வணக்கம் உங்கள்
அன்பு சகோதரி ஜெயலலிதா
பேசுகிறேன்..( யாக்கோவ்
செளக்கியமாக்கா )
கடந்த நூறு
ஆண்டுகள் காணாத மிகப்பெரும்
தொடர் மழை ஏற்படுத்திய
வெள்ளச்சேதங்களால் நீங்கள்
அடைந்துள்ள துயரங்களை
நினைத்து நினைத்து
வருந்துகிறேன் கவலை வேண்டாம்
இது உங்கள் அரசு (
வெள்ள நேரத்திலும் டாஸ்மாக்கை
திறந்து வைச்ச அப்புறம் நாங்க
எதுக்குக்கா கவலைப்படப்
போறோம்)
எதையும்
எதிர்கொண்டு வெல்லும் சக்தியை
நீங்கள் எனக்கு
அளித்திருக்கிறிர்கள்.(
ஆமாக்கா அதனால்தான்
சட்டத்தையே உடைத்து வெற்றி
பெற்றுக்
கொண்டிருக்கிறீர்கள்)
உங்களுக்காக நான்
உங்களோடு எப்போதும்
நானிருக்கிறேன் (யாக்கோவ்
இந்த வருஷம் சனிபெயர்ச்சி
பலன் பலிக்காதா )
விரைவில் இந்த
துன்பத்திலிருந்து உங்களை
மீட்டு புது மலர்ச்சியையும்
எழுச்சியையும்
அடையச்செய்வேன்.இது உறுதி! (யாக்கோவ்
தோல்வி உறுதின்னு சீக்ரெட்
சர்வீஸ் சொல்லிடுச்சாக்கா)
போர்க்கால
அடிப்படையில் மீட்பு
பணிகளையும்
நிவாரணப்பணிகளையும்
புனரமைப்பு பணிகளையும் முழு
வீச்சில் முடுக்கி
விட்டிருக்கிறேன்(
யாக்கோவ் 40 கோடியை செலவே
இல்லாமல் ஸ்டிக்கர் மட்டும்
ஒட்டி மீட்டதைதான்
சொல்லுறீங்க.... பாத்துக்கா
ஊரில் இருக்கிற பயபுள்ளைங்க
எல்லாம் சுத்த மோசம் மீதமுள்ள
கோடிகளை அவங்க சுடுவதற்கு
முன்னால் போர்க்கால
அடிப்படையில் மீட்டு
தோட்டத்தில் பாதுகாப்பாக
வைத்து கொள்ளவும்)
அமைச்சர்களும்
அரசு அலுவலர்களும் ,காவல்
துறையினரும் ,தீயணைப்பு
மற்றும் மீட்புப்பணிகள்
துறையினரும் முப்படையினரும்,தேசிய
மற்றும் மாநில(???) பேரிடர்
மீட்புப்படையினரும்,தன்னார்வ
தொண்டர்களும் தோளோடு தோள்
சேர்ந்து உங்களோடு கடுமையாக
உழைத்தார்கள்.(யாக்கோவ்
உங்க அமைச்சர்கள் எல்லாம்
வெள்ள வேட்டி கசங்க நனையாம
சேவை செஞ்சதை பார்த்து நாடே
வியக்குதக்கா அது எப்படிக்கா
வெள்ளை வேட்டியில் கரை கூட
படாமல் இருந்தது )
உங்களுக்கு வரும்
துன்பங்களையெல்லாம் நானே
சுமக்கிறேன் (
யாக்கோவ் பைபிள் படிக்க
ஆர்ம்பிச்சிட்டீங்களா?)
எனக்கென்று தனி
வாழ்க்கை கிடையாது.எனக்கென்று
உறவுகள் கிடையாது.(யக்கோவ்
அப்ப சசிகலா யாருக்கா? அவர்
திரும்பவும் சேர்த்துள்ள
சொத்துக்கள் எத்தனை ஆயிரம்
கோடிகள் அதனை யாருக்காக
எதற்காக செய்ய
அனுமதிக்கிறீர்கள். பதில்
சொல்ல முடியுமாக்கா) .
