Saturday, March 4, 2023



தமிழகத்தில் அதிகம் படிக்காமல் அதிகமாகச் சம்பாதிக்க வழிகள்

 

@avargal unmaigal


உங்கள்  பையன் லூசுத்தனமாக ஏதாவது உளறிக் கொண்டு இருந்தால் ,அவனைத் திட்டி அடக்காதீர்கள். அவனைச் சந்தோஷப்படுத்தி உற்சாகப்படுத்தி ,அது போல  தொடர்ந்து பேசச் செய்யுங்கள் ,அவன் வருங்காலத்தில் சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக வந்து  அதிகப் பணம் சம்பாதிப்பான்,

உங்கள் பையன் படித்துவிட்டு வேலைக்குப் போகாமல் எந்தவித ஒரு மோட்டிவேஷனும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் அவனுக்கு மேலை நாடுகளிலிருந்து வரும் மோட்டிவேசன் புத்தகங்களை வாங்கி படிக்கச் சொல்லி நேரம் கிடைக்கும் போது  மேலை நாடுகளிலிருந்து வெளியிடும் யூடியுப் சேனலில் வரும் மோடிவேசன் பேச்சுகளைப் பார்க்க வைத்து  அவனை  அதை அப்படியே தமிழில் வாந்தியெடுக்க வைத்தால் அவன் தமிழகத்தில் மிகச் சிறந்த மோட்டிவேஷன் ஸ்பிக்கராக வலம் வருவான்,


உங்கள் பையன் நல்ல சாப்பாட்டு ராமனாக இருந்து ஒழுங்காகப் படிக்காமலிருந்தால் அவனுக்கு ஒரு நல்ல கேமிரா வாங்கி கொடுத்து  எப்படி பிச்சைக்காரன் தெரு தெருவாகப் போய் பிச்சை எடுப்பானோ அது போலத் தெரு தெருவாகச் சென்று அங்குள்ள உணவங்களில் ஒசிச் சாப்பாடு வாங்கிச் சாப்பிடச் சொல்லி அதை மேமிராவில் பதிந்து ஆஹா ஒகோன்னு புகழ்ந்து  யூடியுப் சேனலில் போடச் செய்யுங்கள் நல்ல வருமானத்திற்கு  நிச்சயம் வழியுண்டு


உங்கள் பிள்ளைகளை மருத்துவம் எஞ்சினியரிங்க் என்று அதிகம் செலவழித்துப் படிக்க வைக்க வேண்டாம் அதற்குப் பதில் அரசு கல்லூரியில் ஏதாவது ஒன்றைப் படித்து பட்டம் வாங்கச் செய்துவிட்டு இணையத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு சான்றிதழ் கோர்ஸில் சேர்த்து விடுங்கள் அது மேலைநாட்டு சான்றிதழ் கோர்ஸ் என்றாலும் பரவாயில்லை அதன் பின் மனநல ஆலோசகர் மனநல மருத்துவர் என்று ஒரு விசிடிங்க் கார்ட் அடித்துக் கொண்டு பிஸினஸ் ஆரம்பித்துவிடலாம் யாரெல்லாம் கல்யாணம் பண்ணுகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹனிமுன் ப்ரியடு முடிந்த பின்னால் நிச்சயம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள் அதனால் மனநலம் பாதிக்கப்படும் உறவில் சிக்கல் ஏற்படும் இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன் படுத்தி அவர்களைக் கவர்ந்து இழுத்து கல்லா கட்டலாம்

உங்கள் குழந்தைகள் எடுத்தெறிந்து கண்ணியமற்ற முறையில் பேசினால் அவர்களைத் திருத்த முயலாதீர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி வளருங்கள் அவர்கள் தமிழகத்தில் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களாக வருவார்கள் அவர்களை ஒரு வீணாப்ப் போன கல்லூரியில் ஜெர்னலிசம் மட்டும் படிக்க வைத்து விடுங்கள்


இன்னும் அதிக வழிகள் சம்பாதிக்க இருக்கிறது... அதை இன்னொரு நாளில் சொல்லுகின்றேன்

  

@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. இதுவும் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  2. ஏன் இந்த பொறாமை
    சில தமிழ் நாட்டு யூட்டுபர் நம்மை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்
    முடிந்தால் நீங்களும் சம்பாதிங்களேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.