இந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன?
என் வீட்டிற்கு தன் குழந்தைகளுடன் வந்த மைச்சினியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரின் குழந்தை போனை வைத்து விளையாடும் போது இந்த கால குழந்தைகள் எல்லாம் மிக ஸ்மார்ட் நாமெல்லாம் அந்த காலத்தில் இப்படி ஸ்மார்ட்டாக இல்லை என்று பேச்சின் போது சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து இந்த கால குழந்தைகள் எல்லாம் நீ சொல்வது போல ஸ்மார்ட் இல்லை ஸ்மார்ட் போனை அவர்கள் மிக எளிதாக உபயோக்கிப்தால் இந்த காலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளை மிகவும் ஸ்மார்ட் என்று பெருமை அடிக்கிறார்களே தவிர அதில் உண்மை ஏதும் இல்லை..
இந்த கால ஸ்மார்ட் போனின் பயன்பாடுகள் மிகவும் user friendly Interface design மூலம் தாயாரிக்கப்படுகிறது (
User Interface (UI) Design focuses on anticipating what users might need to do and ensuring that the interface has elements that are easy to access, understand, and use to facilitate those actions. UI brings together concepts from interaction design, visual design, and information architecture.) இப்படி தாயாரிக்கப்படும் பொருட்களால் இந்த கால குழந்தைகள் அதை பயன் படுத்துவது மிக எளிதாக இருக்கிறது இதை வைத்து உடனே இந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் என்று சொல்வது தவறுதானே என்று கேட்டேன்.
அந்த கால குழந்தைகள் படிக்கும் போது புரியாத பகுதிகளுக்கு விளக்கம் தேட கோனார் நோட்ஸை மட்டும் பயன்படுத்துவார்கள் ஆனால் இந்த காலத்தில் இண்டர்னெட் வந்தவுடன் அதில் எல்லா விபரங்களும் மிக எளிதாக கிடைக்கின்றது இருந்த போதிலும் அவர்களுக்கு சொல்லித் தர ஆசியர்களை நியமிக்கிறார்கள் பெற்றோர்கள்.. குழந்தை புத்திசாலியாக இருந்தால் நெட்டில் இருப்பதை படித்து அல்லது வீடியோவாக பார்த்து அறிந்து கொள்ளலாமே ? ஸ்மார்ட் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ட்யூசன் ஆசிரியர்கள் எதற்கு?
ஸ்மார்ட் என்று சொல்லப்படும் இந்த கால குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கால குழந்தைகளை ஸ்மார்ட் என்று சொல்லுகிறார்கள் அப்படியென்றால் ஏன் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மோட்டிவேஷன் பேச்சாளர்களை கொண்டு அவர்களை மோட்டிவேட் பண்ணவேண்டும்... அந்த கால குழந்தைகள் எல்லாம் இப்படி மோட்டிவேட் பேச்சை கேட்டா வளர்ந்தார்கள். அப்படி ஏதும் இல்லாமல் இன்று உலகெங்கும் அவர்கள் கொடி கட்டி பறக்கவில்லையா என்ன?
