உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 29, 2016

அமெரிக்கா போக ஆசையா? அப்ப இந்த "விசா பாலாஜி கோயிலுக்கு' சென்று பிரார்த்தனை பண்ணுங்க....avargal unmaigal
அமெரிக்கா போக ஆசையா? அப்ப இந்த "விசா பாலாஜி கோயிலுக்கு' சென்று பிரார்த்தனை பண்ணுங்க....

இப்படியும் ஒரு கோயில் ( விசா பாலாஜி கோயில் ) The Visa Temple.

தென் இந்தியாவில் உள்ள ஹைராபாத்தில் (Chilkur Village, Gandipet, Hyderabad) இந்த விசா கோயில் உள்ளது, இங்குதான் மக்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு விசா கிடைக்க தங்கள் பிரார்த்தனைகளை வந்து செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கோயிலை வலம் வந்து தங்கள் பாஸ்போர்ட்களை அங்குள்ள குருக்களிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி செல்கின்றனர். இப்படி செய்வதால அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு செல்ல விசா கிடைக்கிறது என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள்


Chilkur Balaji Temple, popularly known as "Visa Balaji Temple https://en.wikipedia.org/wiki/Chilkur_Balaji_Temple

இந்த கோயிலின் உண்மையான பெயர் Chilkur Balladic என்பதாகும். எஞ்சினியரிங்க படித்த மாணவர்கள் குருப் 1980 ல் இங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் அமெரிக்காவிற்கு விசா கிடைத்தாக நம்பினார்கள். அப்படி அவர்கள் சொன்னதில் இருந்து இங்கு மக்கள் அதை நம்பி இங்கு வர ஆரம்பித்து காலப்போக்கில் அந்த கோயிலின் பெயர் மாறி இப்போது The Visa Temple என்று அழைக்கப்படுகிறதாம்.

இந்த கோயிலை 11 தடவை சுற்றி வந்து பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். அதன் பிறகு அவர்களுக்கு விசா கிடைத்தால் 108 தடவை சுற்ற வேண்டுமாம்.

இந்த கோயிலில் உள்ள எஸ்.ரங்கராஜன் என்ற குருக்கள்  இங்கு வரும் அனைவருக்கும் விசா கிடைத்துவிடுவதில்லை சொல்கிறார்.. எத்தனை சதவிகித மக்களுக்கு இங்கு வருவதனால் விசா கிடைக்கிறது என்று நாங்கள் டிராக் செய்வதில்லை என்றும் சொல்கிறார். ஆனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிதது கொண்டே இருக்கிறது என்கிறார்

இந்த கோயில் பற்றி நேற்று CNN நீயூசில்  செய்தியாக வெளிவந்து இருக்கிறது.

அதற்கான வீடியோவும்.... செய்தி அறிக்கையும் இங்கே உங்களுக்காக ஆங்கிலத்தில் அப்படியே தந்து இருக்கிறேன். ஆனால் இந்த செய்தி மிகப் பழைய செய்தி இது பற்றி 2006ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்து இருக்கிறது  ஆனால் மேலை நாட்டு மீடியாக்கள் கடந்த சில தினங்களாக  இது பற்றி பேசிவருவது ஏன்?
 
இந்த விசா கோயில் பற்றி சர்ச் செய்கையில்  மேலும் ஒரு விசா கோயில் இந்தியாவில் இருப்பதாகவும் செய்திகள் அறிந்தேன்.

Khadiatemple ஹனுமான் ஆசியால் இந்த கோயிலில் விசா கிடைக்கிறதாம். இது Wed, 21 Nov 2007 ல் வந்த செய்தி. இந்த Khadia temple அகமதாபாத்தில் இருக்கிறது.

சரி மக்களே இனிமேல் என்ன பார்க்க வர நினைப்பவர்கள் முதலில் இந்த் கோயிலுக்கு சென்று விசா பெற்று வரவும்... அப்படி வரும் போது இந்தியாவில் டிசைன் டிசைனாக தங்க நகைகள் தயாரிக்கிறார்களாமே.....அதனால் வரும் போது எனக்கு ஒரு கிலோ தங்க நகைகளை மறக்காமல் பரிசாக வாங்கி வாருங்கள்
Want a U.S. visa? Pray at this Indian temple

Hundreds of people stream into the small temple in Southern India at dawn. By dusk, there will be thousands walking in circles. They recite prayers, offer up coconuts - and clutch passports. The Hindu place of worship outside of Hyderabad is known as "The Visa Temple."

It's real name is Chilkur Balladic, and it first gained its reputation in the 1980s thanks to a group of engineering students who were said to have received visas to study in the U.S. after visiting.Tradition dictates that worshipers seeking visas must make 11 laps around the sanctuary. Those who are successful return to make 108 rounds in a show of gratitude.

For Indian nationals, the process of applying for visas to work or study in the U.S. can be laborious. There's a pile of paperwork, and lottery systems that limit the number of visas granted. According to U.S. government statistics, 1.5 million Indian residents were granted non-immigrant visas to the U.S. in 2013, which are given for temporary work, tourism, education and cultural exchange programs. Another 65,000 received "green cards" that allow them to live and work in the U.S. permanently.

Increasing numbers of highly-educated professionals from India have emigrated to the U.S. in recent decades, including many scientists, engineers, doctors and medical technicians.

Manjunath Singh at Chilkur Balaji.Manjunath Singh is trying his luck. He walks barefoot, and sometimes loses count of his laps. Still, he presses on."It's worth giving it a try, right?" he asks.All that separates Singh, 26, from a tech job in Silicon Valley is the right sticker in his passport. His last visa application was denied. But with a new application pending, he's hoping for more luck. This time, he's leaning on prayer."It might not be exactly what you wish for, but maybe something in that direction. Something positive," Singh said.Written testimonials published by the temple tout the successes of visa seekers.

"It's not like everyone who has come here got visas -- 100%," admits S. Rangarajan, a Hindu priest who blesses passports. There's no formal effort to track the temple's success rate with visa applications.

Whatever the number, it's high enough to keep people coming, and to keep them coming back, if at first they don't succeed.


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. கேள்விப்பட்டதுண்டு ...

  ReplyDelete
 2. இதுபோல சென்னை நங்கநல்லூரில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு!

  ReplyDelete
 3. நம்பிக்கை.... அதுதானே எல்லாம்!

  ReplyDelete
 4. எங்க கமென்ட் எங்க போச்சு??? ஹும் இந்த விசா பாலாஜி எங்க கமென்ட கடாசிட்டாரு பாருங்க...அவருக்குக் கோபம் ..

  இங்கு நீங்கள் சொல்லியிருக்கற செய்திகளைப் பார்க்கும் போது இந்த இரு ஊர் மக்கள் அதிகம் பேர் அமெரிக்கா வருவதற்குப் பல பிரயத்தனங்கள் செய்வார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு அந்த ஊர் மக்களிடமிருந்தே. அது சரியோ??!! நம்பிக்கைதான் வாழ்க்கையே.

  கீதா

  ReplyDelete
 5. இது வெளியிட அல்ல சகோ...மகனுக்கு OREGON VET SCHOOL ல் VETERINARY INTERNSHIP AND RESIDENCY MATCHING PROGRAM (VIRMP) கீழ் இன்டெர்ன்ஷிப் மேச் ஆகியிருக்கிறது. H1 VISA . ஜுன் 20 தேதி வாகில் அவனது பயணம். ஜூன் 29 ப்ரோக்ராம் தொடங்குகின்றது. ஒருவருடம். பின்னர் ரெசிடென்சி முயற்சி செய்யும் எண்ணம் உள்ளது.

  geetha

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog