Tuesday, October 29, 2019

தப்பு செய்தவனுக்குத் தண்டனை தருவதற்குப் பதிலாகப் பரிசு தருவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடியது

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன.. ஆனால் இது போல் பல நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்தும்  நாட்டை ஆளும் அரசுகள் மெத்தனமாகவே இருக்கின்றன. இதற்குக் கட்சி வேறுபாடுகள் இல்லை....


அமெரிக்காவில் இதே நிகழ்வு 1987 ல் நடந்தது குழந்தை  58 மணிநேரத்திற்குப் பின்பு காப்பாற்றப் பட்டது குழந்தை பெற்றோரிடம் உயிரோடு கொடுக்கப்பட்டது அதே நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடந்திருக்கிறது  என்ன குழந்தைக்குப் பதிலாகப் பெற்றோர்களுக்கு லட்சக் கணக்கில் அரசு பணம் கொடுத்து இருக்கிறது. அமெரிக்க நாடும் மக்களும் சுயநல மிக்கவர்கள்தான் ஆனால் இந்தியர்களைப் போலப் பண வெறி பிடித்தவர்கள் அல்ல..

இப்போது சுர்ஜித்துக்கு நடந்த நிகழ்விற்குப் பின் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து எமர்ஜின்ஸிகால அடிப்படையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட  நடவடிக்கை எடுக்காமல்   அரசியல் சுயநலம் கருதி இறந்தவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசு பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்றது

பொறுப்புடன் தன் பிள்ளையையே பார்த்துக்கொள்ளாத பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அவர்களுக்கு லட்சக் கணக்கில் அதுவும் அரசு பணத்தை தன் சொந்த பணம் போல அள்ளிக் கொடுக்கிறார் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் சரி அவர்தான் அப்படி என்று பார்த்தால் அதைக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் அவர் பங்கிற்கு அவரும் லட்சத்தில் அள்ளிக் கொடுக்கிறார்  .  மக்களின் எமோசனலை தங்களின் சுயனலங்களுக்காக் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் வேற எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மிக நல்ல ஆஸ்டியை தருவேன் என்றும் ஸ்டாலின் சொல்லுகிறார். தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் இவரும் எடப்பாடியைப் போலவே செயல்பட்டால் எடப்பாடி ஆண்டால் என்ன ஸ்டாலின் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்


தண்டனை கொடுக்க வேண்டியவர்களுக்குத் தண்டனைக்குப் பதிலாகப் பணத்தை அள்ளிக் கொடுத்ததால் சுர்ஜித்தி அம்மா இப்போது சுர்ஜித்திற்கு கோவில் கட்ட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம் என்பதைப் பேட்டியில் சொல்லுகிறார்..


டேய் நீங்கள் எல்லாம் லூசா அல்லது தமிழக மக்கள்தான் லூசாடா?


 அமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான் சின்ன  நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன்...


 அமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான்  பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்...

