| 
 
 
 
 
தமிழகத்தில் பெய்யும் மழையால்
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மழை மக்களுக்கு
மட்டுமல்ல தமிழக மற்றும் இந்திய தலைவர்களுக்கு இயற்கை அளிக்கும் ஒரு  சிறிய எச்சரிக்கைதான். அதை புரிந்து கொண்டு செயல்பட்டால்
வருங்கலாத்தில் பேரழிவு ஏற்பட்டாலும் மிக எளிதாக சமாளிக்க முடியும். 
 
 
இப்படி  இயற்கையை சமாளிக்க பொதுமக்கள்தான் முயற்சி எடுக்க
வேண்டும் அதற்கு முதல் முயற்சி இலவசங்களை அரசாங்கத்தினரிடம் இருந்து எதிர்பார்ப்பதை
தவிர்க்க வேண்டும். அப்படி இலவசங்களை எதிர்பார்த்தால் தலைவர்களும் மக்களுக்கு இலவசங்களை
மட்டும் தருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு நாட்டுக்கு ஏதும் செய்யாமல் தங்களின் வசதிகளை
பெருக்கி கொள்ள மட்டுமே முயற்சிப்பார்கள் 
 
அதனால் இலவசங்களை
ஏற்காமல் நமக்கு தேவையான குடிநீர், வடிகால் வசதி, சாலை, மருத்துவம் மற்றும் சுற்றப்புற
சுகாதாரம் போன்றவை கேட்டு அல்லது போராடியாவது பெற வேண்டும். இது கட்சி சார்பற்று எந்த
அரசானாலும் மக்கள் தட்டி கேட்க வேண்டும். 
 
இப்படி நீங்கள் தட்டி தட்டி
கேட்டால்தான் அவர்களும் கொஞ்சமாவது திட்டம் தீட்டி செயல்படுத்துவார்கள். ஆனால் நீங்கள்
அதையெல்லாம் கேட்காமல் தலைவர்கள் தரும் சில இலவசங்களைப் பெற்றுக் கொண்டு எப்படியாவது
குறுக்கு வழியில் சம்பாதித்தாவது ஒரு வீடு கார் மற்றும் சினிமா பார்த்து விட்டு ஹோட்டலில்
சாப்பிட்டு வந்தால் போதும் என்று நினைத்து வந்தால் இப்படி இயற்கையால் ஏற்படும் பாதிப்பில்
எல்லாவாற்றையும் இழந்து நடுத்தெருவில்தான் இருக்க வேண்டும்..  
 
அதனால் மக்களே உங்கள் உரிமைக்காக
நீங்கள் உரத்து குரல் கொடுங்கள்.....உங்கள் உரிமையை தட்டிக் கேளுங்கள்.... உங்களுக்கு
இப்படி ஒரு விழிப்புணர்வு வரவே இயற்கை இந்த மழை மூலம்  தேர்தல் வரும் முன் ஒரு சிறிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆளும் கட்சியை மட்டுமல்ல ஆண்ட கட்சியின் தலைவர்களையும்
தட்டிக் கேளுங்கள். 
 
ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும்
இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உண்மையில்
என்ன செய்கிறது என்ன செய்யப் போகிறது என்று நன்கு கவனியுங்கள். அதன் பின் வரும் தேர்தலில்
உங்கள் வாக்குகளை அதற்கு தகுந்தபடி இட்டு மாற்றத்தை கொண்டு வாருங்கள்.  இந்த மாற்றம் வழக்கமாக இருக்கும் மாற்றம் அல்லாமல்
அதாவது அதிமுக 5 ஆண்டு அதன் பின் திமுக ஐந்தாண்டு இல்லாமல் உங்களின் வாழ்வில் மாற்றத்தை
ஏற்படுத்து கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள்.. 
 