எனக்கு சுயநலம்
அறவே கிடையாது(
ஆமாக்கா அதனால தேர்தல் வரும்
முன் உங்க சொத்தை எல்லாம்
மக்களுக்கு எழுதி
வைச்சிடுங்கக்கா)
எனக்கு எல்லாமும்
நீங்கள்தான் .என் இல்லமும்
உள்ளமும் தமிழகம்தான்
பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற
பெயரை மறந்து போகும் அளவுக்கு
நீங்கள் அழைக்கின்ற அம்மா
என்ற ஒரு சொல்லுக்காகவே என்
வாழ் நாட்களை உங்களுக்காக
அர்ப்பணித்து உழைத்து
கொண்டிருக்கிறேன்.(
அருமையான குறும்படமக்கா அந்த
படத்தில் இந்த சீனீல் மிக
அருமை நடித்து தூள் கிளப்பி
இருக்கீறீங்கக்கா .அவ்வளவு
கொடூர மழை பெய்தபோது உங்கள்
காலை கூட தண்ணீரில்
நனைக்காமல் , வெள்ள நிவாரணம்
குறித்து பேட்டி கொடுக்கும்
சீன் மிக அட்டகாசம் அக்கா . அது
எப்படிக்கா ,மக்களை
பார்க்கிறேன் என்று
சொல்லிவிட்டு சென்று காரை
விட்டு இறங்காமல் எனதருமை
வாக்காள பெருமக்களே என்று
காமெடி பண்ணுனீங்க ? அது
எப்படிக்கா தன்னார்வல
தொண்டர்கள் கொடுக்கிற நிவாரண
பொருட்களில் கட்சிகாரர்களை
வைத்து உங்களுடைய ஸ்டிக்கரை
ஓட்ட வைத்து அப்படியே நீங்கள்
தானம் பண்ணுவது போல செஞ்சிங்க
சூப்பர் ஐடியாக்கா அது
எப்படிக்கா ஊரே ஒப்பாரி
வைக்கும் போது போயஸ்
கார்டனில் ஓய்வில் இருந்த
நீங்கள் திடீரெனெ நான்
உங்களுடையே இருக்கிறேன் என்று
பிதற்றுவதும் , நீலி கண்ணீர்
வடிப்பதுமாக அறிக்கை
விடுவதும் போல உங்களால்
எப்படிக்கா இப்படி அருமையாக
நடிக்க முடிகிறது, அது கடை
தேர்ந்த ஏமாற்று வேலையாக
தெரிந்தாலும் உங்க
பெர்ஃப்ம்ன்ஸ் சூப்பரோ
சூப்பர் . இப்படியே கிப் அப்
பண்ணுங்கக்கா....இந்த தமிழர்கள்
மடையர்கள் அதனால் நீங்கள்தான்
அடுத்த முதல்வரக்கா.. எத்தனை
நடிகைகள் வந்தாலும்
நீங்கள்தான் நடிகைகளில்
சூப்பர் ஸ்டார் முதலவராக
வந்தாலும் நீங்கள்தான்
சூப்பர் முதல்வர்)
இந்த அரசு இயற்கை
பேரிடர்களை வெற்றி கொள்வதில்
எப்போதும் பேர் பெற்ற அரசு
என்பதை மீண்டும் ஒரு முறை நிலை
நாட்டுவேன். எத்துயர் வரினும்
அதையும் இத்தாயின் கரங்கள்
துடைக்கும் என்ற
நம்பிக்கையோடு இருங்கள்.நன்றி!!
(யாக்கோவ் நீங்களும் நடிகர்
ரஜினி போல் வாயிலேயே வடை சுட
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்
)
உங்களின் இந்த 2
நிமிஷம் 15 நொடி குறும்படம் மிக
அருமை.
வாழ்த்துக்கள்...பல்லாண்டு
காலம் வாழ்க வளமுடன்
இந்த வீடியோவை
பாருங்க. அதன் பின் நான்
சொல்லுவது சரியா என்று சற்று
யோசித்து பாருங்கள்
ஜெயலலிதா
நிர்வாகத்திறன் மிக்கவர்
எனும் பொய் ஊடகங்களால்
பரபரப்பபட்டுவருகின்றன. ஆனால்
எதையும் செய்யத் தெரியாத
ஜெயலலிதாக்த்தான் இந்த
வீடியோவை பார்க்கும் போது
நமக்கு தோன்றுகிறது. சென்னை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு
இருக்கிறது இதற்கு தான்
எடுத்த நடவடிக்கை என்ன செய்த
உதவிகள் என்ன இட்ட ஆணைகள் என்ன
என்று கூட சொல்லத் தெரியாமல்(ஏதாவது
செய்திருந்தால்தானே சொல்ல
முடியும்) யாரோ எழுதி கொடுத்த
வசனங்களை பேப்பரை பார்த்து
படித்து வருகிறார். இப்படி
செய்பவர்தான் நிர்வாகத்திறன்
மிக்கவர் என்று ஊடகங்களால்
செய்திகள் பரபரப்ப படுகின்றன.
ஜெயலலிதா செய்வது என்ன தனக்கு
கிடைத்த அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்து துக்ளக்
ஆட்சி செய்து
கொண்டிருப்பதுதான். இப்படி
செய்வதைதான் தைரிய லட்சுமி
ஆட்சி என்று கூறுகிறார்கள்
ஆனால் இதைத்தான் மேலை
நாட்டில் ஹிட்லர் ஆட்சி
அல்லது இடி அமின் ஆட்சி என்று
சொல்லுகிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி :
பேஸ்புக்கில் பலரும்
கலாய்த்து எழுதியதை படித்தன்
பாதிப்புதான் இந்த பதிவு, ஒரு
சில கருத்துக்கள்
மற்றவர்களின் கருத்தை
படித்ததை மனதில் உள்வாங்கி
எழுதியது அதனால் அந்த
கருத்தின் பாதிப்பு இந்த
பதிவில் இருக்கலாம்,
தமிழா அஹஹஹ் செம கூட்டல் வாரல் வகுத்தல்..எப்பவுமே யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிப்பதுதானே...ஏதாவது செஞ்சாதானே எழுதவரும்..
ReplyDeleteநன்றி வணக்கம் பாட்டி சொன்னதுக்கு அப்புறமும் file ல பாத்துகிட்டு இருக்கு.கை கூப்பி வண்க்கம் சொல்லாம ????????
ReplyDeleteஆஹா, ஆஹா, அம்மாவின் உருக்கமான(!) உரைக்கு, கோனார் உரை எழுதிவிட்டீர்களே நண்பரே.
ReplyDeleteஎழுதிக்கொடுத்துதான் படிப்பாங்க போல...!
ReplyDeleteஉங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.சிறைபட்டால் பிஸ்கட் வாங்கி கொண்டு வந்து பார்க்கிறேன்.
ReplyDeletekalakarthik
karthik amma
அவர்களின் உரைக்கு உங்களின் கேள்விகள் அட்டகாசம்.....
ReplyDeleteதங்களின் இடைச்சொறுகள் ஸூப்பர் நண்பரே...
ReplyDelete