Saturday, March 11, 2023

  கோடீ மீடியா மற்றும் பிற பத்திரிகையாளர்களுக்கான செய்தி: ஹிட்லரும் தாடிஜீயும் ஒன்றா????

 

@avargalunmaigal



தேர்தல்களில் வெற்றி  பெறுவது ஒரு நல்ல தலைவனுக்கு முக்கியமான அளவுகோல் என்ற வாதத்தை முன்வைக்கும் கோடீ மீடியா மற்றும் பிற பத்திரிகையாளர்களுக்கான செய்தி:

*அடால்ஃப் ஹிட்லர் தான் போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட  தோல்வியடைந்ததில்லை. அது அவரை நல்ல தலைவராக்குமா?  அவரை  காமராஜர் போல ஒரு முன்மாதிரி தலைவராகச் சொல்ல முடியுமா என்ன?

*அடால்ஃப் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளும் கடைசி நாள் வரை பூமியில் மிகவும் பிரபலமான நபராக இருந்தார். எனவே, அவரது பிரபலத்தின் அடிப்படையில், அவர் ஒரு நல்ல தலைவர் என்று சொல்ல முடியுமா? பிசாசின் ஆளுமை இருந்தாலும் அவர் மிகவும் பிரபலமான நபரா?  

*ஜெர்மன் பள்ளிகளில், மாணவர்கள் ஹிட்லரைப் புகழ்ந்து கவிதைகளைப் பாடுவார்கள்;  அப்போது அடால்ஃப் ஹிட்லர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படங்களைச் சேர்ந்து எடுத்துக் கொண்டார். அப்படி அவர் செய்தது  அவரை அன்பான தந்தையின் உருவமாக மாற்றிவிடுமா என்ன?


இதற்கு எல்லாம் ஆமாம் என்று நீங்கள் சொன்னால் தாடிஜியும் ஒரு கிரேட் லீடராக இருப்பார் இல்லை என்றால் அவரும் ஒரு ஹிட்லரின் வாரிசாகத்தான் இருப்பார்


அன்புடன்

மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.