Sunday, January 19, 2025

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட வேண்டுமா??  ஏன் மீண்டும் குரல் ஆங்காங்கே எழுகிறதே 


#ஜல்லிக்கட்டு தடை: இன்றைய சமூகத்தின் பார்வை மற்றும் விவாதங்கள்
    

Jallikattu 2025


ஜல்லிக்கட்டு தமிழகத்தின் ஒரு பிரிவினரின் வீர விளையாட்டாக  இருந்தது. ஆனால் அது இப்போது  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக மாறி இருக்கிறது. அதனால்தான் அதற்குத் தடை ஏற்பட்ட போது சாதிப்பாகுபாடு இன்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து  உலகமெங்கும் அதற்கு ஆதரவாக அந்த தடை உடைய போராடி வெற்றி பெற்று இருக்கின்றனர்.

 இப்போது ஆங்காங்கே  உள்ளவர்கள் அதிலும் தங்களை அறிவுஜீவிகள் என்று கருதும் சிலர் "ஜல்லிக்கட்டில் சாதியம் உள்ளது என்று சொல்லி அதற்குத் தடை ஏற்படுத்த வேண்டுமென்றும், வேறு சில அறிவாளிகள் அந்த விளையாட்டில் பலர் மரணம் அடைக்கிறார்கள் அதனால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று  குரல் எழுப்புகிறார்கள்


விளையாட்டில் சாதிய பாகுபாடுகள் இருக்கிறது என்றால் அந்த பாகுபாட்டை களைந்தெறியும் முயற்சியில்தானே ஈடுபடவேண்டும் .அதைவிட்டுவிட்டு அதை அதற்குத்   தடை ஏற்படுத்த வேண்டுமென்று கூறுவது எந்த வகையில் நியாயம். ஒரு காலத்தில் கல்வி கற்றுத் தருவது என்பது ஒரு சாதியினரிடையே மட்டும்தான் இருந்து. அதற்காகக்  கல்வியைத் தடை செய்ய வேண்டுமா என்றா போராடினோம் இல்லைதானே? அதற்குப் பதிலாகக் கல்வி கற்றுத் தருவதை  அந்த ஒரு சாதியினரிடம் இருந்து மற்றவர்களிடமும் பரவச் செய்துதானே இன்று எல்லோருக்கும் கல்வி என்ற ஒரு நிலைக்கு அடைந்து இருக்கிறோம்

அடுத்தாக இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆதரவு தந்து போராடி இப்போது அதில் இறப்பவர்களுக்கு வருந்துவதை எப்படிப் புரிந்து கொள்வது அப்படி வருந்துவதையாவது புரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்காக அதைத் தடை செய்ய வேண்டுமென்று கூறுவது எப்படிச் சரியாகும்.

ஜல்லிக்கட்டுமட்டுமல்ல எந்த வீர விளையாட்டும் ஆபத்துக்குரியவைதான்.. கார் ரேஸ்  நடக்கிறது அதில் யாருமே காயப்படவில்லையா மரணிக்கவில்லையா? அதனால் அதற்குத் தடை ஏற்படுத்த வேண்டுமென்று எத்தனை பேர் போராடுகிறார்கள். குத்துச் சண்டையில் எத்தனை பேர் காயம் அடைகிறார்கள் எத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள். இப்படி எந்த விளையாட்டை எடுத்தாலும் காயம்படுபவர்களும்  மரணிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக அத்தனை விளையாட்டிற்கும் தடை ஏற்படுத்திவிட்டு எல்லோரையும் பஜனைமட்டும் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டு இருக்கலாமா என்ன?


சிலருக்கு  தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு மற்றும் பழக்க வழக்கம் மீது ஒருவித ஒவ்வாமை இருந்துவருகிறது. காரணம் அவர்கள் மற்ற இனத்தோடு ஒப்பீடும் போது  அவர்கள் தங்களது பண்பால் பழக்க வழக்கங்களால் தனித்து நிற்கிறார்கள். அது அவர்களை உறுத்துகிறது மேலும் அவர்கள் தேசியத்தோடு இணைய மறுக்கிறார்கள் என்ற ஒரு தவறான கருத்தும் இருக்கிறது. அதோடு திராவிடம் என்று ஒரு சொல்லும் அவர்களை உறுத்துகிறது. இதனால் அவர்கள் இதை எல்லாம் மாற்றி அமைக்க முயல்கிறார்கள். இதில் ஈடுபடும் ஒரு பிரிவினர் தமிழர்களாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்கள் வந்தேறி என்று அழைக்கப்பட்ட  ஒரு குழுவினராகவே இருக்கிறார்கள் . அதோடு சில படித்த தாழ்த்தப்பட்ட சாதியினரும் இவர்களோடு இணைந்து கொண்டு   குரல் கொடுத்து தங்களை உயர்வகுப்பினாரக காட்ட முயல்கின்றனர். இவர்கள் என்னதான் முயன்றாலும் அவர்களைப் பொருத்தவரை இவர்கள் ஒரு கருப்பாடுகளே.

இந்த ஜல்லிக்கட்டு ஒரு இனத்தோடு இணைந்து இருப்பதற்குப் பதிலாக ஒரு மதத்தோடு இணைக்கப்பட்டு இருந்தால்  அதற்குத் தடை ஏற்படுத்த முயன்று இருக்கமாட்டார்கள் அப்படி ஏற்படுத்த எவரும் முயன்றால் ஆகம விதிகளைச் சொல்லி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள்

ஜல்லிக்கட்டு மதுரையின் அடையாளம் .மதுரை தமிழர்களின் அடையாளம், சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரை என்றும் எப்போதும் தமிழர்களுக்கு அடையாளம்தான்


டிஸ்கி : இது ஒரு அறிவிஜீவியின்  கருத்துக்கள் அல்ல ஒரு சாதாரண எளிய மனிதனின் எண்ணங்களே. இதில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் அவை சரியாக இருந்தால் அதைக் கற்று  என் எண்ணங்களை மாற்றிக் கொள்கின்றேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.