இந்த கால குழந்தைகள் மிகவ்ய்ம் ஸ்மார்ட்டாம் ஆனால் பிரச்சனைகள் என்று வரும் போது அதனை சமாளிக்க தெரியாமல் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கல் இல்லையென்றால் போதை வஸ்துவை நாடுகிறார்கள் இல்லையென்றால் சைக்காலீஸ்ட்டை நாடுகிறார்கள்... அந்த கால குழந்தைகள் பிரச்சனைகளோடு போராடி வாழ்ந்து காண்பித்தார்கள்
அந்த கால இளைஞ்சர்கள் சமுக பிரச்சனைகளுக்காக் குரல் கொடுத்து அஞ்சாமல் போராடினார்கள் ஆனால் இந்த கால குழந்தைகள் போராட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் பேஸ்புக்கில் தங்களை போராளியாக காண்பித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த கால ஸ்மார்ட் குழந்தைகளுக்கு அடுத்தவர்களின் கண்களை பார்த்தது கூட பேச தைரியமில்லாதவர்களாகத்தான் ரும்மிற்குள்ளே அடைந்து செல்போன் மூலம் வெளியுலகை பார்த்து கொண்டிருக்கிறார்கள் இதைத்தான் இன்றைய பெரியவர்கள் ஸ்மார்ட் என்று கருதி கொண்டிருக்கிறார்கள்
நம்முடைய தாத்தா பாட்டியின் வாழ்க்கையில் இல்லாத தொழில்நுட்பத்தை இன்றைய குழந்தைகள் பயன்படுத்துவதால் மட்டும் நாம் அவர்களை தாத்தா பாட்டியை விட புத்திசாலி என்று அர்த்தமா கொள்ளலாமா என்றால் இல்லை என்றுதாம் சொல்லாம்
நமது எங்கள் பெற்றோரின் தலைமுறையுடன் ஒப்பிடும்போது, கற்றலை மிகவும் எளிதாக்கும் கூகிள் மற்றும் பல சோர்ஸ்கள் இப்போது இன்றைய குழந்தைகளின் கையில் உள்ளதால் கற்றுக் கொள்ளும் முறை மிக எளிதாக இருக்கிறது
இன்றைய டெக்னாலஜியும் கற்றுக் கொள்ளும் முறையும்தான் இந்த கால குழந்தைகளை ஸ்மார்ட்டாக காண்பித்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை
கொசுறு :
யாராவது ஒருவருக்கு நம்முடைய சிறு புன்னகை சந்தோஷத்தை தரலாம், அதுவும் மற்ற நாட்டவர்களை பார்த்து புன்னகை செய்தால் அவர்களுக்கு சந்தோஷம் தரும் ஆனால் எதிரில் வரும் இந்திய பெண்களை மட்டும் பார்த்து புன்னகைக்க கூடாது அது அவர்களுக்கு சந்தேகத்தை கொடுக்கும் #FactVerified
அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆஆஆ மைத்துனியைப் பார்த்ததும் ட்றுத்துக்கு தத்துவமாக் கொட்டியிருக்குதே ஹா ஹா ஹா.
ReplyDeleteஇந்தக் காலமும் சரி அந்தக் காலமும் சரி.. குழந்தைகள் எனில் ஸ்மார்ட்தான், ஆனாலும் ஒரு வித்தியாசம், இந்தக்காலத்துக் குழந்தைகளைப் பெற்றோர் 90 வீதமும் சுகந்திரமாக நடமாட அனுமதிக்கின்றனர்.. அக்காலட்த்ஹில் இப்படி சுகந்திரம் இல்லை, பெற்றோரைப் பின்பற்றியே வாழும் சூழல்தான் இருந்தது.
இன்னும் சொன்னால், இப்போ எங்கட வீட்டில் கூட, ஏதும் டவுட்ஸ் இருந்தால் கேளுங்கோ சொல்லித்தருகிறோம் என்று சொன்னால், இல்லை கூகிளில் கண்டு பிடிச்சிட்டேன் என மட்ஸ் கூட கூகிளில்/சில வெப்சைட்டுகளில் மிகத் தெளிவான விளக்கத்துடன் கிடைக்கிறது.. நமக்கு வேலை மிச்சம்:)).
மைச்சினியை பார்த்தால் எல்லோருக்கும் கவிதை எழுத தோனும் ஆனால் என் மைச்சினிச்சியை பார்த்தால் தத்துவமாக வருதுனா என் சோகதையை யாரிடம் சொல்ல
Deleteஎன்னது குழந்தைகளின் டவுட்சை நீங்க க்ளியர் பண்ண முயற்சித்தீங்களா ? இனிமேல் அப்படி முயற்சிக்காதீங்க அப்படி செய்தால் உங்களுக்கு பதிலாக அவர்கள் தேம்ஸ் நதியில் குதித்துவிடுவார்கள்
// உங்களுக்கு பதில் அவர்கள் தேம்ஸ் நதியில்குதித்து விடுவார்கள் //
Deleteஹா... ஹா... ஹா.... கர்ர்...:(
அப்போ இலங்கை சிங்கப்பூர் மலேசியப் பெண்களுக்கு சந்தேகம் இல்லை எனச் சரியாச் சொல்லிட்டீங்க:)) ஹா ஹா ஹா..
ReplyDeleteஉண்மையில் எனக்கு எப்பவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என சந்தேகமே வருவதில்லை.. நம்பிடுவேன். என்னைப்பார்த்து ஆர் சிரிச்சாலும் சிரிக்காமல் விடமாட்டேன்ன்.. காசா பணமா புன்னகைதானே:))
அல்லது முறைச்சது கூடக் கிடையாது என் அகராதியில்.
சிங்கபூர் மலேசியா இலங்கை பெண்களை பார்த்து நாம் சிரிக்க வேண்டாம் அவங்களாக நம் முன்னால் வந்து வாலண்டியராக வழியோ வழியோன்னு வழிவாங்க உதாரணத்திற்கு உங்களை எடுத்துகோங்க
Deleteகாக்கைக்கு தன் குஞ்சுபொன் குஞ்சு அக்காலத்திலும் சரி இக்காலத்திலும்சரி
ReplyDeleteநீங்க சொல்வதும் சரிதான்
Deleteஹாஹ்ஹா :) ஆமா அந்த கொசுருலருந்து வரேன் :)ஹலோ இப்போ என்னாச்சுன்னு விளக்கமா சொல்லுங்க ட்ரூத் யாரைப்பார்த்து ஸ்மைல் பண்ணினீங்க :)சரி விடுங்க நம்மை நம்பாதவங்களை கண்டுக்க கூடாதது :)இதுக்காக புன்னகைப்பதை விடாதீங்க :)
ReplyDeleteநான் புன்னகைக்காமலே என்னை நம்பும் பெண்கள்தான் அதிகம்.....என்னை மிகவும் நல்லவன் என்று நம்புகிறார்கள் ஆனால் நான் மோசமான ஆளு என்று அவர்களுக்கு தெரியவில்லை... இந்த கொசுறு இங்குள்ள ஆண்கள் இந்திய பென்களை பற்றி சொல்லும் பொதுவான கருத்து
Deleteட்ரூத் மிக சரியா சொன்னிங்க அந்த ஸ்மார்ட் கிட்ஸ் பற்றி ..நாமெல்லாம் மனசில் கணக்குப்போட்டு மனப்பாடமா டைம்டேபிள்ஸ் சொன்னோம் .இப்போ பத்து கை /காலா விரலை வச்சி கவுன்டிங் சொல்றாங்க :)டைம்டேபிள்ஸும் மனப்பாடமில்லை .8x 8 =64 னு எவ்ளோ ஈஸியா சொல்வோம் இக்கால பிள்ளைங்களால் அது முடியாதே .
ReplyDeleteஎங்களுக்கும் ஸ்ட்ரெஸ் வந்திருக்கும் சிறுவயதில் ஆனா அதை பெரிதுபடுத்தவோ இல்லை இல்லாத சிண்ட்ராம்களை தலையில் போட்டுக்கவோ நமக்கு தெரில நம்ம பேரண்ட்ஸுக்கும் தெரியலை அதனால் நாமே முன்னேறினோம் .
இப்போ எல்லாமே ஆன்லைன் மகள் யூனிவெர்சிட்டியில் ..வகுப்புக்கு போக முடிலன்னா அப்படியே ரெகார்டெட் லெக்சர்ஸ் அவர்களுக்கு அனுப்பறாங்க ..க்ளாசில் உட்க்கார்ந்தாதானே கேள்வி கேட்க முடியும் ..