இப்படி எல்லாம் தட்டி கேட்பதற்கு
முன்பு  தடையில்லா தண்ணீர் செல்லும் பாதை எந்த
அளவு முக்கியம் என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும் குப்பைகளையும், உணவு
மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளையும் இனிமேலாவது கழிவு நீர் செல்லும் பாதையில் எறிவதை தவிர்ப்போம்.
அப்படியும் மீறி எறிபவர்களிடமும்  நாம் முடிந்த
வரையில் எடுத்துறைத்து தடுப்போம். சுகாதாரத்தை பேணுவோம் 
 
மேலும் இந்த வெள்ளம் வடிந்த
பின் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரிசெய்ய
நடவடிக்கை எடுக்க  அரசாங்கத்திடம் போராட வேண்டும்
அதை செய்ய உங்களால் முடியுமா? இதுக்கு முழுக்க முழுக்க மனித தவறேதான் காரணமன்றி\. இயற்கையின்
தவறு கிடையாது. இது இயற்கை தரும் ஒரு சிறிய எச்சரிக்கையே..  
 
 
அன்புடன் 
மதுரைத்தமிழன் 
 
படித்ததில் பிடித்தது
 
Arumuga Selvam  சென்னைல தேசிய கீதம் போட்டுபாருங்களேன். மழை நிக்குதானு
பார்ப்போம் 
 | 
 
 
 
 
Tamil Nadu  
Helpline Numbers :
Tree
      fall, Water logging - 1913 Sewage
      overflow - 45674567, 22200335State
      Emergency: 1070District
      Emergency: 1077Electricity:
      1912Fire
      & Rescue: 101 Chennai
     corporation have announced Emergency Contact Numbers for all the regional
     zones in the city. 
 
For
emergency people can contact following Regional Office numbers.1st Regional Office(Tiruvottiyur) – 9445190001
 2nd Regional Office(Manali) – 9445190002
 3rd Regional Office(Madhavaram) – 9445190003
 4th Regional Office(Tondiarpet) – 9445190004
 5th Regional Office(Royapuram)- 9445190005
 6th Regional Office(Thiru. Vi. Ka. Nagar) – 9445190006
 7th Regional Office(Ambattur) – 9445190007
 8th Regional Office(Annanagar) – 9445190008
 9th Regional Office(Teynampet) – 9445190009
 10th Regional Office(Kodambakkam) – 9445190010
 11th Regional Office (Valasaravakkam)- 9445190011
 12th Regional Office(Alandur) – 9445190012
 13th Regional Office (Adyar)- 9445190013
 14th Regional Office(Perungudi) – 9445190014
 15th Regional Office(Sholinganallur) – 9445190015
 
 
 I CHENNAI
 
 1 Fort-Tondiarpet 94450 00484
 2 Purasawakkam-Perambur 94450 00485
 3 Egmore-Nungambakkam94450 00486
 4 Mylapore-Triplicane 94450 00487
 5 Mambalam-Guindy 94450 00488
 
 II THIRUVALLUR
 
 6 Ambattur 94450 00489
 7 Ponneri 94450 00490
 8 Gummudipoondi 94450 00491
 9 Thiruthani 94450 00492
 10 Pallipattu 94450 00493
 11 Thiruvallur 94450 00494
 12 Uthukottai 94450 00495
 13 Poonamallee 94450 00496
 
 III KANCHEEPURAM
 
 14 Kancheepuram 94450 00497
 15 Uthiramerur 94450 00498
 16 Sriperumbudur 94450 00499
 17 Chengalpattu 94450 00500
 18 Thirkkalukunram 94450 00501
 19 Tambaram 94450 00502
 20 Madurantakam 94450 00503
 21 Cheyyur 94450 00504
 
 
Watch
     out for official news from the authorities, and do not trust WhatsApp
     forward messages.   
 
