Tuesday, March 21, 2023

 நேரு மட்டும் இந்துவாக இல்லாமல் இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால்?


நேரு மட்டும் இந்துவாக இல்லாமல் இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால் இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று  நினைத்துப் பார்த்தாலே மனசில் ஒரு உதறல் நிச்சயம் யாருக்கும் வரும் அப்படி ஒரு நிலை ஏற்படாததைப் பார்க்கும் போது இந்திய மக்கள் புண்ணியம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் நாட்டுக்குத் தலைவனாக வருவது எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்தே  புரிகிறது என்று சொல்லலாம்   .

@avargal unmaigal

நேருவின் மூளையில் தாடிஜியை போல வைரஸும் வெறுப்பும் இல்லை,  

ஒரு வேளை இருந்திருந்தால்  நேரு  தான் வாழ்ந்த காலம் முழுவதும்  ஆங்கிலேயர்களையும் முகலாயர்களையும் குற்றம் சாட்டி பொறுப்புகளை  கைகளைக் கழுவுவது போல  எளிதாகக் கழுவியிருக்கலாம், மேலும் தனது ஜும்லாக்கள் மற்றும் வெட்கக்கேடான பொய்களைத் தொடர்ந்திருப்பார்.. ஆனால்  இந்திய  மக்கள் செய்த புண்ணியங்கள் மற்றும்  தியாகங்கள்தான் அவரை அப்படி இல்லாமல் இருக்கச் செய்து இருக்கிறது.

அதன் காரணமாகத்தான்  இந்தியாவை எப்படி அனைத்து வரம்புகளுடன் முன்னெடுத்துச் செல்வது என்பதில் நேரு கவனம் செலுத்தினார்.1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாக மாறியது.  இந்தியா பாரத திருநாடாக  உருவான பிறகு, நேரு  இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வலியுறுத்தினார்.

நேரு  கல்வி நிறுவனங்களையும், பெரிய பொது நிறுவனங்களையும், பெரிய மருத்துவமனைகளையும் கட்டினார். பல நல்ல திட்டங்களை படிப்படியாக அறிமுகப் படுத்தினார்..அதன் காரணமாகவே  இந்தியாவை வல்லரசாகப் பார்க்கின்ற அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி ஏற்பட்டது.


ஆனால் மறுபுறம், பாகிஸ்தான் தலைவர்கள்    மதத்தின் மீது முழு கவனம் செலுத்தினார்கள் .முகமது அலி ஜின்னாவின் மரணத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு வரும் தலைவர்கள் நாட்டில் பெரிய கல்வி நிறுவனங்களையும் பொது நிறுவனங்களையும் திறக்க மறந்துவிட்டார்கள், நாட்டில் அடிப்படை நிறுவனங்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.  அதனால் ஏற்பட்டு இருக்கும் பின் விளைவுகள் இன்று நாம் கண் கூடாகப் பார்க்கிறோம்.

ஒரு கணம் சிந்தித்துத்தான் பாருங்கேளன்:


1947-ல் சங்கிகளுக்கு நாடு கிடைத்திருந்தால், பாகிஸ்தான் போன்று  மதத்தின் மீது சங்கிகள்  தங்கள் கவனத்தைச் செலுத்தி,  நாட்டை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்கள். நிச்சயம் சங்கிகள்  இந்திய நாட்டை ஆண்டு இருந்தால் இன்று நாம் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானின் நிலைக்கு  வந்து  இருப்போமா இல்லையா?.


ஆனால் கடந்த 9 ஆண்டுகளாகப் பாருங்கள்  வளர்ச்சி அடைந்த  நாடான இந்தியா சங்கிகளின் கையில் கிடைத்த பின் இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்குப் பதிலாக மத வெறி பிடித்த பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாட்டை போல மாறிக் கொண்டு இருக்கிறது.  வரும் தேர்தலிலும் தாடிஜியை ஜெயிக்க வைத்தால் இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடாக நிச்சயம் மாறும் அதில் சிறிது மாற்றம் இருக்காது என்பதி நான் அடித்துக் கூறுவேன்

ஆட்டுத்தோலைப் போர்த்தி ஒரு ஓநாய் உலா வருவது போல ஜனநாயக போர்வையில் ஒரு சர்வதிகாரி உலா வந்து கொண்டு இருக்கிறார்.
அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. எதற்கும் ஒரு முடிவு உண்டு... இதற்கு விரைவில்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.