Thursday, December 3, 2015



நடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?

உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழர்கள்தான் நடிகர் மற்றும் நடிகைகளை கடவுளுக்கு இணையாக உயர்த்தி பேசுகிறோம் அதே சமயத்தில் அவர்களை மிகவும் கீழ்தரமாகவும் பேசுகிறோம் அது ஏன் ? அவர்கள் என்றுமே தாங்கள் மிக ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவும் இல்லை. கடவுள் என்றும் சொல்லவில்லை. அவர்களும் சாராசரி மனிதர்கள்தான். அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அது நடிப்பு மட்டும்தான். சில நடிகர்கள் நடிப்பை தொழிலாக மட்டும் கருதி வாழ்க்கையில் நிஜமாக வாழ்கிறார்கள் , மேலும் சிலர் சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை மக்கள்தான் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர்கள் இப்படிதான் இருக்க வேண்டும் இப்படிதான் செய்ய வேண்டும். இப்படிதான் பேச வேண்டும் என்று நாம் அவர்களை வலுக்கட்டாயப் படுத்துகிறோம். இப்படி செய்வது நாம் அவர்கள் மீது நம் கருத்துகளை வலுக்கட்டாயமாக திணிப்பது போல அல்லவா இருக்கிறது. அப்படி செய்வது சரிதானா என்று யோசிக்க வேண்டும்


மேலும் பலர் நடிகர்களை அவதாரப் புருஷனாக கருதி கொண்டு தங்களுக்கு பிரச்சனைகள் வரும் போது தங்களுக்கு அள்ளி அள்ளி பணத்தை கொட்ட வேண்டும்  என நினைக்கிறார்கள். என்னமோ நம் பணத்தை அவர்களிடம் கொடுத்து டெபாசிட் பண்ணி வைத்தமாதிரி கொடு கொடு என்று கூறுகிறோம். ஆனால் அதே சமயத்தில் நம் பணத்தை கொண்டு, நம்மை ஆட்சி செய்யும் தலைவர்களை பார்த்து அது செய் இது செய்  பிரச்சனைகள் வந்த போது அள்ளிக் கொடு எனக் கேட்க தயங்குகிறோம் & பயப்படுகிறோம். இந்த தலைவர்கள் நமக்கு சேவை செய்ய நம்மால் நியமிக்கபடுபவர்கள் ஆனால் நடிகர்கள் அப்படியல்ல தங்கள் திறமையை வைத்து உங்களை மகிழ்ச்செய்து அதன் மூலம் பணத்தை சம்பதிக்கிறார்கள். உங்களை மகிழ்விப்பதால்தான் நீங்களும் பணத்தை அவர்களை நோக்கி மிக அதிகமாக செலவழிக்கிறீர்கள். ஒருவேளை அவர்கள் உங்களை மகிழ்விக்கவில்லையென்றால் அவர்களுக்காக பணத்தைதான் அள்ளிவிடுவீர்களா ? அல்லது அவர்களுக்கு வருமானம் இல்லாமல் பிரச்சனை என்று வரும் போது எதையும் எதிர்பாராமல் பணத்தைதான் அள்ளிக் கொடுப்பீர்களா? அப்படி எதுவும் செய்யமாட்டீர்கள்தானே? அப்படி இருக்கையில் வெள்ளம் வந்ததும் அவர்கள் கோடிக்கணக்கில் அள்ளி தரணும் என்று எதை வைத்து எதிர்பார்க்கிறீர்கள், கொஞ்சாமாவது யோசிங்கள் மக்களே

அவர்கள் லட்சகணக்கில் கொடுத்தால் அதை பெற்று, அதற்காக நன்றி சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்.  அவர்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்களே கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவார்கள் என்று நாம் நினைக்கலாம். அது தவறு அப்படி கோடிக்கணக்காக சம்பாதிப்பவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத  பிரச்சனைகள் பல இருக்கலாம். அதனால்தான் அவர்கள் அப்படி தருகிறார்கள் என்று உணருங்கள். ஒரு வேளை கெளரவத்தை விட்டு வெட்கத்தை விட்டு அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை சொன்னால் நீங்கள் உங்கள் சொத்தை விற்று அவர்களுக்கு கொடுத்துவிடுவிர்களா என்ன?

அதனால் அவர்களை ஒரே அடியாக இழித்து குறை சொல்லாமல், தருவதை பெற்று அதற்கு நன்றி சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்

நடிகர்களை கேள்விகள் கேட்கும் மக்களே உங்களுக்கு ஒரு கேள்வி?

உங்கள் உழைப்பை உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் உங்கள் கம்பெனி முதலாளியிடம்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உதவி செய்தீர்கள் என்று கேளுங்கள். அதே போல அதானி அம்பானி விப்ரோ டிசிஸ்,டிவிஸ் மற்றும் இது போன்ற இந்தியா முழுவதும் பல தொழில் நடத்தி உங்களது உழைப்பை சுரண்டி உலக பணக்காரர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்களிடமும் கேளுங்களேன்.


மேலும் நடிகர்கள் போலவே கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களிடம் கேளுங்களேன்,

ஏன்  உங்கள் தொகுதி எம்,எல்.ஏ , அமைச்சர்கள் போன்றவர்கள் பணத்தை கோடிக் கணக்கில் சம்பாதிக்க வில்லையா அவர்கள் ஒரு மாதம் சம்பளம் தருகிறோம் என்று சொன்னால் மட்டும் வாய்மூடிக் மேலும் "அது' இதை என்று முடி மெளனமாக இருக்கிறீர்கள் அது ஏன்? அவர்கள் நம்ம சொத்தைதான் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்களே அதிலிருந்து இன்னும் அதிகமாக தந்தால் அவர்கள் என்ன குறைந்தா போய்விடுவார்கள் ?


கட்சி தலைவர்கள் கட்சி ரீதியாக பணம் தருகிறார்கள். அந்த பணம் அந்த கட்சி தொண்டர்களிடம் இருந்து பல சமயத்தில் திரட்டிய பணம்தானே? அது இல்லாமல் எந்த கட்சி தலைவர்கள் தங்கள் குடும்ப நிதியில் அல்லது சொத்தில் இருந்து ஒரு பைசா செலவிட்டார்கள் என்று காட்டுங்கள் பார்ப்போம். (உதாரணமாக கலைஞர் திமுக கட்சியின் சார்பாக ஒரு கோடி கொடுத்திருக்கிறார் அது கட்சி பணம்தானே ஆனால் ஏசியாவிலே நம்பர் ஒன் பணக்காராக இருக்கும் அவர் சொத்தில் இருந்து எவ்வளவு கொடுத்தார், ஸ்டாலின் அவரது சம்பாத்தியத்தில் இருந்து எவ்வள்வு கொடுத்தார்? உதயநிதி எவ்வளவு கொடுத்தார் மாறன் சகோதரரர்கள் எவ்வளவு கொடுத்தார் ஜெயலலிதா அவரின் சொந்த சொத்தில் இருந்து எவ்வள்வு கொடுத்தார் யோசியுங்கள் ) முடியாதுதானே அப்படி இருக்க நாம் ஏன் நடிகர்களை மட்டும் இழிவாக பேசிக் கொள்கிறோம் அது சரியா நியாமா? கொஞ்சம் யோசியுங்கள்


மக்களே நாம் ஏதுக்காக இப்படி இவர்களை நோக்கி கையேந்த வேண்டும். சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமே. ஆனால் தமிழகத்தில் வசிப்பதோ கோடிக் கணக்கில்தானே.அதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்படாதவர்கள்தானே. அப்படிபட்ட பாதிக்கப்படாத மக்கள் தங்களால் முடிந்த அளவு நூறுலிருந்து ஆயிரம் லட்சகணக்கில் கொடுத்தால் வீடு இழந்தவர்கள் ஏழைகள் அனைவருக்கும் சொந்த வீடே கட்டிக் கொடுக்கலாம்.(அப்படி பணம் கொடுக்க முடியாதவர்கள் தங்கள் உழைப்பை ஏதாவது ஒரு வழியில் கொடுக்கலாம்) இப்படி செய்ய உங்களால் முடியாது என்றால் மற்றவர்களை குறை சொல்லாமல் இருப்பதே சிறந்தது. இப்படி செய்வதால் நாம் தலை நிமிர்ந்து தன்மானமாக வாழலாம்தானே? அப்படி செய்ய முடியுமா?

டிஸ்கி : நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் அவர்கள் எந்தவித பிரச்சனைகள் இல்லாமல் பல சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள் என்று நீங்கள் உண்மையாக நினைப்பீர்களேயானால், அந்த நினைப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த நடிகர் நடிக்கும் படம் ரீலிஸ் ஆனா ஒரு மாதம் வரை பார்க்காமல் தவிருங்கள் .அப்படி செய்ய உங்களால் முடியுமா? செய்வீர்களா ?ஆமாம் என்றால் நீங்களும் சூடு சுரணை கொண்ட மக்கள்தான் என்பதை ஒத்துக் கொள்கிறோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்









#chennairains #chennairainshelp  #chennaigives #chennaiflood
 

26 comments:

  1. உங்கள் கேள்வியும், கோவமும் நிஜம்தான் சகோ

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கோபம் எல்லாம் ஒன்றுமில்லை. என் மனதில் தோன்றியதை நான் இங்கு பதிந்து உள்ளேன். அவ்வளவுதான்,,, சிந்திக்க வேண்டிய தமிழர்கள் சிந்தித்தால் சரி

      Delete
  2. கடைசியில் வந்த டிஸ்கி வார்த்தைகளுக்கு என் தம.1

    ReplyDelete
    Replies
    1. இங்கு வருகை தந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி

      Delete
  3. நன்றி நண்பரே ! உண்மை சுடும் ! தாங்கள் கூற்று உண்மையே !

