Friday, January 17, 2025

 இதுதாண்டா அமெரிக்கா : ஹூயுமன் லைஃப் நாட் மேட்டர்

 

OpenAI Whistleblower Suchir Balaji Found Dead:



உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று கூட,  சர்வாதிகார நாடுகளுக்குச் சற்றும் இளைத்தது அல்ல. சர்வாதிகார நாட்டிற்கும் ஜனநாயக நாட்டிற்கும் உள்ள ஒரு வித்தியாசம் ஜனநாயக நாட்டில் அதிகாரப் பதவிகளில் உள்ளவர்களைக் கலாய்த்து மீம்ஸ் போடலாம் அல்லது பேசலாம்..  ஆனால் சர்வாதிகார நாட்டில் அப்படிச் செய்ய முடியாது .அப்படிச் செய்தால் செய்தவர்கள் உயிரோடா இருக்கமாட்டார்கள் . மேலும்  ஜனநாயக நாட்டிற்கும் சர்வாதிகார நாட்டிற்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை . அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களை ஆட்டம் கொள்ளச் செய்யும் அளவிற்கு நமது செயல்பாடு  இருக்குமானால் நாம் உயிரோடு இருக்க முடியாது . சர்வாதிகார நாட்டில் கொலை செய்யப்படுவார்கள் . ஜனநாயக நாட்டில் அந்தக்  கொலையைத் தற்கொலையாக அறிவிப்பார்கள் அவ்வளவுதான்

ஆம் இதை ஏன் இப்போது சொல்லுகிறேன் என்கிறீர்களா? அமெரிக்காவில் இந்திய வம்ச வழி அமெரிக்கக் குடிமகனுக்கு நேர்மையாக வாழ நினைத் போது ஏற்பட்ட துயரத்தை நீங்கள் அறியவே இதைச் சொல்லி இருக்கிறேன்.  தொடர்ந்து படியுங்கள் விஷயம் உங்களை அதிரச் செய்யும்


கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்கரான சுசீர் பாலாஜி, UC பெர்க்லியில் பட்டம் பெற்ற பிறகு 2018 இல் OpenAI இல் பயிற்சியாளராக சேர்ந்தார். சம் ஆல்ட்மேன் (OpenAI-ன் CEO) உடன் பணியாற்றியவர், 2021 இல், அவர் முழு நேர ஆராய்ச்சியாளராக சேர்ந்தார் மற்றும் ChatGPT- OpenAI இன் மிகவும் பிரபலமான கருவியை உருவாக்குவதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பாலாஜி திடீரென OpenAI இலிருந்து வெளியேறி,  பதிப்புரிமைச் சட்டங்களை நிறுவனம் மீறுவதாகக் கூறி ஒரு விசில்ப்ளோவராக மாறினார்.

பாலாஜி நியூயார்க் டைம்ஸுக்கு ஒரு நேர்காணலைக் கொடுத்தார், அதில் அவர் AI  மனிதகுலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களின் அசல் படைப்பிலிருந்து லாபம் ஈட்டுகிறது என்பதை உணர்ந்தபோது உடைந்ததாகக் கூறினார்.

 அவர் ஆல்ட்மேன் மற்றும் AI  நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் கடுமையான குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்து, அதைப் பற்றி பொது வெளியில் கூறி  அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில்   பாலாஜி தனது குடியிருப்பில் மரணமடைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டார். முதலில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா  மாநில அதிகாரிகள் இந்த மரணத்தைத் தற்கொலை என்று அறிவித்தனர்.


ஆனால், வேறு சிலரின்  அறிக்கைகளின் படி,   மரணம் நேர்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இது ஒரு கொலை சம்பவத்தை உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் தனது குற்றங்களை வெளிப்படுத்தியதற்கான விளைவாகக் கொல்லப்பட்டிருப்பதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பாலாஜியின் தாய், பூர்ணிமா ராமராவ், தன் மகனின் மரணம் பற்றிய அதிர்ச்சி தரும் கதையைப் பகிர்ந்து வருகின்றார். இது, அமெரிக்ககள் பலரால் "நாம் கடந்த காலங்களில் கேட்டிராத அதிர்ச்சி தரும் கதை" என்று சொல்லப்படுகின்றது. அவர் தனது மகனின் மரணம் சுயபிராரம்பமாக இல்லாமல், ஒரு பெரிய மறைமுக விசாரணை மற்றும் தொழில்துறை தவறுகளுக்கான வெளிப்பாடாக இருக்க முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள அதிகார பிரச்சினைகள், நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் தவறுகளை வெளிப்படுத்துபவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிய கேள்விகள் எழுப்புகிறது.

இந்த கொலையைத் தற்கொலையாக்க கலிபோர்னியா மாநில அதிகாரப்பதவிகளில் உள்ளவர் முயல்கிறார்கள் அவர்களின் கைகள் பலவிடங்களில் பரவுவதால் விசாரணை சரியாக நடத்தைப்படவில்லை என்று பாலாஜியின் அம்மா பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். மாநில அரசின் மீது முழு நம்பிக்கையை இழந்த அவர் பெடரல் அரசை முழுமையாக நம்பி தன் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல மீடியாக்களும் இந்த விஷயம் பற்றி அதிகம் பேசாமல் முடி மறைக்கும் செயல்களில் இருக்கும் போது இவர் வரும் 20 தேதி ஆட்சியில் அமரப் போகும் டிரெம்பை நம்பியும் ஜனநாயகத்தை நம்பியும் போராடிக் கொண்டு இருக்கிறார்..

வழக்கமாக  இந்திய வம்ச வழியைச் சார்ந்த அமெரிக்கர்கள் ஏதாவது துறையில் வெற்றி பெற்றால் வரிந்துகட்டி இவர் இந்தியர் எனப் பெருமைப் பேசும் இந்திய மக்களும் இந்திய அரசும்  ஏன் மோடியும் கூட மௌனம் காத்து வருகின்றனர்

இந்த இளைஞரின் அம்மா  கொடுத்த பேட்டி ஒரு மணிநேரம் என்றாலும் பார்க்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை எழுந்திருக்க மாட்டோம் பார்த்த பின் மனம் மிகவும் கனத்துடன் போகின்றது
----------------------------------------------------------------------------------------------------------

இந்த பேட்டிக்கான லிங்க் இங்கே  https://x.com/TuckerCarlson/status/1879656459929063592

@TuckerCarlson
Suchir Balaji worked as an engineer for Sam Altman building AI, until he decided that Altman was committing crimes. Balaji became a whistleblower, and soon after was found dead in his apartment. California authorities claim it was suicide. Crime scene photos clearly show a murder. Balaji’s mother, Poornima Ramarao, tells the most shocking story we’ve heard in a long time.

----------------------------------------------------------------------------------------------------------
ப்ளாக் லைஃப் மேட்டர் என்று  குரல் எழுந்தது போல ப்ரெண் கலர் மேட்டர் என்று குரல் எழவேண்டும் அல்லது  எல்லா ஹூயூமன் லைஃப் மேட்டர் என்று  உரத்த குரல் எழவேண்டும்.


இதற்க்காக உங்கள் குரல் ஒலிக்கவில்லையென்றால் எந்த நேரத்திலும் எந்த நாட்டிலும் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பாது இருப்பதுதான் உங்கள் உயிருக்கும் நல்லது


அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.