அசிங்கப்படுத்துவதாக எண்ணி
அசிங்கப்பட்ட இளையராஜா
இளையராஜாவுக்கு இசையில் வேண்டுமானால்
அறிவு இருக்கலாம் ஆனால் பொது நிகழ்வுகளில் எப்படி நடக்கவேண்டும் என்று சின்ன பையன்களுக்கு தெரிந்து அளவு கூட இவருக்கு
இல்லை என்பதை கிழ்கண்ட வீடியோவை பார்த்தாலே புரியும்
சிம்பு பாடிய பீப் பாடல்
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தப் பாடல் ஆபாச
அர்த்தங்களுடன் இருப்பதால், பலரும் இந்த பாடலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு அதற்காக மாநிலத்தின் பல்வேறு
பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அது
குறித்து அந்த இசைதுறையில் ஞானியாக கருதப்படும் ஒருவரின் கருத்தை பெற வேண்டும் என்று
ஒரு செய்தியாளர் நினைப்பதில் என்ன தவறு ?
அந்த கேள்வியை அந்த இடத்தில்
எழுப்பியதற்கு இளையராஜா பதிலளிக்க விரும்பவில்லையென்றால் அது பற்றி கருத்து ஏதும் கூற
விரும்பவில்லை என்று சொல்லி இருக்கலாம். அதற்கு பதிலாக உனக்கு அறிவிருக்கிறதா என்று
செய்தியாளரை அத்தனை பேர் முன்னிலையில் கேட்பதும், கேள்வி கேட்பவருக்கான தகுதி குறித்து
கேள்வி எழுப்பியதும் கண்டிக்க தக்கது. உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்கும்
இளையராஜாவிற்கு அவர் செய்தியாளர் என்று கூடவா தெரியவில்லை செய்தியாரின் தகுதியே கேள்விகள்
கேட்பதுதான் அது கூட தெரியாமல் அறிவில்லாமல் அவரை பார்த்து அறிவு இருக்கா என்று கேள்வி
கேட்க இந்த ஞானிக்கு அறிவில்லாமல் போனதே.
ஒரு வாதத்திற்காக கேட்கிறேன்,
வெளிநாடு சென்று விட்டு வெற்றிகரமாக தன் பயணதை முடித்துவிட்டி இந்தியா திரும்பி வெளிநாட்டு
பயணத்தைப்பற்றி பேட்டி கொடுத்து முடித்த பின் உள்நாட்டில் நடக்கும் பிரச்சனை பற்றி
செய்தியாளர் கேள்வி கேட்டால் அவருக்கு அறிவு இருக்கா என்றுதான் யாரும் கேள்வி கேட்பார்களா?
அப்படித்தானே இந்த செய்தியாளரும்
கேள்வி கேட்டு இருக்கிறார். அதுவும் அவர் இளையராஜா பேச்சை இடைமறித்து அல்லது திசை திருப்ப
கேட்கவில்லை .இளையராஜா பேச்சு முடிந்ததும்தான் கேள்வி கேட்கிறார். அது கூட இந்த பெரிய
மனுஷனுக்கு புரியாவில்லையா?
இதுல இளையராஜா உனக்கு அறிவு
இருக்கா என்று கேட்கும் போது அதற்கு அந்த செய்தியாளர் அது இருப்பதினால்தான் கேட்கிறேன்
என்ற போது..இளையராஜா ஏதோ பெரிய அறிவு ஜீவி என்று நினைத்து உனக்கு அறிவு இருக்குங்குறத
எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற என்று கேட்கிறார். அதற்கு செய்தியாளர் : ஒரு இசையமைப்பாளர் நீங்க?
உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு? ஆனால் அதற்கு பதிலாக உன்னிடம் நான் கேட்ட கேள்விக்கு
நீ உளரும் உளரலை வைச்சுதான் நான் அறிவாளியாக இருக்குறேன் என்பதை கண்டுபிடிச்சேன் என்று
பதில் சொல்லியிருக்க வேண்டும்
அவர்களின் கலந்துரையாடல் விவரம்...
செய்தியாளர்: சிம்பு தவறுதலான
பாடல் பாடியுள்ளது பற்றி?
இளையராஜா: உனக்கு எதாவது இருக்கா?
அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப்
பதில் சொல்லு?
செய்தியாளர்: சார், அறிவு
இருந்ததால தான் கேக்குறேன்!
இளையராஜா: அறிவு இருக்குங்குறத
எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?
செய்தியாளர்: ஒரு இசையமைப்பாளர்
நீங்க? உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு?
இளையராஜா: யார்கிட்ட கேட்கவேண்டிய
கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க?
சில சமயங்களில் சில இடங்களில்
செய்தியாளர்கள் தவறு செய்கிறார்கள்தான் ஆனால் அதை நான் மறுப்பதிற்கில்லை ஆனால் இங்கே
இந்த செய்தியாளர் கேட்டதில் எந்த தவறும் இல்லை ஆனால் அதற்கு பதில் அளித்த அகம்பாவம்
பிடித்த இளையராஜாதான் அறிவில்லாமல் நடந்து இருக்கிறார்.
சமீபகாலங்களில் சினிமாதுறையில்
உள்ளவர்களுக்கு மிக அகம்பாவங்கள் இருக்கின்றன அதுமட்டுமல்லாமல் தாங்கள் என்னவோ கடவுளின்
அவதாரங்கள் போல கருதி கருத்து சொல்லுவதும் பேசுவதுமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் தலைவர்கள்
மட்டுமல்ல பொதுமக்களும் இந்த கூத்தாடிகளை தலையில் வைத்து கொண்டாடுவதுதான் காரணம். இப்படி
கொண்டாடுவது மற்ற மாநிலத்துகாரர்களைவிட தமிழர்கள் மிக அதிகமாகவே செய்கின்றனர்.
சினிமா துறையில் இருப்பவர்கள்
தலையில் உள்ள முடிகளை போன்றவர்கள் அவர்களை நாம்தலையில் தூக்கி வைத்திருக்கும் வரைதான்
அவர்களுக்கு மதிப்பு அவர்களை தலையில் இருந்து இறக்கி வைத்திவிட்டால் வெறும் மயிருக்குதான்
சமம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இளையராஜாவிடம் துணிச்சலாக
பேசி கோபபடாமல் மிக மென்மையாக பதில் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.
இன்றைய செய்தியில் நீங்கள் ஹீரோவாகவும் பேச்சில் மென்மை இல்லாததால் இளையராஜா ஜீரோவாகவும்
ஆகிவிட்டார்
செய்தி துறையில் பணிபுரிபவர்கள்
அவர்களில் சங்கங்கள் இளையராஜாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
சுரேஸ் கண்ணன் என்பவர் பேஸ்புக்கில்
பகிர்ந்ததை கிழே பதிந்து இருக்கிறேன். அவரும்
மிக சரியாக இளையராஜவிற்கு சாட்டை அடி கொடுத்து இருக்கிறார். சுரேஸ் கண்ணனின் கிழ் கண்ட
பதிவிற்கு என் நன்றிகள்
இளையராஜா சிறந்த இசையமைப்பாளர்தான்.
ஆனால் அவரை விசிறி சாமியாராக மாற்றி பீடத்தில் அமர்த்தி வழிபட விரும்புவர்கள் வழிபட்டுக்
கொள்ளட்டும். இசையமைப்பாளர் என்கிற முக்கிய தகுதியைத் தவிர ஒரு சாதாரண நபருக்கு இருக்க
வேண்டிய அடிப்படை பண்பு கூட அவரிடம் இல்லாததை தம்முடைய ஆணவமான செய்கைகளின் மூலம் அவர்
பலமுறை நிரூபித்துள்ளார்.
அவருடைய இசைத்திறமையையொட்டி
இந்த தவறுகளை அவரது ரசிகர்கள் தயவுசெய்து நியாயப்படுத்தாதீர்கள். அவர் தன்னை சாதாரண
மனிதராக தெரிவித்துக் கொண்டு ஆயிரம் கோபப்படட்டும். அது சரியாக இருக்கும். ஆனால்
அவர் தன்னை ஓர் ஆன்மிகவாதியாக சித்தரித்துக் கொண்டு அதற்கான எந்தவித சாட்சியங்களும்
இல்லாமல் தன்னை சராசரி நபர் எவரும் நெருங்க முடியாத பீடாதிபதியாக நினைத்துக் கொண்டு
அதற்கேற்ற பாவனைகளைத் தொடர்ந்து வரலாறு அவருக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்கும். ஒரு
மனிதரிடம் சகிப்புத்தன்மையை, பொறுமையைக் காட்டக்கூட முடியாத நபர் எப்படி தன்னை எப்படி
ஓர் அசாதாரண மனிதராக சித்தரித்துக் கொள்ள முடியும்? பொதுமக்களிடமிருந்து அருவருத்து
விலகி நிற்கும் ஒரு கலைஞன் எப்படி உன்னதமானவனாக இருக்க முடியும்?
அந்த நிருபர் பொருத்தமில்லாத
சூழலில் பொருத்தமில்லாத கேள்வியைக் கேட்டதாக ஒருவேளை அவர் நினைத்திருந்தால் இதற்கு
'பதிலளிக்க விரும்பவில்லை' என்ற ஒற்றை வார்த்தையில் தவிர்த்திருக்கலாம். அப்படியும்
அந்தக் கேள்வி ஏதோ அவருடைய துறைக்கு தொடர்பில்லாததோ,அல்லது மகா பஞ்சமா பாதகச் செயலுடன்
தொடர்புள்ளதோ இல்லை.
ஆயிரம் முக்கல் முனகல்களுடன்
பல அருவருப்பான பாடல்களை தம்முடைய தொழிலுக்காக செய்திருக்கும் ஓர் இசையமைப்பாளர் தன்னை
ஒரு சுத்த ஒழுக்கவாதியாக உருவகித்துக் கொண்டு 'சீ சீ.. என்று அருவருப்பு காட்டும்
அந்த போலித்தனம்தான் அதிக அருவருப்பூட்டுகிறது.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
புஷ்பவனம் குப்புசாமி அழகி படத்திற்காக பாடிய அனுபவத்தைச் சொல்லும் போது 'குருவி
குடைஞ்ச கொய்யாப்பழம்' என்கிற பாடல் வார்த்தை ஆபாசமான அர்த்தம் தருவதை உணர்ந்து அதை
தவிர்க்க தாமாகவே வேறு வார்த்தையைப் போட்டு பாடியிருக்கிறார். ஆனால் இளையராஜா விடாப்பிடியாக
வற்புறுத்தி அந்த வார்த்தையைத்தான் பாட வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார். இப்படி
உருவான பல ஆபாசப் பாடல்களில் இசைஞானியின் பங்களிப்பும் இருப்பதையும் அதனால் விளைந்த
சமூகச் சீரழிவுகளை அவராலோ மற்றவர்களாலோ மறுக்க முடியுமா?
தன்னையோர் ஆசார சீலராகக்
கருதிக் கொண்டு பிராமண அடையாளங்களுடனும் மனோபாவத்துடன் நெருக்கமாக மற்றவர் உணரும்படி
சித்தரித்துக் கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை தனது ஆய்வு நூல் ஒன்றில் முனைவர்
குணசேகரன் மிகச்சரியாக சுட்டிக்காட்டிய போது தன்னை அம்பலப்படுத்தியதற்காக அவர் மீது
வழக்குப் போட்டவர்தான் இந்த ஆன்மீகவாதி.
ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில்
வெளிவந்து முதல்வராக அமர்ந்த நிகழ்விற்கு எவ்வித கூச்ச நாச்சமும் இல்லாமல் வந்து அமர்ந்து
கொண்டவர்தான் இந்த இசைஞானி. அதிகாரத்தின் முன் 'அறிவிருக்கா?' என்கிற கேள்வியைக் கேட்டு
விட முடியுமா?
ஒரு பத்திரிகையாளரின் முன்பு
இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் இசைஞானி தனது ஒளிவட்டத்தின் பிரகாசத்தைக் குறைத்துக்
கொண்டு தனிமையில் கண்ணாடி முன்பு இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டால் ஒருவேளை பதில்
கிடைக்கலாம்.
ஒரே சேற்றில் ஊறிய மட்டைகள்! பணம் இருக்கும் என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும். திரையில் காண்பதை வைத்து ஒவர்களை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்துவதும் நம்ம மக்கள் தான்.
ReplyDeleteநிஜ ஹீரோக்களை ஜீரோவாக்குவதும் ஜீரோக்களை ஹீரோவாக்குவதும் நாம் தானே?
பொது இடத்தில் இம்மாதிரியான் தனி மனிதசாடல்கள் கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டும்.
இந்தப் பாடல் இணையத்தில் வெளியானது.. அதுவும் எவனோ வெளியிட்டுவிட்டதாக சொல்றாங்க..இதை இளையராஜா கேட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை..மேலும் பாடலில் இசை பிரச்சினை இல்லை.. பாடல் வரிகள்தான் பிரச்சினை. இளையராஜா "கவிஞர்" இல்லை..இதுல இளையராஜாவுடைய ஒப்பீனியன் வேலையத்த ஒருத்தன் கேக்கிறான்னா அவனை மதித்து இளையராஜா பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை..இந்த நானறியாத/கேட்காத/எனக்குத் தேவையே இல்லாத அசிங்கப் பாடலைப் பத்தி என்னிடம் கருத்துக்கேட்பது என்னை இழிவுபடுத்துவதுபோல் இளையராஜா உணர்ந்து அவனைத் திட்டி இருக்கலாம்..கேள்வி கேக்கிற்வன் எல்லாருக்கும் அவனை மதித்து அவன் கேள்விக்கு பொறுப்பாக பதில் சொல்லணும்னு என்ன சட்டமா என்ன? அதுவும் ஒரு கெட்ட வார்த்தைப் பாடலுக்கு இளையராஜா சப்போர்ட் பண்ணுவாரா? என்கிற கேள்வியே இருக்கக்கூடாது என்பது அவர் கருத்து.
ReplyDeleteசாரு நிவேதிதா ட்ட கேட்டால் இதை விவரச்சு பச்சை பச்சையா நாலு மணி நேரம் பேசிப்புட்டு, அது தப்பு வன்மையாகக் கண்டிக்கிறேன்னு சொல்ல வாய்ப்புண்டு..ஏன்னா அந்தாள அரிப்பை இப்படித்தான் தீர்த்துக்குவான்.. இளையராஜாவுக்கு அதுபோல் ஆர்வம் இல்லையோ என்னவோ. தன்னை முதிந்தவராக்வும், தன்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்பது தன்னை அவமரியாதை செய்வதுபோலும் உணர்ந்து இருக்கலாம். அதன் வெளிப்பாடுதான் இந்த "அறிவு இருக்கா உனக்கு?"! அதை தப்புனு நான் சொல்லமாட்டேன். ஏன்னா என்னிடம் அப்படி ஏதாவது வீம்புக்கு கேட்பவற்களிடம் ..அதுபோல்தான் நான் பதில் சொல்வது வழக்கம். ஆக, என்னையும் இன்னொரு இளையராஜாவாக வைத்து நீங்க திட்டுவதால் விளக்கம் சொல்ல வந்துட்டேன்..:)
இம்மாதிரி பொது இடங்களில் இளையராஜா கோபப்படுவது ஒன்றும் புதிய விஷ்யமில்லை. ஏற்கனவே இது மாதிரியான நிகழ்ச்சியை நான் படித்திருக்கிறேன்.
ReplyDeleteஅந்த பத்திரிக்கையாளர் உங்களுக்கு அறிவிருக்கா என்று திருப்பி கேட்காமல் விட்டுவிட்டார்.
இளையாராஜா எப்படிப் பேசுவார் என்பது இப்போதுதான் தெரியுமா என்ன? இந்த மீடியாக்கள் தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் சேனல் ஏதாவது ஒரு பக்க சார்புடையதாகவே இருக்கும்.
ReplyDeleteஎத்தனை நியூஸ் சேனல் கனவான்கள் அரசியலிலேயே என்னென்ன செல்வாக்குகளை வைத்துக் கொண்டு என்னென்ன செய்தார்கள் என்பதையும் படித்தோம். முப்பது கோடி ஜனங்களுக்கும் ஒரே மாதிரி கருத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒருவரின் கருத்து இன்னொருவரின் கருத்திலிருந்து மாறுபட்டதாயிருந்தால் அவரை வசைபாடும் வழக்கம் போக வேண்டும். இளையராஜா இதில் கருத்துத் தெரிவித்திருந்தால், எந்த பக்கம் பேசி இருந்தாலும் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சிலர் ஆதரவு / எதிர்ப்பு என்று எழுதிக் கொண்டிருப்பார்கள். இது இன்றைய வலையுலகின் சுதந்திரம்.
நாம் இந்தப் பாடல் பற்றியே மீண்டும் மீண்டும் பேசி நெகட்டிவ் வகையிலாவது விளம்பரம் கொடுக்கிறோம். நான் இளையராஜா பாடல்களை ரசிக்குமளவு அவர் பேச்சுகளை ரசிப்பதில்லைதான். அவருக்குச் சங்கடம் தரும் நோக்கில் அந்த இடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அன்றைய வெளிப்பாடு அது. விடுங்கள்!
Pathrikkaiyaalargal kombu seevi viduvadhil kilaadigal. illayaraja ippadi sonnaar appadi sonnar endru allogalap paduthividuvaargal. Adnaal ippadiyaana aappu thevai dhaan avargalukku.
ReplyDeleteதன்னை எதற்காக மதிக்கிறார்கள், தனது எந்தத் திறமைக்காகத் தான் போற்றப்படுகிறோம் என்று கூட உணர்ந்துகொள்ள முடியாத “ஞானஒளி”யை அவருக்குச்சூட்டிவிடடார்கள். மனித நிலையிலிருந்து தெய்வஞான(?)நிலைக்கு வந்துவிட்டதாக நினைக்கும் அவரை எதார்த்த உலகத்திற்குக் கொண்டுவரும்படியான கேள்வியைக் கேட்ட மனிதரிடம் இந்த ஞானி கோவப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். சிலர் கேட்கும் கேள்விகளிலேயே அவர்களின் அறியாமை அறியப்படுமல்லவா? அதுதான் நடந்திருக்கிறது. தங்கள் ஒப்பீடும் அருமை. அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமல்ல என்று வெளிப்படுத்தியிருப்பதை அவரது கண்மூடி ரசிகர்கள் கவனிக்க வேண்டிய தருணமிது. நன்றாக ஒப்பிட்டுஎழுதியமைக்குப் பாராட்டுகள் தமிழரே! முகநூல் கருத்துகளும் அருமை. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு வாரிவழங்கிய அவ்வள்ளலுக்குப் பெருமாள் பொது அறிவைத் தரலயே? நல்ல வேளை அந்தப் பத்திரிகை நண்பர்மீது இந்த ஞானி “அறிவிருக்கா?” னு கேட்டு வழக்கேதும் போடலியே? அதுவரை நாடு தப்பித்தது.
ReplyDeleteயோவ் தமிழா!
ReplyDeleteஎல்லா விஷயத்திலயும் உம்ம கருத்த கச்சிதமா சொல்லுவீரு..!
இப்ப என்ன ஆச்சி உ''மக்கு''
இரு கோடு தத்துவம்
தெரியும்தானே!
இப்ப இங்க உள்ள ஜனங்க
ஓரளவுக்கு இல்லாட்டியும்
'பேரளவுக்கு'' ஆவது யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க..
இதை
மறக்கடிக்கவும்
மழுங்கடிக்கவும்தான்
இந்த முயற்சி என்பது கூடவா உ''மக்கு''தெரியாம போச்சு
இப்ப போய் இந்த பன்னிங்களுக்காக (நான் ஆங்கில (funnya) பன்னிய சொல்றேன்.)
இருக்குற பெரிய பெரிய தலை (பீப் சவுண்டு..)மற்றும் தலை. (பீப் சவுண்டு..) களை கேக்குறத விட்டுட்டு., உம்மையும் (உண்மையும்) என்னையும் போன்ற சாதா' ரணமான' ராசைய்யா' எனும் எளிய ராஜாவிடம் போய் கேள்வி கேட்ட அந்த ஊடக மேதையைத்தான் நீர்
கேட்டிருக்கனும்...
திட்டி இருக்கனும்...
வாய்ப்பு இருந்தால்...!
கொட்டியும் இருக்கனும்..
அத கவனிக்காம உட்டுட்டீரே தமிழா..?
கரெக்ட் தான்! அதை விட இந்த பாடலுக்கு எதிராக போராட்டம்,எதிர்ப்பு என காட்டிய நேரத்தினை சென்னை வெள்ளம் நிதி, நீதி நிவாரணம், அரசின் மந்த நிலை சரியான வடிகான் அமைப்புக்கள் என கேட்டு எவரேனும் போராட்டாம் நடத்தி இருந்தாலும் பரவாயில்லை.
DeleteMistake in both side. That reporter is asked stupid question and that too to wrong person,. Raja could avoid it in different way. But don't blame Raja completely...
ReplyDeleteஇளையராஜாவின் பாடல்களை மட்டுமே ரசிப்பவர்கள். அவ்வளவே. அவரது இது போன்ற பேச்சுகள் பல சமயங்களில் வெளிப்பட்டதுண்டு. அது போன்று ஊடகங்களும் தங்கள் தர்மத்தைக் காப்பதாகத் தெரியவில்லை. சமூகத்தில் புகழ் வாய்ந்தவர்கள் எது சொன்னாலும் அதைச் சர்ச்சையாக்கி விடுகின்றன ஊடகங்கள். ஏனென்றால் ஊடகங்களும் ஏதேனும் ஒரு கட்சி இல்லை, தனிநபருக்கு ஆதரவு தருவதாகவே இருக்கின்றன. பரபரப்புச் செய்திகளைத் தருவதே இப்போது ஊடகங்களின் முதன்மையாகி இருக்கின்றது அதுவும் வியாபாரத்திற்காக, டிஆர்பி ரேட்டிற்காக...அட போங்கப்பா என்று பல சமயங்களில் தோன்றுகின்றது.
ReplyDeleteஇதே இளையராஜா கேட்டவர் ஒரு பார்பான் என்று இருந்தால் இப்படி கேட்டு இருப்பாரா. மேதைதான். ஆனால் தன் இனம் மிதிபட்டலும் அதை பற்றி கவலை படமாட்டார்.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் மதுரை தமிழன். இந்த இளையராஜாவுக்கு எண்பதுகளிலேயே இப்போது போன்ற எதிர்ப்புகள் வந்திருந்தால் ஒருவேளை இன்றைக்கு நாம் சிம்பு அனிரூத் பற்றி விவாதம் செய்ய வேண்டிய நிலையே வந்திருக்காது. எல்லாம் இவர் ஆரம்பித்துவைத்த அசிங்கம்தான். அவரது நல்ல காலம் அப்போது மீடியா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. இல்லாவிட்டால் அவர் பாடும் திண்டாட்டம்தான்.
