Sunday, October 27, 2019

@avargalunmaigal

இந்தியர்களை பார்த்து இறைவன் சிரிக்கும் நேரமிது....


 திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ் துளை கிணற்றில் ஒரு 2வயது குழந்தை விழுந்து உயிருக்கு மன்றாடிக் கொண்டு இருந்தது மிகவும் ஒரு துயரமான சம்பவம்தான் அதுவும்  தங்கள் கண் முன்னால் தாங்கள் பெற்ற குழந்தை  குழிக்குள்  இருப்பதும்  அந்த குழந்தையை காப்ப்பாற்ற  தங்களால் எதுவுமே செய்ய முடியாமல்  அழுது கையை பிசைந்து கொண்டு இருக்கும் சூழல் மிகவும் கொடுரமானதுதான்  அந்த பெற்றோரின் மனநிலை எப்பிடி இருக்கும் என்று நினைத்தாலே நம்  இதயமே பிளந்துவிடும்

இந்த சுழ்நிலையில் தமிழக அரசும், அதன் அமைச்சர்களும், அதன் கீழ் பணி புரியும் அதிகாரிகளும் தங்களால் முடிந்த முழு முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்  என்றாலும் அது என்னவோ பயனில்லாமல்தான் போய் கொண்டிருக்கிறது இப்போது 50 மணிநேரத்தை கடந்துவிட்டது ஆனாலும் இன்னும் பலர் நம்பிக்கையுடன் பிரார்த்த்னை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்ம்பிக்கை வெற்றி பெறுமானால் அது எல்லோருக்கும் மிக சந்தோஷம்தான்..


ஆனால் என்னை பொருத்தவரை குழந்தை விழுந்து  15 மணிநேரத்திற்கு அப்புறம் நடக்கும் செயல்களையும் அரசு செய்யும் முயற்சிகளையும்  அந்த சிறுவனின் வயதையும் விழுந்த  ஆழத்தையும் பார்க்கௌம் போது எனக்கு சிறு அளவில் கூட அந்த குழந்தை பிழைக்கும் என்ற நம்பிக்கை சிறிதளவு கூட இல்லை..


ஆனால் பல மக்கள் இன்னும் நம்ம்பிக்கையுடன் #savesurjith  என்று பிரார்த்திக்கும் போது இறைவன அவர்களை பார்த்து சிரிப்பது போலத்தான் இருக்கிறது அதாவது முட்டாள் மக்களே எவ்வளவோ தடவை இது மாதிரி நடந்தும் உங்களுக்கு அறிவே வரவே இல்லை உங்களுக்கு நல்லபடியாக பாடம் புகட்ட வேண்டுமென்றுதான் இப்போது இந்த தடவை இந்த சிறுவனின் உயிரை பறித்து உங்களிடம் இப்படி பரபரப்பாக நாடகமாடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த நாடகம் கூட் வருங்காலத்தில் பல உயிர்கள்  இது போல போய்விடக் கூடாது என்பதற்காக ஒரு சிறு உயிரை பலி வாங்கி இருக்கிறேன். இப்போதுதாவதௌ அதை பார்த்து புரிந்து கொண்டு வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்துவிடக் கூடாது என்று நீங்கள் நினைத்து பொறுப்புடன் செயல்படுங்கள்.


நாட்டில்  தலைவர்கள்  அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பொறுப்பற்ற முறையால் இப்படி  குழந்தைகள் குழியில் விழுந்து மட்டுமல்ல பசியாலும் பஸ்  ரயிவே க்ராஸிங்க் ஸ்ப்பீடு பைக்கிங்க் குழந்தைகளின் கைக்கு எட்டும் தூரத்தில் கெமிக்கல்ஸ் பாட்டில்களை பாத்ரும்மில் கிச்சனில் வைப்பதன் மூலமாகவும்  அதிக அளவு பள்ளி பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது ,  ஒன்வேயில் பைக்கை ஓட்டி செல்வது  லஞ்சம் வாங்கிக்கொண்டு பள்ளி பஸ்ஸுக்கு சான்றிதழ்  வழங்குவது பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதும பைக்கில் கணவன் மனைவி குழநதைகள் மற்றும் கடையில் வாங்கிய பொருட்களுடன் செல்வதன் மூலமும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அப்படி இறக்கும் குழந்தையின் உயிர்களுக்கும் இந்த சுர்ஜித்தின் உயிரைப் போலவே மதிப்புக்கள் உண்டு

