துரோணச்சாரியரிடம் இருந்து ஏகலைவன் கற்றுக் கொண்டது போல எடப்பாடியார் கலைஞரிடம் இருந்து அரசியல் கற்றுக் கொண்டாரா என்ன?
சாணக்கியர் எனப்படும் கலைஞரிடம் ஸ்டாலின் பாடம் கற்றாரோ இல்லையோ ஆனால் தூர இருந்து எப்படி துரோணச்சாரியாரிடம் இருந்து ஏகலைவன் வில் வித்தையை கற்றுக் கொண்டாரோ அது போல எடப்பாடியார் கலைஞரிடம் இருந்து அரசியல் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது...
எடப்பாடியார் என்றவுடன் கேலியாக சசிகலாவின் காலில் விழுந்தவர்தானே என்று பலரும் கேலி செய்யலாம் ஆனால் அப்படி எடப்பாடியார் காலில் விழுந்தது வணங்குவதற்கு அல்ல சசிகலாவின் காலை வாரி விடுவதற்குதான் என்பதை காலம்தான் சொன்னது.....
எடப்பாடியார் ஒன்றும் ஸ்டாலின் மாதிரி தான் தலைவராக வேண்டும் என்று கட்சியின் மாவட்ட செயலாளர்களை டம்மி ஆக்கியும் முண்ணனி தலைவர்களையும் ஒதுக்கியும் வ்ரவில்லை எல்லோரையும் அணைத்து அரவணைத்து அரசியலில் காய்களை எப்படி நகர்த்தவேண்டுமோ அப்படி நகர்த்தியும் டெல்லியில் யாரிடம் தலைவணங்கினால் தன் வேலை நடக்குமோ என்று பார்த்து சாணக்கியதனமாக செயல்பட ஆரம்பித்தவர்..
அதுமட்டுமல்ல எடப்பாடியாருக்கு ஸ்டாலினை போல கலைஞரின் மகன் என்கிற அசுர அரசியல் பலம் கூட இல்லை அல்லது பன்னீர் செல்வத்தை போல ஜெயலலிதாவின் ஆதரவு பெற்று துனை முதல்வர ஆனவரோ அல்ல அவரும் கட்சியில் சாதாரண அமைச்சராகத்தான் இருந்தார் ஆனால் சந்தர்ப்பத்திற்கு காத்து இருந்தவர் போல கிடைத்த சந்தர்பத்தை சாணக்கியதனமாக பயன்படுத்தி தொடர்ந்து நிலைத்து வருகிறார்
ஸ்டாலினை போல அல்லாமல் எடப்பாடியார் தன் கட்சியில் உள்ள அனைவருக்கும் நல்ல சுந்தந்திரம் கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. இப்போது உள்ள அதிமுகவில் உள்ள மற்றைய அமைச்சர்கள் பேசுவதில் இருந்தே அவர்கள் எவ்வளவு சுதந்திரமாக அது முட்டாள்தனமாக இருந்தால் கூட அசாதரணமாக பேசிக் கொண்டு போகிறார்கள் அதை கண்டிப்பது கூட இல்லை எடப்பாடியார்..
ஆனால் அதே நேரத்தில் திமுகவில் துரைமுருகன் ஏதாவது பேசினால் ஸ்டாலின் அருகில் இருக்கும் போதுதான் பேசமுடியும் அப்படி அருகில் இல்லாத போது பேசி அதனால் பிரச்சனை ஏதாவது வந்தால் அவரை குறுக்கு விசாரணை செய்வது என்பது சபரிஷனாகத்தான் இருக்க முடியும் என்ற் நிலை திமுகவில் இருக்கிறது
ஸ்டாலின் பாஜகவை எதிர்ப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அது ஒரு பாசங்குதான் என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை... ஸ்டாலினை பொருத்தவரை மோடி மற்றும் அமித்ஷாவின் பார்வை தன் மேல் படாதா என்றுதான் ஏங்கி கொண்டிருக்கிறார் ஆசைபட்டுக் கொண்டிருக்கிறார்.. அப்படி ஒரு பார்வை தன் மீது விழுந்தால் தான் என்ன வேண்டுமானலும் அவர்களுக்கு செய்யவே காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை... இதை நன்றாக தெரிந்த எடப்பாடியார் அப்படி ஒரு பார்வை ஸ்டாலின் மீது விழுந்தால் த்ன நிலை என்னவென்று தெரிந்துதான் டெல்லிக்கு பூரண சராணகதி அடைந்து தான் நினைத்ததை இன்றுவரை சாதித்து கொண்டிருக்கிறார்
எடப்பாடியால் தமிழக மக்களுக்கு நன்மைகள் ஏதும் இல்லை என்றாலும் அவரால் அதிக அளவு பாதிப்பு ஏதும் இல்லை என்று மக்கள் நினப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது அதன் விளைவே இடைதேர்தலில் அதிமுகவீற்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் என கருத வேண்டியிருக்கிறது
ஜெயலலிதாவி இறப்பு மற்றும் அதை ஒட்டி அதிமுகவில் நடை பெற்ற நிகழ்வுகள் மக்கள் மனதில் ஒரு வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.. அந்த தருணத்தை ஸ்டாலின் திறமையாக கையாண்டு தன் கைவசம் கொண்டு வர தவறிவிட்டார்.... இனிமேல் அப்படி ஒரு அறிய சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்குமா எனப்து கேள்வி குறியே.. கிடைத்த சந்தர்ப்பத்தை எடப்பாடியார் பயன்படுத்தி கொண்டது போல ஸ்டாலினால் பயன்படுத்த முடியவில்லை என்பதை பார்க்கும் போது ஸ்டாலினிடம் கலைஞரின் சாணக்கியத்தனம் கொஞ்சம் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது
கலைஞசரிடம் கற்று கொள்ளாத பாடத்தை ஸ்டாலின் இனிமேலாவது எடப்பாடியாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ
ReplyDeleteநீங்க எழுதியிருக்கறதுல உண்மை இருக்கு, எடப்பாடியார்.. கருணாநிதியிடம் இவற்றைக் கற்றுக்கொண்டிருப்பார் என்று நினைத்ததைத் தவிர.
ReplyDeleteதமிழ்நாட்டுல, மழை பெய்தாலோ இல்லை கடலை விக்கிறவன் ஆக்சிடண்ட் ஆனாலோ, காலைல முதல் வேலையா ஒரு அறிக்கை வெளியிடுவார் கருணாநிதி. இதுக்காகவே எல்லாப் பேப்பரையும் அதிகாலையிலேயே படித்து அறிக்கை அனுப்புவார். அப்புறம் அதை மறுப்பதோ, குறை சொல்வதோ மட்டும்தான் ஆளும் கட்சியின் வேலையாயிருக்கும். இதை எதிர்க்கட்சியாக இருக்கும்போது சரியாகச் செய்வார் கருணாநிதி. அதுனாலதான் அவர் பேசும் பொருளா இருப்பார்.
ஸ்டாலினைப் பற்றி நினைக்கும்போது, 'சொல்லிக்கொடுத்த தெக்கினிக்கும் கட்டுச் சோறும் எத்தனை நாள் வரும்' என்ற நிலைமைதான். பாவம் அவர்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete