Monday, May 16, 2011

நயன்தாரா பெண் என்பதால் தான் இந்த பாகுபாடா?

நடிகை நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தற்போது தெலுங்கில் தயாராகும் "ராம ராஜ்ஜியம்" படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், லட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.

புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகை நயன்தாரா சீதையாக நடிக்க இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தெலுங்கில் தயாராகும் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்துள்ளார் நயன்தாரா.எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும

மேலே உள்ளவை நான் படித்த இன்றைய செய்தி....மே 16, 2011

எதிர்ப்பாம் எதிர்ப்பு புண்ணாக்கு எதிர்ப்பு.....

உண்மை வாழ்கையை கலை வாழ்க்கையோடு ஒப்பிடுவது தவறு, அப்படி பார்த்தால் ராமர் வேடத்தில் நடிக்கும் நாயகனும் முறையானவர்தானா?... நயந்தாரா ஒரு நடிகை, அவருடைய நடிப்பை மட்டும பாருங்க....... மற்ற வேடங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அவர்களின் உண்மை வாழ்கையை ஒப்பிடுவடுவது இல்லை !!! ஏன் பெண்களை மட்டும் விமர்சிக்கிறார்கள் !!! கலை துறையில்  அவர்களின் நடிப்பை மட்டும் பார்த்தல் போதுமே.

இந்து மக்கள் கட்சிக்கு வேறு வேலை எதுவும் இல்லையா?படத்தில் வேஷம் போட்டு நடிப்பதற்கும் ஒரு எதிர்ப்பா? கே. ஆர். விஜயாஒரு காலத்தில் ரெகார்ட் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்தானே பிற்காலத்தில் அம்மன் வேஷம் போட்டு நடிக்கவில்லையா!இது வரை கடவுள் வேஷம் ஏற்று நடித்த நடிகைகள் நடிகர்கள் அனைவரும் உத்தமரா? ஏசு வேடம் ஏற்று எத்தனை நடிகர்கள் எத்தனை மொழி படங்களில் நடித்திருகின்றனர். எவரும் தடை செய்ய வில்லை

 

நித்தியானந்தா போன்ற ஆண் சாமியார்கள் செய்யாத தவறுகளையெல்லாம் செய்து உண்மை சாமியார்காளாக நடித்து கொண்டிருக்கிறாரகளே அவர்களுக்கெல்லாம் இந்த இந்துமக்கள் கட்சிகள் எதிர்ப்புகளை காட்டி அவர்களின் தோலை உரித்து மக்களிடம் காட்டி இருக்கலாமே ஏன் இதை செய்யவில்லை அவர்கள் எல்லாம் ஆண்கள் என்பதாலா?

மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.படத்தை படமாக பாருங்கள். நீங்கள் இவ்வாறு செயல்பட்டால் புராண படமே எடுக்க முடியாது. நல்ல கருத்துகள் எல்லாவித மக்களிடம் போய் சேர வேண்டும். அது மதக் கருத்துக்களாக இருந்தாலும் சரி மனித நேய கருத்துக்களாக இருந்தாலும் சரி

இந்த காலத்தில் இந்த மாதிரி நல்ல படங்கள் எடுத்து வெளி வருவதே ஆச்சிரியம். அதையும் இல்லாத காரணம் சொல்லி தடுத்து விடாதிரகள்.

பெண்களையும் சரி சமமாக கருதும் மனப்பான்மை நம்மில் வேண்டும் சிவனில் ஒரு பாதி பார்வதி என்பதை மனதில் கொண்டு எல்லா ஆண்மகன்களும் செயல்படுங்கள்
16 May 2011

8 comments:

  1. சினிமா துறையிலும் ஆணாதிக்கமா.. :(

    ReplyDelete
  2. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். உங்கள் கேள்விகள் நியாயமானவை .... பதில் சொல்ல அவர்கள் நியாயமானவர்கள் அல்லவே.

    ReplyDelete
  3. //எண்ணங்கள் 13189034291840215795 said...

    சினிமா துறையிலும் ஆணாதிக்கமா.. :(//

    நீங்கள் சினிமா பார்ப்பதே இல்லையா நண்பா???

    ReplyDelete
  4. நீங்கள் சினிமா பார்ப்பதே இல்லையா நண்பா???//

    எப்பவாவது பார்ப்பதுண்டுதான்..

    சினிமாவை சொல்லல நண்பரே.. அது ஆணாதிக்கமே..

    ஆனா திரைத்துறையிலுமா னு தான்..

    அங்கிருந்தே பல பெண்கள் துணிவா வெளி வந்துள்ளனரே , ஜெயா அம்மையார், ராதிகா போல..

    வருத்தமே..:(

    ReplyDelete
  5. //சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்//

    ம்.. அப்படிப் பாத்திருந்தாங்கன்னா, முன்னாடி ராமாயாணம் சீரியல்ல ராமர்,சீதையா நடிச்சவங்களை கட்சியில சேத்துகிட்டு, தேர்தல்லயும் நிக்க வச்ச கொடுமை நடந்திருக்குமா?

    //கே. ஆர். விஜயா ஒரு காலத்தில் ரெகார்ட் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்தானே//
    அப்படியா?

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆலோசனையை விஸ்வரூபம் பிரச்சினையப்ப சொன்னீங்களா.....????

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.