Sunday, January 26, 2025

இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
    




 உலகில் மிகப் பெரிய ஜனநாயக (குடியரசு) நாடு இந்தியா என்பதைக் கேட்கும் போது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நாட்டுக்கு  நீங்கள்  நல்ல குடிமகனாகத்தான் இருக்கிறீர்களா என்று  நினைத்துப் பாருங்கள் உண்மையில் நீங்கள் தலை குனியத்தான் வேண்டும் ..

தலை நிமிர்ந்து இருந்த  நீங்கள் ஏன் தலை குனிந்துள்ளோம் என்பதை நீங்கள் இந்த 76  வது குடியரசு தினத்தில் பார்த்து மீண்டும் நீங்கள் முதுகெலும்பு உள்ள மனிதர்களாக  எப்படித் தலைநிமிர்ந்து  நிற்பது எப்படி என்று பார்ப்போம்.


இந்தியக் குடி மகனே ஒரே  ஒருநிமிடம் நில்..... நான் கேட்கும் ஒரு கேள்விக்கு நீ ஒரு சிறந்த இந்தியக் குடிமகனாக இருந்தால் உன் மனதைத் தொட்டு உண்மையை சொல்லு.... கடைசியாக நீ எப்போது இந்தியத் தேசிய உறுதி மொழியை( Indian National Pledge )சொன்னாய். அதில் உள்ளதை சிறிதளாவது நீ கடைப்பிடித்தாயா என்ற உண்மையை சொல்லு?????

அப்படியா அது என்ன என்று கேட்கும் இந்த தலைமுறைக்காக அதை கீழே தந்துள்ளேன்

இந்தியா என் தாய் நாடு.
இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்.
என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன்.
என் நாட்டின் பழம் பெருமைக்காகவும் பன்முக மரபிற் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன்.
இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட நான் என்றும் பாடுபடுவேன்.
என் பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் அனைவரையும் மதித்து யாவரிடமும் மரியாதையும் பணிவன்புடனும் நடந்து கொள்வேன்.
எனது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன்.
அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே நான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.

மற்ற மொழிகளில் அதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 இதை நான் பள்ளிகளில் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் காலையில் நாங்கள் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம்.முதலில் அதன் முக்கியத்துவம் தெரியாமல் சொன்னோம் பின் அது தெரிந்து அதைக் கூட்டமாகச் சேர்ந்து சொல்லும் போது மனதில் ஒரு உறுதியும் உற்சாகமும் பெருக்கும்.  ஆனால் இந்த மாதிரி உறுதி மொழியை இப்போதும் பள்ளிகளில் எடுத்துக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை.

மாறி வரும் இந்த நவினகாலத்தில் இதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத்தான் நான் கருதுகிறேன்.

அந்த மாற்றங்கள்

இந்தியா என் தாய் நாடு :  இதில் மட்டும் மாற்றம் ஏதுமில்லை.

இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் : உலகின் மிகப் பெரிய பொய்களில் இப்போது இதுவும் ஒன்று. ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுதல் அடிதடிகளில் இறங்குதல், தன் சுயநலத்திற்காக மற்றவர்களின் காலை வாருதல் கொலைகளில் ஈடுபடுதல்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன் : அதனால் தான் மேலைநாடுகளைப் பற்றி பெருமை பேசி தாய் நாட்டை மட்டந்தட்டிப் பேசுதல்.

என் நாட்டின் பழம் பெருமைக்காகவும் பன்முக மரபிற் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். அதனால்தான் மேலை நாட்டுக்கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறேன்.

என் பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் அனைவரையும் மதித்து யாவரிடமும் மரியாதையும் பணிவன்புடனும் நடந்து கொள்வேன். மரியாதை பண்பாடு என்றால் என்ன விலை என்று கேட்கும் காலம் இது.

எனது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே நான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஆமாங்க அதனால்தான் லஞ்ச லாவண்யங்களுக்கு உறுதுணையாக இருந்து அதைத் திறம்படச் செய்பவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்கள் வளம் பெற்று அவர்கள் தரும் இலவசங்களைப் பெற்று நான் மகிழ்ச்சி அடைந்து நான் ஒரு நல்ல "குடி"மகனாக இருப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன்.

இப்போது இப்படித்தான் இந்தியன் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறானோ என்னவோ அதனால்தான்  தலை நிமிர்ந்து இருக்க வேண்டிய நாம் தலை குனிந்து நிற்பதாக நான் கருதுகிறேன்.

நமது இந்தியச் சமூக கட்டமைப்பு என்பதே பலகோடிக்கணக்கான பேரைக் கொண்ட மொழி, இன,மத, மாநில, தேசியவாத குழுக்களாக, ஒற்றைக்கால் விரலில் நிற்கும் பயில்வான் போல உள்ளது.  பயில்வான் போல ஒரு போக்கு காட்டி நாம்தான் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு என்று கூறிக்கொண்டு, நமது  பலவீனங்களைச் சரிசெய்துகொள்ளாமல், வெறும் பொருளாதார கணக்குக் காட்டி உலகையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி 2020ல் உலகில் நம்பர் ஒன் வல்லரசாக மாறிவிடுவோம் கூறி  வந்தீர்கள் ஆனால்  இப்போது 2025 ஆகிவிட்டது . இப்போதும் வல்லரசாகவில்லை ஏன் நல்ல அரசாகவும் இல்லை

நான் இப்படிச் சொல்வதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் ஆனால் இதுதான் உண்மை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து ஏதும் இருக்கப்போவதில்லை

ஆனால் இதை இந்த குடியரசு தினத்திலிருந்து நீங்கள் நினைத்தால் மாற்றி தலை நிமிர்ந்து நடக்கமுடியும் அது  உங்கள் கையில்தான் உள்ளது. அதற்காக நாம் இந்த குடியரசு தினத்தில் உறுதி மொழி எடுத்து மாற்றிக் காண்பியூங்கள்

மொழிகளால் நீங்கள்  வேறுபட்டு இருந்தாலும்  இனத்தால் இந்தியன் என்று மட்டும் நினைத்து எல்லா மக்களிடமும் சகோதர உணர்வுடன் பழகி வரும் தேர்தல்களில் பணத்திற்காக அல்லாமல்  தேச வளர்ச்சிக்காக உண்மையில் உழைப்பவர்களைத் தேர்ந்தெடுத்து  நாட்டை உலகின் தரமான குடியரசு நாடாக்கி பெருமை கொள்ளச் செய்யுங்கள்

 
We follow our Indian National Pledge, respect our national anthem, and respect our nation.  

இன்று தமிழகத்தில் நடந்து குடியரசு தினத்தை டிவி ஒலிபரப்பில் பார்த்தேன் .அதில் யாரும் இப்படி ஒரு உறுதி மொழி எடுத்ததை நான் பார்க்கவில்லை

மத்திய அரசின் விழாவிலும் யாரும்  இந்த உறுதிமொழியை எடுக்கவில்லை என்பது மனதை நெருடுகிறது.

தேசப்பற்று உள்ளவர்கள் இனிமேலாவது உறுதி எடுத்து இந்த நாட்டை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுங்கள். இல்லீகள் இந்தியர்களாக வேறு நாட்டில் நுழையாதீர்கள்  கர்மா  திரும்ப கடிக்கத்தான் செய்யும் மருந்து கசக்கத்தான் செய்யும் 



அன்புடன்
மதுரைத்தமிழன்

26 Jan 2025

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.