Friday, October 18, 2019

விருந்திற்குப் போகும் போது இப்படி எல்லாம் உங்களுக்கு நேர்ந்து இருக்கிறதா?


சில நேரம் நாம் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்குப் போவோம்...அப்படிப் போன இடத்தில் அந்த நண்பர்கள் தங்களின் குழந்தையின் திறமையைப் புகழ்ந்து பேசுவதோடு.. உடனே அவர்களின் திறமைகளை நம் முன்னால் வெளிப்படுத்த முயல்வார்கள் உதாரணமாக அவர்களின் குழந்தை பியானோ கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கும்.. உடனே அவர்களைக் கூப்பிட்டுத்  தம்பி மாமா முன்னால் நீ பியானோவை வாசித்துக் காட்டு ஈன்று பெருமையாக சொல்லுவார்கள் உடனே அந்த குழந்தையும் டிவிங்க்ள் டிவிங்கள் லிட்டில் சார் என்ற பாட்டை மிக கடூர கொடுரமாக் வாசித்துக் காட்டும் அப்படி வாசித்துக் காட்டிய பின் நம் காதிலிருந்தும் கண்ணிலிருந்து ரத்தம் வழிந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டுக் கைதட்டி அருமை மிக  நன்றாகக் குழந்தை வாசிக்கிறது என்று பாராட்டுவோம்


அது போல அந்த வீட்டுக் குழந்தைகள் கர்நாடக சங்கீதமோ அல்லது பரத நாட்டியமோ அல்லது வயலினோ எதாவது ஒன்று கற்றுக் கொண்டிருக்கும் அதையும் மேலே சொன்னது போல நம் முன்னால் திறமையை வெளிக்காட்டுவார்கள் அது மிக சுமாராக இருந்தாலும் நாம் சாப்பிடப் போகும் விருந்திற்காக அதைப் பாராட்டி பேசிதான் ஆக வேண்டும் அதுதான் மரியாதை..

சரி அதையாவது குழந்தைகள் என்று விட்டுத் தள்ளலாம்... ஆனால் விருந்திற்கு என்று பலரைக் கூப்பிட்டுவிட்டு மிகக்       குறைந்த அளவு உணவுப் பொருட்களை வைத்திருப்பார்கள் சிலர். அதைப் பார்த்த பின் நாம எடுத்து சாப்பிட்டால்  மற்றவர்களுக்கு இருக்குமோ இல்லையோ என்று தோன்றும் அதனால் மிக சிறிய அளவில் எடுத்து உண்போம் இது போலத்தான் அனைவரும் செய்வார்கள்.. உடனே விருந்திற்கு அழைத்தவர் கூச்சப்படாமல் வேண்டியதை எடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்று சொல்லும் போது அடேய் நக்கிற அளவிற்கு வைத்துவிட்டு நல்லா எடுத்துச் சாப்பிடுங்கள் என்று சொல்ல எப்படிடா உங்களுக்கு தோன்றுகிறது என்று  மனது நினைத்தாலும் இல்லப்பா நான் நிறைய சாப்பீட்டுவிட்டேன் வய்று நிறைந்து போச்சு என்று பொய் சொல்லுவோம்

இப்படிப்பட்ட கொடூரம் எல்லாம் எனக்கு மட்டும்தான் நேர்ந்திருக்கிறதா அல்லது உங்களுக்கும் நேர்ந்து இருக்கிறதா?



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நடக்காமல் இருக்குமா?  குழந்தைகளை அவர்கள் அப்படி படுத்தும்போது தெருவில் குரங்கானுவித்தை காட்டுவார்களே...    அது நினைவுக்கு வரும்.

    ReplyDelete
  2. அதுவும் நம்முடன் இருக்கும் சிலர் ஆஹா ஓஹோ என்று புகழும்போது நாம் புகழா விட்டால்  ஞானசூன்யமாகவோ,  பொறாமைக்காரனாகவோ காட்சியளிக்கும் அபாயம் வேறு.

    ReplyDelete
  3. நட்பில் இல்லை,  ஒரு உறவு செய்திருக்கிறது இதுபோல...  நான் மட்டும் சாப்பிடும் அளவை (நோ நோ அப்படிப் பார்க்காதீங்க...   நான் அப்படி சாப்பிடற ஆள் இல்லை)  ,நான்கு பேர்களுக்கு என்று சொன்னபோது நொந்துபோய் விட்டேன்.  மான் துணைமானுக்கு தண்ணீர் விட்டுக்கொடுக்குமாமே...   அதுபோல சாப்பிட்டு விட்டு எழுந்தால் "பார்த்தியா...நான் அளவு தெரியாமல் நிறைய செய்துவிட்டேன்...    நிறைய மீந்து விடுகிறது" என்று அந்த உறவு சொன்னபோது....

