Sunday, March 5, 2023

 Constipation' க்கும்  'Constitution க்கும் வித்தியாசம் தெரியாதவர்தான் இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல்


Indian army  Major General @Maj Gen Harsha Kakar. He doesn't know the difference between constipation and constitution


 




ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய போது பாரதமாகிய இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்ற விதத்தில் பேசி இருக்கிறாராம், அப்படிப் பேசிய ராகுலை இந்த  மேஜர் ஜெனர ராகுலை  ஆண்டி இந்தியன் என்று சொல்லி இருக்கிறார்..

இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம். இது இந்திய அரசியலமைப்பின் முதல் வரி.  இது கூட தெரியாதவர் எல்லாம் எப்படி மேஜர் ஜென்ரலாக  பதவி வகித்து வந்தார் என்று தெரியவில்லை. எப்படி ஐபிஎஸ் அண்ணாமலை 20000 புத்தகங்கள் படித்தார்   என்று உளருவது போல இவரும்  உளறி இருக்கிறார்.. இராணுவத்தில்  பதவி வகித்தவர்  அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது மிக அவசியம் ஆனால் அவர் அவருக்கான  கோட்டை தாண்டி  வந்து தேவையில்லாத அரசியல் பேசும் போது அவருக்கு நாம் பதில் அடி தரத்  தயங்கக் கூடாது.
  



இராணுவ ஜென்ராலாக இருந்து ரிட்டையர்ட் ஆனவுடன் நல்ல  பதவிகளைப் பெற வேண்டும் என்று எண்ணி தங்களை ‘தேசியவாதிகள்’ என்று அழைத்துக் கொள்ளும் இப்படிப்பட்ட அறிவுஜீவிசங்கிகள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவின் முதல் பகுதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியாத மடசாம்பிராணிகளாக இருக்கிறார்கள்



இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம்.  இதைப் புரிந்து கொள்ளப் பெரிய படிப்பு எல்லாம் படித்து இருக்க வேண்டியதில்லை

  



இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று சங்கிகள்  உங்களால் புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை அல்லது  விளக்க முடியவில்லை என்றால், நமது பொருளாதாரத்தின் பலவீனமான நிலையை நீங்கள் எப்படி  புரிந்து கொள்ள முடியும் அல்லது விளக்கத் தான் முடியும்!?


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. நம்ம ஜி-யே படிக்காத தற்குறி தான்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.