ஆதலால் ஸ்மார்ட் எல்லாம் நோ யூஸ் ..நாம தான் கிரேட் என்று சொல்லி முடிக்கின்றேன்
8x 8 =64 ////
Deleteசே சே சே எதுக்கு அஞ்சு பப்புளிக்கில உப்பூடி உங்கட வயசை எல்லாம் சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:)🤩
நாமெல்லாம் மனசிலே கணக்கு போட்டு மனப்பாடாமாக வாய்ப்பாடு ஒப்பிப்போம் என்று சொல்லி என்னையும் எதுக்கு இழுக்குகிறீங்க நானெல்லாம் அவ்வளவு அறிவாளி இல்லைங்க நாமதான் கிரேட் என்று முடிக்காமல் நாந்தான் கிரேட் என்று முடியுங்க என்னையும் கிரேட் லிஸ்டில் சேர்க்காதீங்க
Deleteஅதிரா எதற்கு கர் என்று சொல்லுறாங்க ஒரு வேளை 64 என்பது அவர்களின் வயதா என்ன?
Deleteடிஸ்கி ஹா ஹா ஹா மதுரை பரவால்ல அடி வாங்கினாலும் சிரிக்கணுமாக்கும்!!! தும்பம் வரும் வேளையிலும் சிரிங்க!! ஹா ஹா ஹா
ReplyDeleteநல்ல செம பதிவு...மதுரை. டிட்டோ செய்கிறேன். கோட் பண்ண முடியலையே....இந்த ஸ்மார்ட் ஃபோன் வந்ததிலிருந்து பல குழந்தைகளுக்கும் பெற்றோர் (இவர்களை நான் அறிவுள்ளவர்கள் என்று சொல்லவே மாட்டேன்) வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள்...ஹப்பாடா நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று ஏன் குட்டி பாப்பாஸ் கூட...பெருமை நீங்கள் சொல்லுவது போல என்னமா கண்டுபிடிக்கிறாங்க செம ஸ்மார்ட்..அப்படின்
ஆனால் அக்குழந்தை வெளியில் சென்று விளையாடுவதே இல்லை. இது முதல் பாயின்ட். ஃப்ரென்ட்ஸ் சர்க்கிள் அது ஒரு விதம்...எல்லாம் ஸ்மார்ட் கேம்ஸ் தான்..தொப்பை வளருது...குட்டி குழந்தைகளுக்குமே. கண் ப்ராப்ளம் வருது. ஆடிக்ஷன் வருது....
அடுத்து சோசியல் இன்டெராக்ஷன் முகம் பாராமலேயே...
எல்லாம் எளிதில் கிடைத்துவிடுவதால் யோசிக்கும் திறமை, மாற்றி யோசிக்க்கும் திறமை கேள்வி கேட்கும் திறமை, டீச்சர்ஸ் ஸ்டூடன்ட்ஸ் இன்டெராக்ஷன் என்று பல நெகட்டிவ்ஸ்...ஏன் பேரன்ட்ஸ் குழந்தைகள் இன்டெராக்ஷன் ..சுத்தம். அதுவும் வீட்டிலும் இரண்டு அல்லது ஒரே ஒரு குழந்தைதான்....முன்பு வரவேற்பரைக்குள் டிவி வந்து கெடுக்கிறது என்று கூவினோம் இப்போது கைக்குள்ளேயே வந்துவிட்டது!
வகுப்பு என்பது மிக மிக முக்கியம். அப்போதுதான் கலந்துரையாடல் என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாம் இருக்கும்.உளவியல் பிரச்சனைகள் இலலமல் இருக்கும். இன்னும் நிறைய சொல்லலாம்.
உங்கள் பாயின்ட்ஸ் அனைத்தும் மிக மிக சரியே...ஒன்று சொல்லலாம் ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் குழந்தைகளை இக்காலத்தில் வளர்ப்பது கொஞ்சம்கடினம் தான். எனவே அவற்றை எப்படிக் கையாள வேண்டும் எதற்கு மட்டும் கையாள வேண்டும் என்பதை ஸ்மார்ட் ஃபோனை ஸ்மார்ட்டாகக் கையாள பெற்றோர் கற்றுக் கொடுத்துவிட்டால் நல்லது. கத்தியின் பயன்பாடு போல.
