Saturday, March 4, 2023

 பாஜக பரப்பிய வதந்தி! ஒன்றுபட்ட தமிழக மக்கள்! கதறும் வட இந்திய ஊடகங்கள்!! 

@avargal unmaigal




பாஜகவிற்கு  தனக்கு ஆதரவு தந்து ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்த வடநாட்டவர்களுக்கு, வட நாட்டில் வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தி  நல்லது செய்யாவிட்டாலும் ,கெட்டது செய்யாமல் இருக்கலாம்.. ஆனால் அது அவர்களின் கொள்கையிலே இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான் . தமிழகத்திற்கு வந்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்து  ஹோலிபண்டிகையை  தங்கள் குடும்பத்துடன் கொண்டாட, தங்கள் மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினார்கள் இந்த வட மாநில உழைப்பாளிகள் .

இந்த சந்தர்ப்பத்தை தவறாகப் பயன்படுத்தி  மக்களிடையே குழப்பத்தைக் கலவரத்தை ஏற்படுத்தி, அதில் குளிர் காணச் செய்ய ,இந்த சதிகார பாஜக செயல்படுகிறது.  பாஜகவும் சரி ஆர்.எஸ்,எஸும் சரி அவைகள் தனித்து இயங்குவதில்லை. ஒட்டுமொத்த  செயல்(சதி)திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவைகள் இயங்கும்.

பீகார் மாநில பாஜக தமிழ்நாட்டின்மீது, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக  வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவது திட்டமிட்ட சதிசெயலின் ஒருபகுதியே....அவர்களின் அரசியலே தமிழ்நாட்டைத் தப்பா காட்டவேண்டும், குழப்பம் பண்ணவேண்டும் அதில் அரசியல் செய்யவேண்டும்.  வோட்டுகளை பெறவேண்டும் ஆட்சியில் தாம் மட்டுமே அமர வேண்டும்
  
@avargalunmaigal



அதை வடமாநிலத்தவர்கள் அறிகிறார்களோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் வந்து கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் அதை நம்பப் போவதில்லை என்பது நிச்சயம்..இந்தியாவில் எந்த மாநிலத்தையும் விடத் தமிழகம் தான் பாதுகாப்பானது. அதனால் தான் இவ்வளவு மக்கள் ரயில் ஏறி இங்கே வருகிறார்கள்

அழிக்க நினைப்பவன் ஒரு நாள் அழிக்கப்படுவான் அவன் அய்யோன்னு போவான் என்பது மட்டும் நிச்சயம்

.இந்த விஷயத்தில் தமிழ் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து  நின்று அடிப்பாங்க .அடிக்கிறாங்க

தமிழ மக்கள் அடிக்கும் விஷயம் வெளியானது, இந்த விஷயத்தில் தமிழக பாஜக இது  வதந்திதான் என்று பூசி மொழுகினலும் அந்த வதந்தியைப் பரப்பிய அவர்கள் கட்சியைச் சார்ந்த பீகார் மாநிலத்தவர்களைக் கண்டித்து ஒரு அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய பாஜக தலைவர்களிடமும் கோரிக்கையும் வைக்கவில்லை

அப்படிச் செய்தால் அது தேசிய தலைவர்கள் மீது குற்றம் சுமற்றியது மாதிரி ஆகிவிடும் என்பதால்  பூசி மொழுகினால் போல் அறிக்கைகள் விடுகிறார்கள். காரணம் இந்த செயல்களை, வோட்டை அறுவடை செய்வதற்காகத் தூண்டி விடுவதே இந்த தலைவர்கள் தானே.

 
@avargal unmaigal



தேசப்பற்று என்று நொடிக்கு நொடி கூவும் இந்த தலைவர்கள்தான். மாநிலங்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய முனைகிறார்கள். இவர்களை தலைவர்கள் என்பதை விட கயவர்கள்தான் என்று அழைக்க வேண்டும்

சென்ற வாரம் நடந்து முடிந்த தேர்தலில் தங்களுக்கு வோட்டுப் போடாத ஹிந்துக்களின் வீட்டிற்கு நடக்கும் நிலையைப் பாருங்கள்..இவர்கள் தாங்கள் ஆட்சியில் அமர்வதற்காக என்ன வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள்
 
 
After Hindu supremacists captured power in Tripura, India!



இது எல்லாம் நம் பிரதமருக்குப் பிரச்சனைகள் இல்லை.. ஒரு வெளிநாட்டு அமைச்சர் தன் அருகில் உட்காரவில்லை என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது போல.  இந்த மனுஷனின் பொறாமை தீயில் அவரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கருகிப் போனாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை..
 

 




தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் 12 பேர் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்று  தவறான தகவலைப் பரப்பியதற்காக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழக காவல்துறை முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளனர்.





அன்புடன்
மதுரைத்தமிழன்



04 Mar 2023

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.