ஸ்டாலின் தெரிந்துதான் இப்படிப் பேசினாரா அல்லது என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிவிட்டாரா?
எஸ்.வி சேகரின் நாடாக விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எஸ்வி சேகரைப் பற்றிப் பேசும் போது
"எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் இருக்கும்
கட்சியில் இருப்பவர்களையே துணிச்சலுடன்
விமர்சிக்கும் ஆற்றல் கொண்டவர்
எஸ்.வி.சேகர் என்று பேசி இருக்கிறார்
அப்படிப் பார்த்தால் எஸ்வி சேகர் இப்படிப் பேச வாய்ப்பு கொடுத்த அந்த கட்சியில் ஜனநாயகம் அதிகம் இருப்பதாகத்தானே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது அப்படி இல்லையென்றால் அவரின் பேச்சு கட்சியில் எந்த ஒரு வித பாதிப்பையும் சலனத்தையும் ஏற்படுத்தாது என்று அந்த கட்சித் தலைவர்கள் கருதியதால்தான் அவர் கட்சியில் உள்ளவர்களை எதிர்த்தாலும் கட்சி சும்மா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதில் எது சரியாக இருந்தாலும் எஸ்வி சேகருக்கு இப்படிப் பேசத் துணிச்சல் ஏதும் தேவையில்லைதான்?
சரி எஸ்வி சேகர் தன் கட்சியில் உள்ளவர்களைத் துணிச்சலுடன் விமர்சிப்பது போல உங்கள் கட்சியில் உள்ள திமுகவில் உள்ளவர்களும் இப்படி துணிச்சலாக திமுகவில் உள்ளவர்களை விமர்சித்தால் இப்படித்தான் அவர்களையும் துணிச்சல் மிக்கவர் என்று பேசி புகழ்வீர்களா அல்லது இடைநீக்கமோ அல்லது பதவியிலிருந்து கீழே இறக்குவீர்களா?
இல்லை எங்கள் கட்சியிலும் ஜனநாயகம் இருக்கிறது என்றால் உங்களிடம் ஒரு கேள்வி பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பதவியிலிருந்து வேறு அமைச்சராக மாற்றியது ஏன் என்ற கேள்விக்கு உங்கள் மனசாட்சியே அதற்குச் சரியான பதில் அளிக்கும் என்று சொல்லிக் கொள்கின்றேன்.
எஸ்வி சேகரின் நாடக விழாவிற்கு அது அவர் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்றாலும் அது பாராமல் முதல்வர் என்று முறையில் விழாவை சிறப்பிக்கச் சென்று சரிதான் ஆனால் அப்படிப்பட்ட கலைத்துறை விழாவில் அரசியல் பேச்சு எதற்கு?
அது போல எஸ்வி சேகர் தனது கலைத்துறை சாதனைக்கா ஒரு விழா நடத்தினால் அதில் எவ்வளவோ நகைச்சுவை நிகழ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்களை இழிவாகப் பேசி நகைச்சுவை நாடகத்தை நடத்துவது சரிதானா அது முறைதானா?
கலைதுறைவிழாவில் அரசியல் பேசி இருவரும் சோரம் போவது சரிதானா?
அடுத்த முறை இப்படி ஒரு கூட்டத்தில் இது போல நடந்தால் அதை ஒரு முறைக்கு இரு முறை யீஸ்த்து பேசுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.