ReplyDeleteஇவர் சமீபத்தில் வெள்ள நிவாரணத்திற்கு சென்றபோது அங்கிருந்த மக்கள் "உங்களைப் பார்ப்பதே எங்களுக்கு நிவாரணம் கிடைத்தாற்போல" என்று சொன்னதாக மேடையில் குறிப்பிட்டார். எந்த சமயத்தில் தன் சுய புராணத்தை அவிழ்த்து விடுகிறார் இந்த மனுசன் என்று கோபம் ஏற்பட்டது. இவர் என்றைக்கும் திருந்தவே போவதில்லை. இசை ஞானிக்குப் பதில் அதே ஓசை கொண்ட வேறு பெயர் தான் இவருக்கு பொருத்தம் என்று தோன்றுகிறது.
இளைய ராஜா, ரகுமான் உள்ளிட்டவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டோருக்கு உதவிகள் செய்தனர். தான் செய்ததோடு செய்தவர்களையும் பாராட்டுவது நல்ல விஷயம் அல்லவா. நிவாரண உதவிகள் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கும்போது . இந்த நேரத்தில் அந்தக் கேள்வி தேவையற்ற ஒன்று. கோபம் அளவை மீறியது தவறு என்றாலும் கோபம் நியாயமானதே.கட்டுப் படுத்திக் கொண்டிருக்கலாம். வாயைக் கிளறி பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு சுயலாபம் பார்க்கவே இந்தக் கேள்வி கேட்கப் பட்டதாகவே கருதுகிறேன். அவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை அதுபோன்ற சமயமாய் இருந்தால் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்.
ReplyDeleteபாதிக்கப் பட்டோருக்கு எந்தப் பத்திரிகையும் பத்திரிகையாளர்களும் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதாக தெரியவில்லை.சில பத்தரிகைகள் வாசகர்கள் இடமிருந்துதான் வசூலிக்கத் தொடங்கியதே தவிர தனிப்பட்ட முறையில் சொந்தக் நிவாரண உதவி வழங்கியதாக தெரியவில்லை.
இளையராஜா ஆயிரம் போர்வைகளையும் ரகுமான் 50 டன் அரிசி வழங்கியுள்ளனர். இந்த உதவிகளை ஒருவர் கூட பாராட்டவில்லை. அவர் கோபப் பட்டதை மட்டும் வைத்து அவரை வசைபாடுவது நியாயமற்றது. முதலில் அவரது நிவாரணப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு பின்னர் அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என்பது என் பணிவான கருத்து.
வயதான பலரின் பேச்சுக்ளை கேட்கும்போது வயது ஆக ஆக பொறுமை சகிப்பு தன்மை குறைந்து விடும் என்று தெரிகிறது.
தப்பு இருவர் பக்கமும் இருக்கிறது
ReplyDeleteஒரு துக்க வீட்டில் அழுது கொண்டிருப்பவனிடம் ' நேற்று பார்த்த சினிமா எப்படி இருந்தது? ' என்று ஒருவன் கேட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும்? நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்பவராக இருந்தால் இளையராஜாவின் பதிலை தவறு என்று விமர்சிக்க மாட்டீர்கள்.
ReplyDeleteஎந்த இடத்தில் எதைக் கேட்பது என்ற விவஸ்தை பத்திரிக்கை நிருபருக்கும் வேண்டும். பரபரப்பு தலைப்புச் செய்திக்காகவும் ரேட்டிங் உயர்வுக்காகவும் எதையும் கேட்கத் துணியும் அதிகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? ' அம்மா' விடம் மட்டும் அளந்து அளந்து கேட்கத் தெரிகிறது!