 
சென்னையின் அனைத்து பள்ளிவாசல்களிலும் மதவேறுபாடின்றி தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைந்து கொள்ளுங்கள்..
 சில பள்ளிகளில் மட்டும் உணவு ஏற்பாடு காலதாமதமாகலாம்.
 | 
நாம இனியாவது இலவசங்களுக்கு ஆசைப்படாமலும், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமலும், ஏரிகளில், கால்வாய் வழித்தடங்களில் வீடு கட்டாம இருக்கனும்.
ReplyDelete"மதிப்பெண் எடுக்க மட்டும் பாடம்" என்றிருந்தவருக்கு எல்லாம் இன்று சரியான பாடம்... (அவர்களுக்கு உணர்ந்து திருந்துவது என்பது வாய்ப்பே இல்லை...)
ReplyDeleteஇலவசங்களை ஏற்காமல்...உண்மைதான் மதுரைதமிழன். இது சாத்தியமா..!!??
ReplyDeleteமுழுக்க முழுக்க மனித தவறேதான் ///புரிகிறது ...என்ன செய்ய இப்போது? பரிதாபமாக இருக்கிறது...தகவல் தொடர்பு இல்லாமல்...தீவாக....இந்த முறையேனும் திருந்தியாகனும்...
ReplyDeleteகண்டிப்பாக சார்... இயற்கையை நாம் எச்சரித்தால் இது தான் நடக்கும்..
ReplyDeleteகருத்தில் கொள்ளப்பட வேண்டிய பதிவு. கவனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம்.
மிக மிகச் சரியே தமிழா! இதோ இப்போதே 5000 ரூஆய் கொடுத்து மக்களின் வாயை மூட முயற்சிகள் நடக்கின்றனவாமே...இது முழுவதும் நம் மக்களின் தவறுதான். இனியேனும் மக்களும் தலைவர்களும் புரிந்து கொண்டால் நலமே...இயற்கை நன்றாகவே சீறி எச்சரித்துள்ளது. திருந்துவார்களா மக்கள்?
ReplyDeleteநல்ல கட்டுரை
ReplyDeleteநல்ல கட்டுரை
ReplyDeleteபோன வாரம் மழை ஓய்ந்த பிறகு சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தார்கள். ஆனால் வாரிய குப்பைகளை அகற்ற வில்லை.
ReplyDeleteநேற்று பெய்த மழையில் திரும்பவும் சாக்கடை அடைத்துக்கொண்டது.............!!!
😭
இந்த இயற்கை சீற்றத்தை நல்லதொரு பாடமாக அரசும் மக்களும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டால் நல்லது.
ReplyDeleteஹ்ம்ம் சரிதான் சகோ..இப்பொழுதும் உணர்ந்து மாறாவிட்டால்..விமோசனமே கிடையாது
ReplyDeleteஇந்த இயற்கை சீற்றத்தையும், நிவாரண பணிகளையும் வைத்து அரசியல்வாதிகளும் அரசு துறையினரும தற்சார்பாக கருத்து சொல்லிக்கொண்டிருக்க நீங்க தெளிவா ஒரு உண்மையை எடுத்து வச்சிருக்கீங்க.. உங்க எண்ணத்தை என் எண்ணமாகவும் எடுத்துக்கொள்கிறேன். சரியா சொல்லியிருக்கீங்க.. நீங்க பொழுது போக்கா மட்டும் எழுதலை .. நிறைய சிந்திக்கவும் வைக்கிற மாதிரிதான் இருக்கு உங்க எழுத்துக்கள்....
ReplyDeleteநீரின் வழித்தடங்களை வீடுகளாக்கிய கட்டிங்களாக மாற்றியவர்கள் இன்று துன்பம் அடையவில்லை, எதுவும் அறியா மக்கள் தான்,,,,,,,
ReplyDeleteசமீபத்தில் படித்தேன்,
இந்த இடத்தில் பிளாட் வாங்கினால் ஏர்போட் பக்கம், பள்ளி பக்கம், சூப்பர் மார்கெட் பக்கமாக இன்னும் என்னெல்லாமோ பக்கமாக வரும் என்று சொன்னவர்கள் மழைவந்தால் வெள்ளம் வரும் என்று சொல்லவில்லை என்று,,,,,,,,,,,,,
இயற்கையிடம் பாடம் கற்று நாம் சரியானால் சரி, இல்லை எனில் இன்னும் இருக்கு நமக்கு,,,,
நல்ல பகிர்வு, நன்றி.
நான் இங்கே இட்ட கருத்தை சென்சார் செய்து வெளியிடாமல் இருக்கும் மதுரை தமிழனை "கலிபோர்னியா தமிழ் கணக்கு பிள்ளை" சங்கத்தின் அடிமட்ட உறுப்பினர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteஎந்தா விசு சார் உங்க கருத்தை நான் என்றாவது சென்சார் பண்ணி இருக்கேனா? என் தளத்தில் போட வேண்டிய கருத்தை வேறு எங்காவது போட்டு இருப்பீர்கள் நன்றாக பாருங்கள் சாரே
Deleteஎந்த பாடத்தையும் அதிக விலை கொடுத்தே கற்க வேண்டியுள்ளது. வேதணைதான். வெயில் அடித்த அடுத்த இரண்டு நாளில் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்.
ReplyDelete