Wednesday, December 9, 2015



avargal unmaigal
சென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள்


வெள்ளத்தால் அழிவது அநேகம் என்றாலும் அதனால் வளர்வது ஒன்றே ஒன்றுதான் அது மனித நேயம் மட்டுமே

தன்னார்வ தொண்டர்கள்  கொடுப்பதை, தாங்கள் கொடுப்பதாக காட்டிக் கொள்ளும் கட்சியாளர்கள், தங்கள் குழந்தைகள் என்று சொல்லுபவர்களை அவர்கள்தான் பெற்று எடுத்தார்களா அல்லது வேறு எவனுக்காகவது பிறந்த குழந்தைகளை தன் குழந்தை சென்று சொல்லி அழைகிறார்களா?

தமிழ் நாட்டில் பல குடும்பங்கள் தண்ணில மிதக்க காரணம் ஏரியை திறந்துவிட்டதும் டாஸ்மாக்கை திறந்துவிட்டதும்தான் காரணம்


மக்களே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்களில் தமிழக அரசு முத்திரை இல்லாமல் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டபட்டிருந்தால் அதை வீணாக்காமல் எங்கெல்லாம் கழிப்பறைகள் குப்பை தொட்டிகள் உள்ளதோ அங்கே சென்று அந்த ஸ்டிக்கரை ஒட்டிவிடுங்கள் வேஸ்ட் மட்டும் செய்யாதீர்கள்.

அரசியல் வாதிகள் புத்திசாலிகள் அவர்கள் சம்பாதிக்கவே அல்லாமல் சேவை செய்ய அரசியலுக்கு வரவில்லை. ஆனால் அது தெரியாமல் அவர்களை சரியாக தேர்ந்தெடுக்க தெரியாத மக்கள்தான் முட்டாள்கள்

மக்களுக்கு சேவை செய்யும் நல்லவர்களை ஒதுக்கி வைத்து பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களை தேர்ந்து எடுத்துவிட்டு அவர்கள் நமக்கு சேவை செய்யவே மாட்டேங்கிறார்கள் என்று புலம்புவதுதான் தமிழர்களின் வழக்கமாக இருக்கிறது

சென்னை வாழ் மக்களே பெரிய கட்சிகளின் தலைவர்கள் உங்களை வந்து பார்த்து ஆறுதல் சொல்ல வரவில்லை என்று வருந்தாதீர்கள். நிச்சயம் அவர்கள் தேர்தலுக்கு முன்பு கட்டாயம் உங்களை வந்து சந்தித்து ஆறுதல் சொல்ல வருவார்கள். அப்ப வந்து எப்படி ஆறுதல் சொல்வது என்பதற்காக இப்போது ஸ்கிரிப்ட் எழுதி பேசி நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயிற்சி முடித்ததும் கண்டிப்பாக உங்கள் முன்னால் நடித்து கட்டுவார்கள். அதை பார்த்து உங்கள் மனம் உருகிவிடப் போவது என்னவோ உண்மைதான்


ராணுவதளபதி போல செயல்பட்டார் ஜெயலலிதா என்று  செய்தி தெரிவிப்பதன் மூலம் இந்திய ராணுவ தளபதிகளை கேவலப்படுத்தியுள்ளது தினமலர்

தமிழக அமைச்சர்கள் தங்கள் துணைகளுடன் உறவு கொள்ளும் முன் இந்த உறவை நான் மாண்புமிகு  அம்மாவின் ஆசியுடன் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார்களா? அப்படி சொல்லி ஆரம்பிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா# எனக்கொரு டவுட்டு

வெள்ள நிவாரண பொருட்களின் மீது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் தங்கள்தலைவர்களின் படங்களை ஒட்டு ஒட்டு என்று ஒட்டுலாம் ஆனால் அந்த தலைவர்கள் மீதான மதிப்பு மக்களின் மனதில் இருந்து நீக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்