நிறைய சொல்லலாம்....மதுரை தமிழன். நல்ல பதிவு..
கீதா
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொன்னீங்க அதனால அதிரா ஏஞ்சல் வரும் போது கண்டிப்பாக சிரிக்க்றேனுங்க சரிதானே
Deleteபதிவை படித்து பாராட்டியதற்கு நன்றி
Deleteமைச்சினியா மச்சினியா?!! மைத்துனி எனும் வார்த்தையோடு மச்சினியை சேர்த்து விட்டீர்களா?
ReplyDelete
Deleteஒரே குழப்பமாக இருக்கிறதே ஆமாம் எந்த 'னி' சரி?
கோனார் நோட்ஸ் தமிழ்ப் பாடத்துக்கு மட்டும்தான். ஆங்கிலத்துக்கு பாப்புலர் நோட்ஸ்!
ReplyDeleteஆஹா இப்பதானே எனக்கு புரிகிறது நான் எத்ற்கு ஆங்கிலத்தில் மிக குறைந்த மார்க் வாங்கினேன் என்று... நான் ஆங்கிலத்திற்கு கோனார் நோட்ட்சை வாங்கி படித்து இருக்கிறேன் போல உங்களை போல பாப்புலர் நோட்ஸ் வாங்கி இருந்தால் ஆங்கிலத்தில் சென்டம் வாங்கி இருப்பேன் ஹும்ம்ம்ம்
Deleteஅந்தக் காலகுழந்தைகள் எப்படியோ, கிட்டத்தட்ட அதேபோலத்தான் இந்தக்காலக் குழந்தைகளும்.. வாய்ப்புகளும், வசதிகளும் அவர்களுக்கு உதவி புரிகின்றன. அதே சமயம் கடந்தகாலத்தை விட நிகழ்காலக் குழந்தைகள் எப்பவுமே கொஞ்சம் முன்னேறிய அறிவில் இருப்பதும் நிதர்சனமே, சாத்தியமே...
ReplyDeleteவாய்ப்பும் வசதியும் இருப்பதால் அறிவியலில் முன்னேறி இருக்கலாம் ஆனால் அறிவில் இல்லை என்பதுதான் என் கருத்து
Deleteமைச்சினி - என்று ஒன்று கிடையாது. மைத்துனர், மைத்துனி. அல்லது கலோகியலா, மச்சினர், மச்சினி.. இப்படி இரண்டையும் கலந்து படிக்க ஒரு மாதிரி இருக்கு
ReplyDeleteஸ்மார்ட் என்பதற்கு அர்த்தம் வேறு. இந்தக் காலப் பசங்களுக்கு டூல்களை உபயோகிக்கத் தெரிவதால் சட் சட் என்று சுலபமான தீர்வைக் கண்டுபிடிக்கறாங்க. முன்ன ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கணும்னா, நாம எங்க எங்க போய்ப்பார்க்கணும் என்றெல்லாம் யோசிப்போம். 18 வயசானவங்ககூட என்ன என்ன பிராண்ட் இருக்கு, எங்க வாங்கினா காசு மிச்சம் பண்ணலாம். வாரண்டி என்ன, ரெவ்யூ எப்படி இருக்கு என்றெல்லாம் சட் சட் என்று கண்டுபிடித்து நமக்குச் சொல்றாங்க. நெட்ல பார்த்து வித வித உணவுகளை பண்ணறாங்க. நிறைய விதத்தில் டூல்ஸை நல்லா உபயோகிக்கறாங்க. அந்த வகைல, அவங்க ஸ்மார்ட்தான்.
ReplyDeleteஆனா 'படிப்பில் ஸ்மார்ட்' என்பது வேறு. அது படித்தால்தான் வரும். நம்ம காலத்திலும் ஏகப்பட்ட அறிவாளிகள் இருந்தாங்க. இப்போவும் இருக்காங்க.
அனுபவம் என்பதும் வேறு. அது வாழ்க்கையில் அடிபட்டு புரிந்துகொண்டு அனுபவம் பெறும்போதுதான் வளரும்.