    வரும்வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவந்தேன்!

    ReplyDelete
  4. ஹயோ மதுரை அதை ஏன் கேக்கறீங்க...எனக்குப் பிடிக்காத விஷயம் அது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காட்சிப் பொருட்களாகக் காட்டி பெருமைப் பட்டுக் கொண்டு, மற்ற குழந்தைஅள் எல்லாம் ஏதோ ஒன்றுமே தெரியாதவர்கள், பெற்றோர் நாம் சரியாக வளர்க்கவில்லை என்பது போலவும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    அப்படியான உறவுகள் வீட்டிற்கும், நட்புகள் வீட்டிற்கும் நான் தனியாகப் போய்விடுவேன் என் மகனை அழைத்துச் செல்வது அபூர்வம். அவன் ஏற்கனவே படிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் அப்போது. அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது என்று அல்லது அழைத்துச் சென்றாலும் அவனை அதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது உன்னாலும் முடியும் இன்று இல்லைனா நாளை என்று சொல்லி அழைத்துச் செல்வது வழக்கம். எல்லோருக்கும் அவரவர் குழந்தைகள் + எல்லாக் குழந்தைகளுமே தங்கமான குழந்தைகள்தான்.

    மகனைப் பற்றி சொல்லும் ஒரே நேரம் ஏதேனும் குழந்தை கற்றலில் குறைபாடு உள்ளக் குழந்தையாக இருந்தால் அவர்கள் வருத்தப்பட்டால், குழந்தையை திட்டினால் அப்போது மட்டும் அதுவும் பெருமையாக இல்லாமல் அக்குழந்தையைத் திட்டக் கூடாது என்று எப்படிக் கொண்டுவரலாம் என்பதற்கு மட்டுமே என் மகனும் அப்படித்தான் இருந்தான் என்று ஊக்கப்படுத்திச் சொல்வதற்கு மட்டுமே.

    கீதா

    ReplyDelete
  5. குழந்தைகளைப் பல பெற்றோர்கள் எங்கரேஜ் செய்கிறேன் என்று ஓவராக பூஸ்ட் பண்ணி பிரகடனப்படுத்தி அக்குழந்தையை குழந்தையாக இருக்க விடாமல் ம்ம்ம்ம் என்ன சொல்ல..

    சாப்பாடு விஷயமும் ஹையோ நாம சாப்பிடணுமா என்று வேண்டாம் சாப்பிட வேண்டும் போல இல்லைனு சொல்லிட்டும் வரும் நிகழ்வுகளும் உண்டு.

    ஸ்ரீராமின் மூன்று கருத்துகளையும் டிட்டோ செய்கிறேன்..

    கீதா

    ReplyDelete
  6. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு

    ReplyDelete
  7. முதல்ல சொன்னதை நான் அவதானித்திருக்கிறேன். 'எங்கே மாமாவுக்கு ஒரு பாட்டுப்பாடு, இல்லைனா.. அந்த ரைம் சொல்லு... அந்த ஸ்லோகம் சொல்லு' என்று படுத்துவார்கள். நமக்குமே கஷ்டமாக இருக்கும்...வேற வழியில்லாமல் அதைக் கேட்டு, போலிப் பாராட்டு ஒன்று சொல்லணும் என்று.....

    இன்னொன்று நான் பெரும்பாலும் யார் வீட்டிலும் சாப்பிடமாட்டேன். நல்லா இருந்தா, இன்னும் கொஞ்சம் என்று கேட்கத் தயக்கமா இருக்கும். வயிறு நிறையாமல் அப்புறம் வெளியில் சாப்பிடணும். இந்த வம்புலாம் தேவையா? எங்க போனாலும், நான் வெளில சாப்பிடறதில்லைன்னு சொல்லி தப்பிச்சுக்குவேன். சில வீட்டில் தோசை, சப்பாத்தி வார்த்தார்கள்னா, இன்னும் ரொம்ப கூச்சமாயிடும். கஷ்டப்பட்டு அடுப்புல நின்னு இதெல்லாம் செய்யணும் இல்லையா? அதுக்காகவே ஒன்று சாப்பிட்ட உடனேயே போதும்னு சொல்லிடுவேன். ஹா ஹா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.