Saturday, January 25, 2025

கர்மா  திரும்ப கடிக்கத்தான் செய்யும் மருந்து கசக்கத்தான் செய்யும்

  



பங்களாதேஷ் மற்றும்  இலங்கையில் வந்தவர்களுக்கு   இந்தியா என்ன மருந்து கொடுத்ததோ அதே மருந்தின் சுவையை அமெரிக்க  இங்குள்ள இந்திய இந்திய மற்றும் பல நாட்டு மக்களுக்கு கொடுக்கிறார்கள்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘சட்டவிரோத’ பங்களாதேஷ் குடியேற்றத்திற்கு எதிராகவும்
மோடியின் NRC & CAA க்கு ஆதரவாகவும் பேரணிகளை நடத்தினர்.  இப்போது, ​​அமெரிக்காவிற்குச் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான ட்ரம்பின் கொள்கைகள் மனிதாபிமானமற்றது என்று அழுகிறார்கள்.

பங்களாதேஷ் மற்றும்  இலங்கையில் வந்தவர்களுக்கு   இந்தியா என்ன மருந்து கொடுத்ததோ அதே மருந்தின் சுவையை அமெரிக்க  இங்குள்ள இந்திய இந்திய மற்றும் பல நாட்டு மக்களுக்கு கொடுக்கிறார்கள்

தமிழி நகைச்சுவையாக   ஒன்று சொல்லுவார்கள் .அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி .ஆனால் தனக்கு வந்தால் இரத்தம் என்று அது போலத்தான் அமெரிக்காவில்  இல்லீகலாக வந்த  அல்லது லீகளாக வந்து பின்  இல்லீகள் ஸ்டேஜ்ஜில் இருப்பவர்கள் நிலை இன்று இருக்கிறது..


 பொதுவாக  மக்களுக்கு தாங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று கருதி தங்கள் இருக்குமிடத்தில் இருந்து  இடம் பெயர்ந்து செழிப்பான பகுதிகளுக்குச் செல்லுவார்கள் இது இயற்கையே.. இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நாட்டின் மக்களைப் பொருத்த வரை இந்தியா  ஒரு நல்ல நாடு என்ற மனநிலை இருப்பதால் அங்குச் சென்று வசிப்பது தங்களின் நலத்திற்கு நல்லது என்று குடி பெயர்கிறார்கள். அது போலத்தான் இந்தியர்களும் மேலை நாடுகளை நோக்கி நகர்கிறார்கள் . இவர்கள் லீகலாக செல்ல இயலாத நேரத்தில்  இல்லீகளாக செல்கிறார்கள். அது தப்பா என்றால் சட்டப்படி தப்புதான் . ஆனால் எல்லோரும் சட்டப்படிதான் எல்லா விஷயங்களிலும் செயல்படுகிறார்கள் என்றால் இல்லைதானே அது போலத்தான் இவர்களின் செயலும்.

ஆனால் இந்தியர்கள் தனக்கு என்றால் ஒரு சட்டமும் .அடுத்தவனுக்கு என்றால் வேறு சட்டமும் என்று நினைக்கிறார்கள் .அதனால் மோடியின் NRC & CAA க்கு ஆதரவாகவும் பேரணிகளை நடத்தினர். அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை இது போல தங்களுக்கும் ஒரு நாள் நேரும் என்று..

இன்று அவர்களுக்கு நேரும் போது கதறுகிறார்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அமெரிக்க அரசு 18 ஆயிரம் பேர்க்ளை  அனுப்புகிறது என்று செய்திகள்  வந்தாலும் அனுப்பப் போவது என்பது இதைவிடப் பல மடங்கு அதிகம் ஆனால் அது இங்கு மறைக்கப்படுகிறது .காரணம் அப்படி அனுப்பினால் மோடியின் பிம்மம் உடைந்துவிடும் என்று. இங்கு அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமான இல்லீகள் இந்தியர்கள் இருக்கிறார்கள். இப்போதைய நிலவரப்படி இந்தியர்கள் என்று மட்டுமில்லை எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் திருப்பி அனுப்பப்படுவார்கள் .அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை

லீகளாக ஹெஸ் 1 விசா மற்றும் மற்றைய விசாவில் வந்து இருப்பவர்கள் அவர்களின் காலம் முடியும் வரை பிரச்சனைகள் இல்லை

அமெரிக்காவில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நிறையப் பேசலாம்  ஒரே பதிவில் எல்லா விஷயமும் சொல்ல இயலாது அதனால் மீண்டும் சந்திப்போம்

அது வரை உங்களிடம் இருந்த விடை பெறுவது

உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.