எனது குடியிறுப்பு பகுதியில் நடந்த சம்பவம் இது.. எனது குடியிறுப்பு பகுதியில் மழை நீர் ஒடுவதற்காக சிறிய கால்வாய் ஒன்று உண்டு இதில் எப்போதும் அரை அடியில் இருந்து ஒரு அடிவரை தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கும் இந்த கால்வாயில் சிறு பாறைகளும் மரம் செடி கொடிகளும் உண்டு.. அந்த பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் இடு ஒடிக் கொண்டிருக்கிறது,,,, சம்பவம் நடந்த வீட்டின் பின்னால் பெரிய நிலப்பரப்பும் அதை ஒட்டி சற்று சரிவுடன் கூடிய இந்த கால்வாய் இருக்கிறது சம்பவதன்று  பக்கத்துவீட்டு பெண்மணியிடம் அந்த குழந்தையின் தாயார் நின்று பேசிக் கொண்டிருந்தார்.. அவரின் 2 வயது குழந்தையும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.. இந்த 2 பெண்மணிகளும் இந்திய பெண்மணிகள்தான்.. இந்த பெண்கள் பேச்சு சுவாராஸ்யத்தில் குழந்தையை கவனிக்கவில்லை . விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறி அந்த் கால்வாயில் விழுந்து இறந்துவிட்டது . சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய பெண்மணி கால்வாயில் அவரின் குழந்தையை  பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுக்க உடனே ஆம்புலன்ஸ் போலீஸ் அனைவரும் வந்து பார்த்து குழந்தை இறந்துவிட்டதை உறுதிபடுத்திவிட்டு உடனே அந்த பெண்மணியை குழந்தையை பொறுப்புடன் பார்த்து வளர்க்க தெரியாததால் கைது செய்ததுடன் வீட்டில் இருந்த மற்றொரு குழந்தையையும் நீங்கள் வளர்க்க தகுதி இல்லாதவர் என்று தூக்கி சென்றுவிட்டது.. அதன் பின் கணவர் வந்து நல்ல வக்கிலை அமர்த்தி வாதாடி நாங்கள் இந்தியாவிற்க்கே போய்விடுகிறோம் குழந்தையை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்  பேசி இறுதியில் குழந்தையுடன் இண்டியா சென்றுவிட்டார்கள்.


இங்கே எல்லாம் இப்படித்தான் இங்கு தண்டனைகள் கிடைக்கும் சில சமயங்களில் யாராவது குழந்தையை காரில் வைத்துவிட்டு அவசர அவரமாக கடையில் உள்ளே சென்று ஏதாவது வாங்க சென்று இருந்தால் அதை பார்த்து  யாரவது போலீஸில் ரிப்போர்ட் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோருக்கு தண்டனை கிடைப்பதுமட்டுமல்ல அவர்களின் குழந்தையை ஃபாஸ்டர் பேரண்ட்ஸ்சிடம் (Foster parents are people who officially take a child into their family for a period of time, without becoming the child's legal parents. The child is referred to as their foster child. 0கொண்டு போய்விட்டுவிடுவார்கள்
இந்தியாவில் அப்படி செய்யாமல் தவறு இழைத்த பெற்றோர்களுக்கு தண்டனை தறுவதற்கு பதிலால பரிசை கொடுத்தால் குற்றங்கள் கூடத்தானே செய்யும்..


சுர்ஜித்திற்கு நடந்த சம்பவம் போல அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது மிட்லேண்ட் நகரம். அங்கு 1987 ஆம் ஆண்டு ஜெஸிகா மெக்லியூர் என்ற ஒன்றரை வயது குழந்தை தன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. தாயின் கண்காணிப்பில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென வீட்டின் பின்னால் இருந்த மூடப்படாத 22 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.

உடனே  தாய் மீட்புக்குழுவிற்கு தகவல் சொல்ல, விரைந்து வந்தது தீயணைப்புத் துறை வாகனங்களும், மீட்புப் படையும். எளிமையாக மீட்டுவிடலாம் என நினைத்த மீட்புப்படைக்கு நம் ஊரைப் போலவே அங்கிருந்த பாறைகள் சவாலாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் அறிமுகமாகியிருந்த வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்கவாட்டில் துளையிட்டு மீட்புக்குழு வீரர் ஒருவர் உள்ளே இறங்கினார். கிட்டத்தட்ட 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜெஸிகா மெக்லியூர் உயிருடன் மீட்கப்பட்டாள். நாடே அதனைக் கொண்டாடியது. தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெஸிகாவிற்கு இப்போது வயது 33 ஜெஸிகாவை மீட்ட கையோடு நாட்டில் கவனிப்பின்றி கிடந்த அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் போர்க்கால அடிப்படையில் மூடியது அமெரிக்க அரசு. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அமெரிக்காவில் ., ஜெஸிகாவிற்கு பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளைக் கிணறு விபத்து கூட நிகழவில்லை...
சுஜித்தின் மரணத்திற்கு பிறகாவது விழிக்குமா இந்தியா


jessica mcclure america. ஜெஸிகா மெக்லியூர் என்று கூகுலில் சர்ச் செய்தால் முழுவிபரங்களை அறியலாம்