    ReplyDelete
    Replies
    1. பதிவில் சொல்லியதை படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி

      Delete
  4. நீங்கள் சொல்வது உண்மையே.
    வரி வசூலிக்கும் அரசாங்கத்திடம் தான் நாம் உதவி கோரவேண்டும்.
    எந்த பிரிதிபலனும் பார்க்காமல் உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிக சரியே. முதலில் செஞ்ச உதவிகளுக்கு நன்றி சொல்லமாட்டார்களாம் ஆனால் அவர்கள்கிட்ட இருந்து மிக அதிகம் எதிர்பார்ப்பார்களாம். இப்படிதான் இருக்கிறது அவர்களின் மனநிலை.

      Delete
  5. Replies
    1. படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி

      Delete
  6. உண்மையான பதிவு சார்... இது ஒரு பேசன் சார்... உதவி செஞ்சாலும் இவ்ளோ தான் செய்யமுடியுமா..? எவ்ளோ சம்பளம் வாங்குறாரு என அடுத்த துவேசம்..

    ReplyDelete
  7. உங்களின் பதிவு முட்டாள் தனமானது.மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. முட்டாள்களுக்கு இந்த பதிவு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் அதில் ஒன்றும் அதிசயமில்லையே!

      Delete
    2. தங்கள் பதிவு மிகவும் புத்திசாலியான பதிவாக உள்ளது..

      Delete
  8. இது ஒரு உண்மையான பதிவு.
    அவர்களுக்கு தேவை, அவர்களுக்கு பிடிக்காத ஒருவரை தூற்ற வேண்டும். இந்த சமயத்தில் ஒரு மனிதன் உதவுவதே பெரிய விஷயம். அதையும் சில விசமிகள் இழிவுபடுத்துகிறார்கள். தன் சொத்தையே எழுதி வைத்து விட்டு நடு வீதிக்கு வந்தாலும் இவர்கள் தூற்றத்தான் செய்வார்கள். இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உதவி செய்பவர்கள் மனதை நோகடிக்காமல் இருக்கலாமே...

    ReplyDelete
  9. இவர்களுக்கு உண்மையிலேயே "திராணி" இருந்தால் ஆளும்கட்சியை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டியதுதானே. அதயும் மீறி நடிகன் தான் செய்ய வேண்டும் என்றால், வேறு வழி இல்லை.நடிகனை நாடாள சொல்லுங்கள். பின் கேள்வி கேளுங்கள். அதில் தவறு இல்லை.

    ReplyDelete
  10. புகைப்படம் ஒன்றே தெளிவாக உணர்த்திவிட்டது. நியாயமான ஆதங்கம்.
    சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    ReplyDelete
  11. அட...என்ன ஒரு சூடு...
    சரியான பார்வை தான்...எந்த நடிகனும் பாலாபிஷேகம் செய்ய சொல்லவுமில்லை....
    நாம் தான் ஓடினோம்...ஆடினோம்...

    ஆனால் அவர்கள் கொஞ்சம் மனிதத்தன்மையுடன் இருந்திருக்கலாம் தான்...
    இந்த மக்கள் அவர்கள் மேல் கொண்ட கண்மூடித்தனமான வெறிக்காகவேணும் ...செய்திருக்கலாம் ஏதேனும்...
    தன் ரசிகர்கள் படையிடம் அறிவுறுத்தியிருக்கலாம் ...
    அவர்கள் எல்லா விதத்திலும் சரியாகத்தானிருக்கிறார்கள் நடிகர்களாக...இவர்கள் தான் மறந்து போகிறார்கள் தாம் மனிதர் என்பதை...

    ReplyDelete
    Replies
    1. as far as i have seen every actor is doing his\her part by contributing money to cm relief fund, allowing the stranded people to stay at thier marriage halls and providing food etc., what else you need by saying actors should have been more huammane? please dont critisize anybody by thier proffesion.

      Delete
  12. கேள்வி கேட்க முதுகெலும்பா......

    அது தான் எப்போதோ வளைத்து விட்டதே!

    ReplyDelete
  13. சிந்திக்கக்த்தூண்டும் பகிர்வு சிந்திப்பார்களா???நடிகர்கள்,நடிகைகளை மட்டும் குறைக்கூறக்கூடாது கோடியில் பெறும் மற்றத்துறையினரையும் கேட்க வேண்டும் .

    ReplyDelete
  14. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான பதிவு. மக்கள் உணர்ந்தால் சரி.

    ReplyDelete
  15. கேள்வி கேட்க்க முதுகெலும்பு ஏன்,,
    வாய் தானே வேனும்,,,,, நாங்கள் வாய்பொத்தி கால்களிலே விழுந்துகிடக்கிறோமே,,,,,
    நன்றி.

    ReplyDelete
  16. சரியான சாட்டையடிப் பதிவு.
    அவர் கொடுத்தால் என்ன . இவர் கொடுத்தால் என்ன என்று கேட்கிறோம். நாம் என்ன கொடுத்தோம் என்று சிந்திப்பதில்லை

    ReplyDelete
  17. Well Said!! We always expect others to contribute, and blame what ever way possible.

    ReplyDelete
  18. நல்ல ப்திவு! செம விளாசல். குறிப்பாக டிஸ்கி....ஹும் நம்ம மக்கள் திருந்துவாங்க? ஹும் திருந்தினா நல்லது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.