத்து, உண்மை நிலவரத்தை, இன்றைய போராட்டத்திற்கான காரணத்தின் பின் உள்ள உண்மை நிலைகளை அறிய முயலுங்கள்.
ஏனென்றால் தங்களின் பதிவு, இலட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடையும் தன்மை உடையது,
தங்களின் பதிவினைப் படிப்பவர்களின் மனதில்,ஆசிரிகர்களைப் பற்றிய தவறான பிம்பத்தை தங்களின் பதிவு ஏற்படுத்திவிடும் பாதிப்புகள் அதிகம்.
எனவே தங்களுக்குத்தெரிந்த ஆசிரியரேடு பேசி, பின் பதிவிடுங்கள்
இது என் தாழ்மையான வேண்டுகோள்
Deleteஉங்கள் பக்கம் உள்ள பிரச்சனைகளை சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு நன்றி ஆனால் அதில் சொல்லிய பல கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன். நாளை நேரம் கிடைக்கும் போது வந்து பதில் கருத்துக்கள் சொல்லுகிறேன்.. நன்றி
Madurai Tamilan - u are giving wrong statement.
ReplyDeleteAs Karandai Jayakuamar says correct.