ஜெஸிகா மெக்லியூர் காப்பாற்றும் வீடியோ

Baby Jessica rescued from water well - local coverage 1987


When Baby Jessica was rescued from the well



அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. நீங்கள் சொன்ன கைது சம்பவம் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நண்பரே...

    உண்மைதான் பெற்றோர்களுக்கு தண்டனைதான் தரவேண்டும்.

    ReplyDelete
  2. Read http ://vijayanagar blogspot .com .நீங்கள் சொன்னதை மிகவும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்லி இருக்கும் அதே எண்ணங்கள் எனக்கு மட்டுமல்ல, நிறைய பேர்களுக்கு இருக்கிறது. 

    ReplyDelete
  4. இன்னொரு சம்பவம் தெரியுமா?  சுஜித் விஷயத்தை தொலைக்காட்சியில் அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் குழந்தை பாத்ரூமுக்குள் சென்று டப்பில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்திருக்கிறது.

    ReplyDelete
  5. பணத்தைக் கொடுத்து நம்மை குனிய வைத்து இருக்கும் புத்தியை இரண்டு கட்சி மட்டுமின்றி எல்லாக் கட்சியுமே செய்து கொண்டுதான் இருக்கிறது.
    தங்கள் வீட்டில் சிறுகுழந்தை இருக்க ஆழ்குழாயை மூடாமல் வைத்தது பெற்றோரின் தவறென எவருமே பேசவில்லை... பேனர் வைத்து அது வீழ்ந்து ஒரு பெண் இறந்தபோது பேனரை அடித்தவன் தவறெனச் சொன்னவர்கள் இவர்கள்.
    பணத்தை அந்தப் பெற்றோர் மறுத்திருக்க வேண்டும். பணமல்லவா பிள்ளை பற்றி கவலை எதற்கு...

    ReplyDelete
  6. உங்கள்பகிர்வு நியாயமானது.பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. மதுரைத் தமிழன் - ஸ்டாலின் 10 லட்சம் கொடுத்து அரசியல் செய்த பிறகுதான், வேறு வழியில்லாமல் அதிமுக கட்சி நிதி, மற்றும் அரசு நிதியை தமிழக அரசு கொடுத்தது. நம்ம ஊர்ல சீப் பாலிடீஷியன் இருக்கற வரை இப்படித்தான்.

    முதலில் அந்தப் பையனின் பெற்றோர்களை ஜெயிலில் போட்டு தண்டனை வாங்கிக்கொடுக்காமல், (சொந்த குழந்தையைக் கொன்ற குற்றத்திற்கு), இதில் அரசியல் செய்து, சிறுபான்மையினர் ஆதரவு என்றெல்லாம் பேசுவது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். இந்த லட்சணத்துல திருமா, 1 கோடி ரூபாய் அந்தப் பெற்றோருக்குக் கொடுக்கணும் என்று பேசுகிறார். இவங்கள்லாம் அரசியலிலிருந்து ஒழிந்தால் ஒருவேளை மக்கள் மனம் மாறுவார்களோ தெரியாது.

    ReplyDelete
  8. மேற்கத்தைய நாடுகளில் உள்ள சட்டம், மக்களின் ஒழுங்குபோல தமிழகத்தில் கனவில்கூட வரமுடியாது. இங்கு இருப்பதெல்லாம் சீப்பான அரசியல்வியாதிகளும், கல்வி அறிவு இல்லாத (ஆனால் தொலைக்காட்சியிலேயே வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்கள், டாஸ்மாக்கில் வாழும் ஆண்கள்) மக்கள் நிறைந்தது தமிழகம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.