அதிமுகவுடன் கூட்டணி வைத்து சென்னை மற்றும் கடலூர் தொகுதிகளில் போட்டியிட(தற்கொலை) வேட்பாளர் தேவை என்று அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளிவரும். இந்த பகுதியில் உள்ள தொகுதியில் சரத்குமாருக்கு ஒரு தொகுதி கட்டாயம்

கலைஞருக்கு முள்ளிவாய்க்கால் என்றால் ஜெயலலிதாவிற்கு இந்த வெள்ளக்காடு பதில் அளிக்கும்

வெள்ள நேரத்தில் தண்ணியில மிதக்க வேண்டியவர்களை காப்பாற்ற வேண்டிய ஜெயலலிதா அரசு  இந்த வெள்ள நேரதிலும் டாஸ்மாக் கடைகளை திறந்து  மக்களை தண்ணியில மிதக்கவிடுகிறது #அம்மான்னா சும்மாவா அம்மா அம்மாதாண்டா

மக்களுக்கு கொடுக்கும் வெள்ள நிவாரண பொருட்களில் செருப்பு இருந்தால் அதில் ஜெயலலிதாவின் படத்தை அதிமுக தொண்டர்கள் ஒட்ட மறந்து இருந்தாலும் வாங்குபவர்கள் கண்டிப்பாக ஒட்டிவிடுங்கள்..மக்களை மதிக்க தவறியவர்களுக்கு தகுந்த இடம் அதுதான்


டிஸ்கி : அட போங்கப்பா சென்னையின் வெள்ளத்திற்கு அப்புறம் நம் தமிழக மக்களின் மனிதாபிமான செயல்களை இங்கிருந்து பார்க்கும் போது பேசாம தமிழகத்திற்கு வந்துவிடலாமா என்று மனசு நினைக்கிறது.

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. மக்கள் தான் முட்டாள்கள் என்று ஒவ்வொரு தேர்தலும் புரிய வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒரு தவறை ஒரு முறை,இரு முறை செய்யலாம், ஆனால் நாம் அந்த தவறையே ஒவ்வொரு தேர்தலிலும் செய்து கொண்டே தான் இருக்கிறோமே!.

    நம் மக்கள் முட்டாள்கள் தான் ஆனால் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று இந்த மழை புரிய வைத்திருக்கிறது.

    ReplyDelete
  2. வந்துருங்க உங்களுக்கு ஓட்டு போடறோம்.....................

    ReplyDelete
  3. top class பதிவு! அதுவும் கருப்பும் சிவப்பும் கலந்து கட்டி! செம நக்கல் நையாண்டியால் அடி! உண்மை மனித நேயம்!!! படம் அழகு அருமை!

    கீதா: வெள்ளம் எதைக் கற்றுத் தந்ததோ இல்லையோ மனித நேயத்தை உலகிற்குப் பறைசாற்றியது. தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது!

    டிஸ்கி பற்றி...விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் நீங்கள் நீர்(!!!)வழியாகவே சென்னை வந்ததாக துளசி சொன்னாரே. நீங்கள் சேஃப் என்றும்!!!!!! சொன்னாரே..

    ReplyDelete
  4. தமிழகத்தின் மனிதநேயத்தை வெள்ளம்
    உலகுக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறது
    தம 1

    ReplyDelete
  5. டிஸ்கி: இந்தியா உங்களை வரவேற்கிறது.

    மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்திய பேரிடர்......

    ReplyDelete
  6. மழை எதை உணர்த்தியதோ இல்லையோ!! மக்கள் மனசுல இன்னும் ஈரம் இருக்குன்னு உணர வைத்தது இம்மழை.

    ReplyDelete
  7. ரொம்பவும் சுடான பதிவு..மழைக்கு இதம்

    ReplyDelete
  8. கடலூர் பகுதி வேட்பாளர்... அருமை... மக்களுக்கு மறதி என்னும் நோய் இருக்கிறதே... உணர்ந்தவர்கள் யாரும் ஓட்டுப்போட வருவதில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.