அதானால் சொல்லுகிறேன் இந்த வாட்ஸப் டிவி சீரியல்கள்  டிக்டாக் மற்றும் சமுக வலைத்தளங்களில் அதிக நேரம் செல்வழிப்பதற்கு பதிலாக உங்கள் குழந்தைகளின் பாதுக்காப்பிற்காக அந்த நேரத்தை செல்வழியுங்கள் அதன் பின் போராளிகளாக சமுக இணையதளங்களில்  #savesujith பதிவிடுங்கள்..


இன்று #savesujith என்று மீண்டும் பதிவிடுவதற்கு முன்பு உங்கள் வீட்டில் அல்லது உங்கள் தெருவில் அல்லது ஊரில் குழந்தைகள் பாதிக்கக்படும் நிலையில் இருப்பது ஏதுவாக இருந்தாலும் அதை கண்டு சீர் திருத்த முயலுங்கள்

இன்று கூட ஒரு செய்தி படித்தேன் விஜய் நடித்த பிகில் திரைப்படம் காண் அதிக ஸ்பீடில் பைக்கில் சென்றதால் அதில் சிக்கி ஒரு சிறு குழந்தை உயிர்விட்டது என்று அதுவும் உயிர்தான் மேலும் ஆக்ஸிசன் இல்லாமல் உபியில் இறந்த பல குழந்தைகளின் உயிரும் ஒன்றுதான்..


ஹாஸ்பிடலில் ஆக்ஸிசன் இல்லாமல் இறந்த இந்த நாட்டில் குழிக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற் நவீன சாதனங்கள் இல்லாமல் இருஒப்பது ஒன்றும் அதிசியம் இல்லை அதனால் பொதுமக்களாகிய நீங்கள்தான் உங்கள் குழந்தைகலி பொறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் வளர்ரக்க முயலவேண்டும்


அதை செய்யாவிட்டால் நீங்கள் #savesurjith என்று பிரார்த்த்னை செய்தால் இறைவன் சிரிக்கத்தான் செய்வான்

கொசுறு :

குழி தோண்டினால் மூட மாட்டோம்

குழந்தை குழியில் விழுந்துவிட்டால் எந்தவித பயிற்சியும் அற்றவர்களை குழந்தையை மீட்க அனுப்புவோம்

அவர்களின் முய்ற்சி தோல்வியுற்றால் பேரிடர் குழுக்களை 15 மணி நேரம் கழித்து அனுப்புவோம்

 அந்த பேரிட குழு குழந்தையை காப்பாற்ற அல்ல பிணத்தை கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைக்கும்

இது புரியாமல் குழந்தையை காப்பாற்று என்று சமுக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி முதல் இடத்தில் கொண்டு வந்துவிட்டால் குழந்தை பிழைத்து விடும் என்று முட்டாள்தனமாக நம்பும் மக்கள்


இவர்களை எல்லாம் நினைத்து வேதனை பாடுவதா அல்லது சிரிப்பதா என்று நினைக்கும் நேரத்தில் அந்த சிறுவனின் வேதனைகள்  நம் மனக் கண்ணில் தோன்றி நம் இதயத்தை சுக்கு நூறாக்கி கொண்டு இருக்கின்றன



நம்பிக்கை சிறிதும் இல்லை இவர்கள் குழந்தையை காப்பாற்றுவார்கள் என்று....................



அன்புடன்
மதுரைத்தமிழன்
27 Oct 2019

3 comments:

  1. நம் நாடே ஏதோ நம்பிக்கையில் தன் இருக்கிறது

    ReplyDelete
  2. மிக மிக சரியான கருத்து. என்ன சொன்னாலும் யாரும் திருந்த மாட்டார்கள். மீடியா அதை விட.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.