Saturday, December 15, 2018

இறைவன் கொடுத்த வரம்


இந்திய நாட்டில் என்னவொரு பிரச்சனைகள் இருந்தாலும் வாரம் ஏழு நாட்களும் சும்மா சும்மா தின்னுட்டு தூங்கி எழுந்துச்சு அரசு பதவியில் ராஜபோகமாக இருக்கும் ஒரே ஒருவர் இந்திய ஜனாதிபதி மட்டுமே

நடிகர்களிடம் போய் இந்த பிரச்சனைகளுக்கு உங்கள் கருத்து என்ன? அந்த பிரச்சனைகளுக்கு கருத்தே சொல்லவே இல்லையே என்று மைக்கை நீட்டி கேட்கும் ஊடக செய்தியாளர்கள் இந்த ஜனாதிபதியிடம் போய் அப்படி கேட்பத்தில்லை


#ரபேல் விமான ஊழல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு புரோமோஷன் வந்தாலோ அல்லது அவரது , அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் அதிகரித்தாலோ அந்த தீர்ப்பு நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட தீர்ப்புதான்#மோடி சட்டம்

தமிழர்களுடன் மோடி வீடியோ கான்பிர
ன்ஸ் மூலம் உரையாடினாராமே? ஆமாம் அவர் தமிழகத்திற்குள் வந்தால் விரட்டி அல்லவா அடிக்கிறார்கள் அதனால்தான் இப்படி வீடியோ கான்பிரன்ஸ்


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக (அதிமுக அரசு )நாங்கள் போட்ட தீர்மானம் ஐ.நா சபைக்கு சென்றாலும் செல்லும்னு  என்று சொன்னது உண்மைதான் ஆனால் அது சென்ற இடம் இந்திய நீதிமன்றத்திடம் அல்லவா அதனால்தான் அது அந்த தீர்மானத்தை குப்பை தொட்டியில் தூக்கி போட்டுவிட்டது போல,,,,,

13 பேரை சுட்டு கொன்ற வழக்கில் தீர்ப்பு சொல்லுவதற்கு அவசரப்படாத இந்திய நீதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு போட்ட தீர்மானத்தை குப்பை தொட்டியில் தூக்கி போடச்  சொல்லி தீர்ப்பு வழங்கி இருக்கிறது



நாட்டுக்காக உயிரை கொடுப்பேன் என்று  பொய்யாக வசனம் பேசுபவன் யார் என்று பார்த்தால் சோற்றுக்காக பாஜகவில் கூஜா தூக்குபவனாகவே இருப்பான். அது போலத்தான் மோடிக்காக எதுவும் செய்யுவேன் என்று சொல்லுபவன் கூலிக்காக பாஜகவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான். அந்த கூலி கிடைக்காவிட்டால் மோதியாவது மூதியாவது என்று போய்க் கொண்டிருப்பான்


 ///7 லட்சம் கோடி முத்ரா கடன் தொகையை மோடி அரசு இந்தியா முழுக்க மக்களுக்கு வழங்கியுள்ளது. 72000 கோடி கடன் தொகையை பெற்று பயன்படுத்திக் கொண்டு முதல் நிலையில் இருக்கும் மாநிலம் தமிழகம்.///

அந்த லோன் முட்டு கொடுக்கும் பக்தாள்ஸ்க்கு மட்டும் கிடைக்குமாம். அதனால்தான் அவர்கள் இன்னும் மோடிக்கு முட்டு கொடுக்கிறார்கள் போல...இப்ப தெரியுதா பக்தாள்ஸ் ஏன் இப்படி முட்டு கொடுக்கிறார்கள் என்று?

அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு:

எழுதி பதிந்தவர் :kanagaraj

ரஃபேல் விலைவிபரம் சிஏஜி அறிக்கையில் இருக்கிறது.அதை பொதுகணக்கு குழு பார்த்து நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறது சந்தேகப்படஏதுமில்லை          -உச்சநீதிமன்றம்

யுவர் ஆனர்!நடக்க வேண்டியதை சொன்னோம்.நடந்ததாகச் சொல்லவில்லை- அரசு
நீதிமன்றத்தையே ஏமாத்திட்டோம்.மக்களையா ஏமாற்றமுடியாது- பாஜக



15 Dec 2018

3 comments:

  1. எதற்கும் ஒரு பதில் வைத்துள்ளவர்களை என்னவென்று அழைப்பார்கள்.....?

    திருடர்கள்...!

    ReplyDelete
  2. ஜனாதிபதியின் நிலைப்பாடு உண்மையே...

    ReplyDelete
  3. எல்லாமே ஏதோ பெர்செப்ஷனின் விளைவே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.